தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவதாக அறிவித்தல்

0 625

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நீண்ட கால­மாக சர்ச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டு­வரும் தம்­புள்ள ஹைரியா பள்­ளி­வா­சலை நீதி­மன்ற உத்­த­ர­வினைப் பெற்று அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அப்­பு­றப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மீண்டும் மாந­கர சபை மேற்­கொண்­டுள்­ளது.

தம்­புள்ள பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திற்­கான அனு­மதி ஏற்­க­னவே பெற்­றுக்­கொள்ளபட்­டி­ருந்தால் அது தொடர்­பான ஆவ­ணங்­களை 2021.02.24 ஆம் திகதி அல்­லது அதற்கு முன்பு  தம்­புள்ள மாந­க­ர­சபை பொறி­யி­ய­லா­ள­ரிடம் சமர்ப்­பிக்குமாறு தம்­புள்ள மாந­கர சபை­யினால் அறி­வித்தல் ஒன்று கடந்த 24 ஆம் திகதி பிற்­பகல் 3.45 மணி­ய­ள­விலே பள்­ளி­வா­சலில் ஒட்­டப்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் சலீம்தீன்  ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

உரிய ஆவ­ணங்­களை சமர்ப்­பிக்­கும்­படி இறுதி திக­தி­யாக 24 ஆம் திகதி குறிப்­பி­டப்­பட்டு இவ்­வாறு அறி­வித்தல் அன்­றைய தினம் பிற்­பகல் 3.45 மணிக்கு ஒட்­டப்­பட்­டுள்­ளமை திட்­ட­மிட்ட சதி எனவும் அவர் குறிப்­பிட்டார்.   2021.02.17 என திகதி குறிப்­பி­டப்­பட்­டுள்ள CPC/DMC/MW/20/அன­வ­சர/10/2020 எனும் இலக்­க­மிட்ட அறி­வித்தல் கடந்த 24 ஆம் திக­தியே ஒட்­டப்­பட்­டுள்­ளது. தம்­புள்ள மாந­கர சபை மாந­கர ஆணை­யாளர் வி.எம்.ஆர்.பி. தச­நா­யக்க அறி­வித்­தலில் கையொப்­ப­மிட்­டுள்ளார்.

அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘1982 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்­டத்தின் 8 A(1) பிரிவை மீறி உங்­களால் அதி­கார சபை­யி­ட­மி­ருந்து உரிய அனு­மதி பெற்றுக் கொள்­ளாது கண்டி வீதி தம்­புள்­ளயில் வணக்­கஸ்­த­ல­மொன்று  நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக எனக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
2021.02. 24 ஆம் திகதி அல்­லது அதற்கு முன்பு நிர்­மா­ணத்­திற்கு பெற்றுக் கொள்­ளப்­பட்ட அனு­மதி தொடர்­பான ஆவ­ணங்கள் இருப்பின்  தம்­புள்ள மாந­க­ர­சபை பொறி­யி­ய­லா­ள­ரிடம் சமர்ப்­பிக்­கும்­படி இத்தால் அறி­விக்­கிறேன்.

அவ்­வாறு அறி­விக்­கப்­ப­டா­விட்டால் எந்த அறி­விப்­பு­மின்றி மேற்­கூ­றப்­பட்ட நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்­டத்தின் 28 A (3) பிரிவின் கீழ் நீதி­மன்ற உத்­த­ர­வினைப் பெற்று சட்ட விரோத நிர்­மாணம் அகற்­றப்­படும் என அறியத் தரு­கிறேன்’ என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த அறி­வித்தல் பள்­ளி­வா­சலில் ஒட்­டப்­பட்­ட­த­னை­ய­டுத்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் அறி­வித்­தலின் பிரதிகளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதியமைச்சர் அலி சப்ரி,  வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ஏ.பி.எம்.அஷ்ரப் ஆகியோருக்கு உரிய நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.