மாவ­னல்­லையில் இளம் பெண் கைது; நடந்­தது என்ன?

0 513

எம்.எப்.எம்.பஸீர்

ஏப்ரல் 21 தாக்­குதல் என அறி­யப்­படும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின­மன்று நடாத்­தப்­பட்ட தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் சஹரான் ஹாஷீம் முன்­னி­லையில், 15 பெண்கள், எந்த நேரத்­திலும் தற்­கொலை தாக்­குதல் நடாத்த தயார் என ‘பை அத்’ எனும் உறுதி மொழியை எடுத்­தி­ருந்­த­தாக ரி.ஐ.டி. விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

அடிப்­ப­டை­வாதம், ஆயுதப் பயிற்சி தொடர்­பி­லான சஹ்­ரானின் வகுப்­புக்­களில் கலந்­து­கொண்­ட­தாக கூறப்­படும் 24 வய­தான மாவ­னெல்லை – ஹிங்­குல பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் இப்­ராஹீம் சஹீதா எனும் யுவ­தியைக் கைது செய்து முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் இந்த தகவல் வெளிப்­பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறி­வித்­தி­ருந்தார்.

சஹ்­ரானின் அடிப்­ப­டை­வாத வகுப்­புக்கள், பயிற்சி முகாம்கள் தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ர­ணைகள் ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்­விஸின் கீழ் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. சஹ்­ரானின் தேசிய தெளஹீத் ஜமா அத் உறுப்­பி­னர்கள், அதன் செயற்­பாடு, நாட­ளா­விய ரீதியில் அவ்­வ­மைப்பு முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள் என அந்த விசா­ர­ணைகள் மிக ஆழ­மா­னவை.

இந் நிலையில், பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர், விஷேட விசா­ரணை ஒன்­றினை தற்­கொலைத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று பல மாதங்கள் கடந்த நிலையில் ஆரம்­பித்­தனர். தாக்­கு­தலின் பின்னர் கைப்­பற்­றப்­பட்ட டிஜிட்டல் உப­க­ரணம் ஒன்­றி­லி­ருந்து மீளப் பெறப்­பட்ட தக­வல்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக அவ்­வி­சா­ர­ணைகள் ஆரம்­பித்­தன.

குறிப்­பாக சஹ்ரான் ஹாஷீமின் தேசிய தெளஹீத் ஜமா அத் உறுப்­பி­னர்கள் பலர் சேர்ந்து முன்­னெ­டுத்­தி­ருந்த தொடர்­பாடல் வலை­ய­மைப்பு உள்­ளிட்ட தக­வல்­களும் அந்த விசா­ர­ணை­களில் வெளிப்­பட்­டி­ருந்­த­தாக அறிய முடி­கின்­றது.

இந் நிலையில் தான் 20 வய­தான ஒரு இளைஞர் பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வி­னரால் கடந்த 2020 டிசம்பர் மாதம் காத்­தான்­கு­டிக்குச் சென்ற, சிறப்பு பொலிஸ் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

அது தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணை­களில் வெளிப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமைய, சஹ்­ரானின் வகுப்­புக்­களில் கலந்­து­கொண்­டி­ருந்த 6 பெண்கள் மட்­டக்­க­ளப்பு – காத்­தான்­குடி பகு­தியில் வைத்து கடந்த 2020 டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவர்கள் அனை­வரும் உற­வி­னர்கள் என்­ப­துடன், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் கைதான, தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களின் நெருங்­கிய உற­வி­னர்கள் என்­பதும் முக்­கிய விட­ய­மாகும். இதன் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்ற மேல­திக விசா­ர­ணை­களில், கடந்த வெள்­ளி­யன்று (19 ஆம் திகதி) மாவ­னெல்­லையில் வைத்து மொஹம்மட் இப்­ராஹீம் சஹீதா எனும் 24 வய­தான யுவதி கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினால் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த 6 பெண்கள் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்ட போது, சஹ்­ரானின் வகுப்­புக்­களில் தாங்கள் கலந்­து­கொண்­டி­ருந்த போது சஹீ­தாவும் இருந்­தமை தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன் பிர­கா­ரமே மாவ­னெல்லை – ஹிங்­குல பகு­திக்குச் சென்ற பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அவரை கைது செய்து கொழும்­புக்கு அழைத்து வந்து விசா­ரித்­தனர். அதன்­போது மேலும் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

