இந்திய உளவு அமைப்பான ‘ரோ’ தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
‘‘இந்தியா – இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ‘ரோ’ எனப்படும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவு என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை’’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்ததாக நேற்றைய தினம் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின் நிலையில் ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளிவந்தமையானது பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் நேற்றைய தினம் இந்த செய்தி முக்கிய இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது ஜனாதிபதி அவ்வாறான கருத்து எதனையும் கூறவில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பில் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை