சஹ்ரானை வழிநடாத்திய இந்தியர் ‘அபூ ஹிந்த்’ யார்?

விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி

0 781

(எம்.எப்.எம்.பஸீர்)
ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய கும்­ப­லுக்கு தலை­வ­னாக செயற்­பட்­ட­தாக நம்­பப்­படும் சஹ்ரான் ஹஷீம், அவ­ரது சகோ­தரர் ரில்வான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் சிரேஷ்ட தலை­வ­ராக கரு­தப்­படும் நெளபர் மெள­லவி ஆகியோர் மிக நெருங்­கிய தொடர்­பு­களை பேணிய, ‘அபூ ஹிந்த்’ எனும் பெயரால் அறி­யப்­படும் நபர் தொடர்பில் சி.ஐ.டி. சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. சி.ஐ.டி.யின் பிரத்­தி­யேக விசா­ரணைக் குழு­வொன்று இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

இலங்­கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, தற்­கொலை தாக்­குதல் இடம்­பெ­றப்­போ­கி­றது என்­ப­தையும், இலக்­கு­க­ளையும் அபூ ஹிந்த் அறிந்­தி­ருந்­தி­ருக்­கலாம் என பர­வ­லான சந்­தேகம் எழுந்­துள்ள நிலை­யி­லேயே இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அதன்­படி, ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்­ன­ணியில் வெளி­நாட்டு சக்தி ஒன்று செயற்­பட்­டுள்­ள­தாக பர­வ­லாக நம்­பப்­படும் நிலையில், அது குறித்த வெளிப்­ப­டுத்­தல்­க­ளுக்­காக இந்த அபூ ஹிந்த் எனும் அடை­யாளம் குறித்து பூரண விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் இது குறித்த விசா­ர­ணை­க­ளையும், சஹ்ரான் கும்­ப­லு­ட­னேயே இருந்து சாய்ந்­த­ம­ருது தற்­கொலைத் தாக்­கு­தலின் பின்னர் இறந்­த­தாக எந்த அறி­வியல் தட­யங்­களும் இல்­லாத, கட்­டு­வா­பிட்டி தேவா­லய தாக்­க­கு­தல்­தா­ரியின் மனைவி சாரா ஜெஸ்மின் குறித்த விசா­ர­ணை­க­ளையும் இடை நிறுத்­தாது உண்­மை­களை வெளிப்­ப­டுத்த தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்டும் என ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு தனது இறுதி அறிக்கை ஊடாக பரிந்­து­ரைத்­துள்­ளது.

ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய, 2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் நேர­டி­யாக தொடர்­பு­பட்­ட­வர்கள், சஹ்ரான் ஹஷீம் உள்­ளிட்ட 20 பேர் ஆவர். இந் நிலையில் இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் வெளி­நாட்டு சக்­தி­யொன்று உள்­ள­தாக பல சாட்­சி­யா­ளர்கள் ஆணைக் குழுவில் முன்­வைத்த விட­யங்­களை ஆராய்ந்­துள்ள ஆணைக் குழு அது தொடர்­பிலும் தனது இறுதி அறிக்­கையில் உள்­ள­டக்­கத்­தினை கொண்­டுள்­ளது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன், முன்னாள் பாது­காப்பு படை­களின் தலைமை அதி­காரி அத்­மிரால் ரவீந்ர விஜே­கு­ண­ரத்ன, பொலிஸ் விஷேட அதி­ரடிப் படையின் முன்னாள் கட்­டளைத் தள­பதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப், தேசிய உளவுச் சேவையின் முன்னாள் பணிப்­பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன உள்­ளிட்ட பலர் ஆணைக் குழு­வுக்கு வழங்­கிய சாட்­சி­களில் வெளி­நாட்டு மறை­முக சக்தி தொடர்பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.
இதில் தேசிய உளவுச் சேவை முன்னாள் பணிப்­பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன முன்­வைத்­துள்ள சாட்­சி­யங்­களின் போது வெளிப்­ப­டுத்­தி­யுள்ள அபூ ஹிந்த் எனும் இந்­தியர் தொடர்­பி­லேயே சி.ஐ.டி.யின் சிறப்பு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இது தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு தனது அறிக்­கையில்,
2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் தேசிய உளவுச் சேவைக்கு தாக்­குதல் தொடர்பில் கிடைத்த முன்­கூட்­டிய தகவல், இந்த அபூ ஹிந்த் எனும் நப­ரி­டமும் இருந்­தி­ருக்­கலாம் என தான் நம்­பு­வ­தாக நிலந்த ஜய­வர்­தன தனது சாட்­சி­யத்தின் போது தெரி­வித்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதன்­படி, ஆணைக் குழுவும் தனது எல்­லை­களை மீறாமல் அபூ ஹிந்த் தொடர்பில் முடி­யு­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக ஆணைக் குழு அறிக்­கை­யிட்­டுள்­ளது. அதன்­படி தற்­கொ­லை­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவி பாத்­திமா ஹாதி­யா­விடம் ஆணைக் குழு சாட்­சியம் பெற்ற போது, அபூ ஹிந்த் எனும் ஒரு­வ­ருடன் சஹ்­ரா­னுக்கு 2017 அரை­யாண்­டி­லி­ருந்து தொடர்­புகள் இருந்­தமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அவ்­வ­றிக்கை கூறு­கி­றது.