மாவ­னெல்லை பகு­தியில் கடந்த 2018 டிசம்பர் மாதம் பதி­வான புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரங்­களின் பிர­தான சந்­தேக நபர்­க­ளாக அடை­யாளம் காணப்­பட்டு கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சி.ஐ.டி.யினரால் ‘ ஹக் பிரதர்ஸ்’ என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக் மற்றும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்துல் ஹக் ஆகி­யோரின் சகோ­த­ரியே சஹீதா ஆவார். அவ­ரது தந்­தை­யான இப்­ராஹீம் மெள­லவி என பர­வ­லாக அறி­யப்­படும் மொஹம்மட் இப்­ரா­ஹீமும் புத்தர் சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் கைதாகி தடுப்பில் உள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் சஹீ­தாவும் மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்­ட­துடன் அந்த சம்­ப­வத்தில் அவ­ருக்கு தொடர்பு இல்லை என உறு­தி­யான நிலையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். எனினும் சஹீ­தாவை புல­னாய்வுப் பிரி­வினர் தொடர்ந்து கண்­கா­ணித்து வந்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே கைது செய்­யப்­பட்ட சஹீ­தாவை கொழும்­புக்கு அழைத்து வந்து பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது, சஹ்­ரானின் அடிப்­ப­டை­வாத, ஆயுத பயிற்சி வகுப்­பு­களில் அவர் பங்­கேற்­ற­தா­கவும் அவ்­வ­குப்பில் 15 பெண்கள் இருந்­தமை தொடர்­பிலும் தக­வல்கள் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

இத­னை­விட அந்த 15 பேரில் 5 பேர், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் சாய்ந்­த­ம­ருது பகு­தியில் வீடொன்­றுக்குள் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டு வெடிப்பு சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சாஹிதா வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்­பிட்டார்.

இந் நிலையில் குறித்த வகுப்­புக்­களில் பங்­கேற்ற மேலும் மூவர் தற்­போதும் கைதாகி விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், சாஹிதா உள்­ளிட்ட ஏனைய 7 பேரும் தற்­போதும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அஜித் ரோஹன சுட்­டிக்­காட்­டினார்.

இந்த வகுப்­புக்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்­பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றா­யினும் தற்­போ­தைய நிலையில், தற்­கொலைத் தாக்­குதல் நடாத்த பை அத் செய்­தி­ருந்த 15 பெண்­களும் அடை­யாளம் காணப்­பட்டு, அவர்­களில் உயி­ருடன் இருக்கும் 10 பேரும் சட்­டத்தின் பிடியில் உள்­ள­தாக பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் கூறு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் இவ்­வா­றான மேலும் பல வகுப்­புக்கள் இடம்­பெற்­றுள்­ள­னவா, இவ்­வா­றான வகுப்­புக்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை அளித்­த­வர்கள், நிதி­ய­ளித்­த­வர்கள் யார் என்­பது உள்­ளிட்ட ஏனைய விட­யங்கள் தொடர்பில் தீவிர விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

தற்­கொலை தாக்­குதல் நடாத்த பை அத் செய்­த­தாக கூறப்­படும் பெண்­களில் ஐவர் மர­ணித்­துள்­ளனர்.
1. அப்துல் சத்தார் சித்தி உம்மா (சஹ்ரான் ஹாஷீமின் தாய்), 2. மொஹம்மட் ஹாஷீம் ஹிதாயா (சஹ்ரான் ஹாஷீமின் சகோ­தரி), 3. ஆதம் லெப்பை பாத்­திமா அப்ரின் (சஹ்ரான் ஹாஷீமின் சகோ­த­ர­ரான சின்ன மெள­லவி எனப்­படும் மொஹம்மட் ஸைனியின் மனைவி), 4. மொஹம்மட் நஸார் பாத்­திமா நப்னா ( சஹ்ரான் ஹாஷீமின் சகோ­தரர் ரில்­வானின் மனைவி), 5. அப்துல் ரஹீம் பெரோஸா ( சியோன் தேவா­ல­யத்தில் குண்­டினை வெடிக்கச் செய்த தற்­கொலை குண்­டு­தாரி ஆசாத்தின் மனைவி) ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ள­வர்­க­ளாவர்.

இதே­வேளை ஏலவே கைது செய்­யப்­பட்டு மூவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் மேலும் ஏழு பேர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரின் கீழ் சந்­தேக நபர்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இத­னி­டையே மேற்­படி 15 பேரி­னதும் பட்­டி­யலில் சாரா என்­ற­ழைக்­கப்­படும் புலஸ்­தினி ராஜேந்­தி­ரனின் பெயர் உள்ளடங்கவில்லை. நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்திய ஹஸ்தூனின் மனைவியான இவர், சாய்ந்தமருதில் வீடொன்றினுள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. எனினும் தற்போது அவர் நாட்டை விட்டும் தப்பியோடியுள்ளதாக வேறு சில தகவல்கள் கூறுகின்றன. இவர் உயிரிழந்துவிட்டாரா அல்லது நாட்டிலோ அல்லது வேறு நாடுகளிலோ தலைமறைவாக வாழ்கிறாரா என்பதைக் கண்டறிவதற்கான விசேட விசாரணைகளை நடத்துமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.