அஹ்னாபுக்கு ஹிஜாஸுடன் தொடர்புகளில்லை: சி.ஐ.டி.

0 527

(எம்.எப்.எம்.பஸீர்)
“நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு நீண்­ட­காலம் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளைஞர், சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கைது செய்­யப்­பட்ட விவ­கா­ரத்தில் சந்­தேக நபர் இல்லை என சி.ஐ.டி. கோட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளது.

இதற்கு முன்னர் அஹ்னாப் ஜஸீமை, ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்­பு­பட்ட விவ­கா­ரத்தில் சந்­தேக நப­ராக அறி­வித்து சி.ஐ.டி. மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தது.
இந் நிலையில் நேற்று முன் தினம் நீதி­மன்றில் இந்த விடயம் தொடர்பில் விப­ரித்த பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், ‘ அஹ்னாப் ஜஸீம், ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் விவ­கா­ரத்தில் சந்­தேக நபர் இல்லை என தெரி­வித்தார். அத்­துடன் ஏற்­க­னவே அவ­ரது பெயரை சி.ஐ.டி. மன்றில் சந்­தேக நப­ராக சில அறிக்­கை­களில் குறிப்­பிட்­டி­ருந்த நிலையில், நேற்று முன் தினம் முன்­வைத்த மேல­திக அறிக்­கையின் 4 ஆம் பந்தி ஊடாக, அவரை குறித்த வழக்கின் சந்­தேக நபர் இல்லை என்­பதை அறி­வித்­துள்­ள­தா­கவும் திலீப பீரிஸ் சுட்­டிக்­காட்­டினார்.

எவ்­வா­றா­யினும், அஹ்னாப் ஜஸீம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலின் கீழ் உள்­ள­தாக குறிப்­பிட்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கொழும்பு மேல­திக நீதிவான் நீதி­மன்றில் உள்ள பீ. 11230/20 எனும் வழக்கில் அவரை விசா­ரித்து வரு­வ­தாக தெரி­வித்தார்.

இது குறித்த விசா­ர­ணை­களை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் லசந்த ரத்­நா­யக்­கவின் கீழ் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பத்­தி­ரண, பொலிஸ் பரி­சோ­தகர் ரன்ஜித் உள்­ளிட்ட குழு­வினர் முன்­னெ­டுத்­துள்­ளனர். அவர்­களும் நேற்று முன் தினம் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தல்­களை தொடர்ந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் சி.ஐ.டி., சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் உமர் ஹிஸ்­புல்­லாஹ்வை கைது செய்­தி­ருந்­தது. அவ­ருடன் தொடர்­பு­பட்ட விவ­கா­ரத்தில் இளம் கவிஞரான அஹ்னாப் ஜஸீம் என்பவரை கடந்த 2020 மே 16 ஆம் திகதி சி.ஐ.டி. கைது செய்தது. அது முதல் இதுவரை அவரை தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.