இந் நிலையில் குறித்த அபூ ஹிந்த் யார் என்­பது தொடர்பில், தனது அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்த விரும்­பாத பிர­பல பயங்­க­ர­வாத விவ­காரம் தொடர்­பி­லான சர்­வ­தேச நிபுணர் ஒருவர் மிக ரக­சி­ய­மான சாட்­சியம் ஒன்­றினை வழங்­கி­யுள்­ள­தாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறு­கின்­றது. குறித்த நிபு­ணரின் சாட்­சி­யத்­துக்கு அமைய அபூ ஹிந்த் என்­பது இந்­திய மாநில உளவுத் துறை ஒன்று வடி­வ­மைத்த கதா­பாத்­தி­ர­மாகும்.
பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சிரி­யா­வுக்கு செல்லும் இந்­தி­யர்கள் இலங்­கைக்கு வந்து, இங்­கி­ருந்து சிரியா செல்­வது தொடர்­பி­லான விட­யங்­களை ஆராயும் உளவு நட­வ­டிக்கை தொடர்பில் அந்த உளவுப் பிரிவு அபூ ஹிந்த் எனும் கதா பாத்­தி­ரத்தை ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தாக குறித்த நிபுணர் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ள­தாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறு­கின்­றது.

அதன்­படி சஹ்ரான் உள்­ளிட்­ட­வர்கள் அபூ ஹிந்தை, ஐ.எஸ். ஐ.எஸ். பிராந்­திய தலை­வ­னாக நம்பி, தாம் நடாத்தப் போகும் தாக்­குதல் தொடர்பில் திட்­டங்­களை அவ­ருடன் பகிர்ந்­தி­ருக்­கலாம் என நிபு­ணரின் சாட்­சி­யத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
ஏப்ரல் 21 முதல் தற்­கொலை தாக்­கு­தலை தொடர்ந்து வெடி­குண்டு நிரப்­பப்­பட்ட வாகனம் தொடர்­பிலும் குறித்த மூலத்தின் ஊடா­கவே தகவல் தேசிய உளவுச் சேவைக்கு கிடைத்­துள்ள நிலையில், அதன் பிர­கா­ரமே கொச்­சிக்­கடை தேவா­லயம் அருகே குண்டு நிரப்­பப்­பட்ட வேன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில், இந்­தி­யாவின் மாநில உளவுத் துறை முன்­னெ­டுத்த இந்த இர­க­சிய நட­வ­டிக்கை, அந் நாட்டின் தேசிய உளவுச் சேவைக்கு தெரி­யாமல் இருந்­தி­ருக்­கலாம் எனவும், கடந்த 2019 ஏப்ரல் 21 தாக்­கு­த­லுக்கு முன்னர் இந்­திய பாது­காப்பு செயலர் சஞய் மித்ரா ஏப்ரல் 7 ஆம் திகதி இலங்­கைக்கு விஜயம் செய்­தமை அத­னையே காட்­டு­வ­தாக குறித்த பயங்­க­ர­வாதம் குறித்த நிபுணர் ஆணைக் குழு­வுக்கு சாட்­சி­ய­ம­ளித்­துள்­ள­தாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறு­கின்­றது.

இந் நிலையில் தற்­போதும் அபூ ஹிந்தின் அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்த சி.ஐ.டி. விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், அவ்­வி­சா­ர­ணை­களை தொட­ரு­மாறு ஆணைக் குழுவின் அறிக்­கையும் கூறு­கின்­றது.

இத­னை­விட, கட்­டு­வா­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய குண்­டு­தா­ரியின் மனைவி சாரா ஜெஸ்மின் அல்­லது புலஸ்­தினி மகேந்­திரன் தொடர்­பிலும் தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு ஆணைக் குழு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது. வெளி­நாட்டு மறைமுக சக்தியின் தொடர்புகள் உள்ளதா என ஆராயும் போதே ஆணைக் குழு தனது அறிக்கையில் அந்த விடயத்தை கூறியுள்ளது

.
குறிப்பாக சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலின் போது சாரா குறித்த வீட்டில் இருந்த போதும், அங்கு இறந்தவர்களின் டி.என்.ஏ. பரிசோதனைகளின் போது சாரா கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் கிடைக்கவில்லை. அத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், குறித்த சம்பவத்தின் பின்னர் சாராவை நேரில் கண்ட இரு சாட்சியாளர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். இந் நிலையிலேயே சாரா தொடர்பிலான விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஆணைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.