பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக் குழுவும் உலகளாவிய நீதிக்கான ஊடகவியலாளர் அமைப்பும் இணைந்து நடாத்திய ‘ பலஸ்தீன சமாதான வரைபடம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டமும் அது தொடர்பான இலங்கையின் நிலைப்பாடும்‘ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் தார் ஹம்தல்லா ஸைத் சிறப்புரை நிகழ்த்தினார். அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை – பலஸ்தீன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளருமான பிமல் ரத்நாயக்க, ஐ.நா.வுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் பேராசிரியர் தயான் ஜயதிலக்க மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மஹிந்த ஹத்தக, ஹனா இப்ராஹிம் ஆகியோரும் இதன்போது கருத்துரை வழங்கினர். (படங்கள்: Knowledge Box)-Vidivelli