தீர்மானத்தில் மாற்றமில்லை சடலங்கள் எரிக்கப்படும்

அரசாங்கம் திட்டவட்டம்

0 577

கொவிட்டில் மர­ணிப்­ப­வர்­களை தகனம் செய்­வதே தொழி­நுட்ப குழுவின் பரிந்­துரை. அதனை நாங்கள் மாற்­ற­மாட்டோம். சட­லங்கள் எரிக்­கப்­படும் என்ற தீர்­மா­னமே தொடர்ந்தும் அமுல்­ப­டுத்­தப்­படும். அத்­துடன் அடக்­கலாம் என தெரி­வித்து அறிக்கை கைய­ளித்­த­குழு உத்­தி­யோகபூர்­வ­மற்ற குழு­வாகும். என்­றாலும் அவர்­களின் அறிக்­கையை ஆராய்­வ­தற்­காக பிர­தான குழு­வுக்கு சமர்ப்­பித்­தி­ருக்­கின்றோம் என சுகா­தார அமைச்சர் பவித்ரா வன்­னி­யா­ரச்சி தெரி­வித்தார்.

நிலை­யியற் கட்­டளை 27/2 இன் கீழ் கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம், கொவிட்டில் மர­ணிப்­ப­வர்­களை அடக்கம் மற்றும் தகனம் செய்­வது தொடர்பில் ஏற்­க­னவே பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்­தி­ருந்த கேள்­விக்கு சுகா­தார அமைச்சர் நேற்று வியாழக்கிழமை பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், கொவிட்டில் மர­ணிப்­ப­வர்­களை அடக்கம் செய்­வதா தகனம் செய்­வதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்க தொழி­நுட்ப குழு­வொன்றை அமைத்­தி­ருந்தோம். அதன் பரிந்­து­ரை­யாக இருப்­பது, கொவிட்டில் மர­ணிப்­ப­வர்­களை தகனம் செய்­ய­வேண்டும் என்­ப­தாகும். அதனால் அந்த பரிந்­து­ரையை நாங்கள் செயற்­ப­டுத்­து­கின்றோம். இந்த பயங்­க­ர­மான தொற்­றுக்கு நாங்கள் முகம்­கொ­டுக்­கும்­போது, இந்த விசேட பரிந்­து­ரை­களை மத நோக்­கத்­துக்­கா­கவோ வேறு தனி­ந­பர்­களின் தேவைக்கோ நாங்கள் மாற்­றி­ய­மைக்­க­மாட்டோம் என்றார்.

இதன்­போது எழுந்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், சுகா­தார அமைச்­சு கடந்த டிசம்பர் 24ஆம் திகதி வைரஸ் தொடர்­பான 11பேர் கொண்ட விசேட நிபுணர் குழு­வொன்றை அமைத்­தி­ருந்­தது. அந்த குழுவின் அறிக்கை தற்­போது கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதில் கொவிட்டில் மர­ணிப்­ப­வர்­களை தகனம் மற்றும் அடக்கம் செய்­வ­தற்கு தேவை­யான வழி­காட்­டல்­களை பரிந்­துரை செய்­தி­ருக்­கின்­றது. ஆரம்­பத்தில் அமைக்­கப்­பட்ட குழுவின் பரிந்­துரை காலா­வ­தி­யா­ன­தாகும். ஏனெனில் தற்­போது வைரஸ் தொடர்பில் பல தக­வல்கள் வெளி­வந்­தி­ருக்­கின்­றன. அதனால் முத­லா­வது குழுவில் இருக்கும் வைத்­தி­யர்கள் யார் என்­பதை வெளிப்­ப­டுத்­த­வேண்டும் என்றார்.

அத­னைத்­தொ­டர்ந்து அமைச்சர் பவித்ரா பதிலளிக்கையில், தொழி­நுட்ப குழுவில் 11பேர் இருக்­கின்­றார்கள் அவர்­களில் தலை­வ­ராக வைத்­தியர் சன்ன பெரேரா, வைத்­தி­யர்­க­ளான ஆனந்த விஜேசிங்க, ரோஹன ருவன் புர, பீ.பி. தச­நா­யக்க, சிரானி சந்­தி­ர­சிறி, மாலிக்கா கரு­ணா­ரத்ன, துல்­மினி குமா­ர­சிங்ஹ, பிரபாத் ஜய­சிங்க, சியந்த அம­ரதுங்க, ஹசித்த திசேரா மற்றும் பேரா­சி­ரியை மெத்­திகா விதா­னகே ஆகி­யோ­ராவர்.

அத்­துடன் வைரஸ் தொடர்­பான விசேட நிபு­ணர்கள் குழு­வொன்று ராஜாங்க அமைச்சர் சுதர்­ஷனி பெர்­ணாந்­து­புள்­ளேயை சந்­தித்து, இது­தொ­டர்­பாக அவர்­களின் தீர்­மா­னத்தை கைய­ளித்­தி­ருக்­கின்­றது. அந்த தீர்­மா­னத்தை அவர் என்­னிடம் கைய­ளித்தார். குறித்த தீர்­மா­னத்தை நாங்கள் பிர­தான குழு­வுக்கு சமர்ப்­பித்­தி­ருக்­கின்றோம். பிர­தான குழுவில் இருந்து இது­வரை எந்த தீர்­மா­னமும் எங்­க­ளுக்கு வர­வில்லை என்றார்.

மீண்டும் எழுந்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், டிசம்பர் 24ஆம் திகதி சுகா­தார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட குழு உப குழு. என்­றாலும் பேரா­சி­ரியர் ஜெனீபர் பெரேரா தலை­மையில் இருப்­ப­வர்கள் அனை­வரும் வைரஸ் மற்றும் வேறு துறை­க­ளைச்­சேர்ந்த விசேட நிபு­ணர்கள். உப­கு­ழுவின் அறிக்­கையை பிர­தான குழு­வுக்கு அனுப்பி அதனை பொருட்­ப­டுத்­தாமல் இருப்­ப­தற்­கா முயற்­சிக்­கின்­றீர்கள்? எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு அமைச்சர் பதி­ல­ளிக்­கையில், வைரஸ் தொடர்­பான விசேட நிபு­ணர்கள் குழு உத்­தி­யோக பூர்­வ­­மற்ற குழு­வாகும். சுதர்­ஷினி பெர்­ணான்டோ புள்­ளேயை அவர்கள் சந்­தித்து பேசியே அறிக்கை தயா­ரித்து கை­ய­ளித்­தி­ருக்­கின்­றனர். அவர்­களின் அறிக்­கையை பிர­தான குழு­வுக்கு அனுப்பி இருக்­கின்றோம். அவர்கள் அதனை ஆராய்ந்து, அறிக்கை ஒன்றை வழங்­கு­வார்கள். அதனால் பிர­தான குழுவின் பரிந்­து­ரைக்­க­மை­யவே எங்­களால் இந்த விட­யத்தை தீர்­மா­னிக்க முடியும் என்றார்.

மீண்டும் எழுந்த கஜேந்­தி­ர­குமார், பிரதான குழு இதுதொடர்பாக ஆராய்ந்து எப்போது அவர்களின் அறிக்கையை கையளிப்பார்கள் என்பதை அறிவிக்கவேண்டும். திகதி ஒன்று இல்லாமல் இதனை விடமுடியுமா? எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு சபாநாயகர் தெரிவிக்கையில், உங்களது கேள்வியில் திகதியை கேட்டிருக்கவில்லை. அதனால் பிரதான குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்ததுடன் அதுதொடர்பில் அமைச்சர் சபைக்கு அறிவிப்பார் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.