2021 ஹஜ் யாத்திரைக்கு கொவிட் தடுப்பூசி கட்டாயமானது: சவூதி
கொவிட் தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே இவ்வருட ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என சவூதி அரேபிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை ஹஜ் யாத்திரையில் ஈடுபட விரும்புவோர் கட்டாயம் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும். இது இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்குவதற்கான கட்டாய நிபந்தனையாக கொள்ளப்படும் என சவூதியின் சுகாதார அமைச்சர் கலாநிதி தெளபீக் அல் ராபியா வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்ள வரும் யாத்திரிகர்கள் நாட்டினுள் பிரவேசிக்கும் இடங்களில் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் சவூதி அரேபியாவில் வசிக்கும் 1000 பேர் மாத்திரமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் இவ்வருடம் உரிய சுகாதார விதிமுறைகளுடன் அதிகமானோர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வெளிநாட்டவர்களை ஹஜ் யாத்திரைக்கு அனுமதிப்பது தொடர்பான அறிவித்தல்களை இதுவரை சவூதி ஹஜ் விவகார அமைச்சு உத்தியோகபூர்வமான வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.- Vidivelli