தெற்காசியாவில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது

அமெரிக்கா தெரிவிப்பு

0 701

ஆப்கானிஸ்தான் – தலிபான்களுக்கு இடையே  நடக்கும் போரை நிறுத்த பாகிஸ்தான் முன் வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து  செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் கூறும்போது, ’அமைதி குறித்து ஐக்கிய நாடுகள் சபை, இந்திய பிரதமர் மோடி  ஆகியோர் தெற்கு ஆசியாவில் எடுக்கும் முயற்சிகளுக்கு  அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாங்கள் அமைதி ஏற்பட ஒவ்வொரு நாடும் முன்வர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானில் 40 வருடங்களாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடக்கும் போரை  முடிவுக்கு கொண்டுவர  பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்கான பாதையில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக சிறந்தவற்றை செய்வோம்” என்றார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றது முதல் அண்டை நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன்  நட்புறவை பேணவே விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தியாவுடன் பாகிஸ்தான் நாகரிகமான உறவை விரும்புவதாக இம்ரான் கான் கடந்த வாரம்  நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்கா தெற்கு ஆசியாவில் அமைதியை முன்னெடுக்க பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.