சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஸ்தாபிப்பு

10 கட்சிகள், 18 தொழிற்சங்கங்கள், 20 அமைப்பு இணைவு

0 816

10 அர­சியல் கட்­சிகள் , 18 தொழிற்­சங்­கங்கள் மற்றும் 20 சிவில் அமைப்­பு­களின் சங்­க­மத்­துடன் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சக்தி கூட்­டணி நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஸ்தாபிக்­கப்­பட்­டது. அத்­துடன், புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தமும் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. சின்னம் குறித்து எவ்­வி­த­மான அறிப்பும் விடுக்­காத நிலையில் கூட்­ட­ணியின் தலைவர் மற்றும் பொதுச் செய­லாளர் ஆகி­யோரின் உரைகள் இடம்­பெற்­றன.

எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மையில் உரு­வாக்­கப்­பட்­­டுள்ள ஐக்­கிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு நேற்று திங்­கட்­கி­ழமை காலை கொழும்பு தாம­ரைத்­த­டாக கலை­ய­ரங்கில் இடம்­பெற்­றது.

‘புதிய எதிர்­பார்ப்பு, புதிய பய­ணத்தை நோக்கி ஒரே எண்­ணத்தில், ஓரே இலக்கில் ஒன்றாய் இணைவோம்’ என்ற தொனிப்­பொ­ருளில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வு சர்­வ­மதத் தலை­வர்­களின் ஆசி­யுடன் ஆரம்­ப­மா­கி­யது.

புதிய கூட்­ட­ணிக்­கான மதத் தலை­வர்­களின் ஆசிர்­வா­தத்தை தொடர்ந்து பொதுச் செய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார வர­வேற்­புரை நிகழ்த்­தினார்.
இதனை தொடர்ந்து புதிய கூட்­ட­ணிக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் நிகழ்வு கூட்­ட­ணியின் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் பொதுச் செய­லாளர் ரஞ்சித் மத்­து­ம­பண்­டார ஆகியோர் முன்­னி­லையில் பிர­தான மேடையில் இடம்­பெற்­றது.

இதன்­போது பங்­காளி கட்­சிகள், சிவில் அமைப்­புகள் மற்றும் தொழிற்­சங்­கங்கள் என பல தரப்­புகள், புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டன.
இதன்­போது புதிய கூட்­ட­ணி­யுடன் 10 அர­சியல் கட்­சி­களும், 20 சிவில் அமைப்­புக்­களும், 18 தொழிற்­சங்­கங்­களும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைசாத்­திட்­டன.

அதற்­க­மைய இந்தப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தலை­மை­யி­லான ஜாதிக ஹெல உறு­மய, ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் அந்த கட்­சியின் செய­லாளர் நிஸாம் காரி­யப்பர் கைச்­சாத்­திட்­ட­துடன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்பில் சந்­திர சாப்டர், ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் கட்­சியின் செய­லாளர் எஸ். சுபைதீன் உள்­ளிட்டோர் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர்.

அதற்கு மேல­தி­க­மாக இந்தக் கூட்­ட­ணியில் 20 சிவில் அமைப்­புக்கள் அங்­கத்­துவம் வகிக்கும் நிலையில் தேசிய மக்கள் சபை சார்பில் சமீர பெரே­ராவும், அப்பி புர­வ­சியோ அமைப்பு சார்பில் இனோக்கா சத்­தி­யங்­க­னியும் கைச்­சாத்­திட்­டனர்.

மேலும் 18 தொழிற்­சங்­கங்கள் இந்தக் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் அதே­வேளை, தொழிற்­சங்­கங்கள் சார்பில் சந்­திக்க பண்­டார புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­­டி­ருந்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வின் இறு­தியில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பாது­காப்­ப­தற்­கான அமைப்­பி­னரும், ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­னரும் இந்தக் கூட்­ட­ணி­யுடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்து கொள்­வ­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டது.

இதன்­பின்னர் அனை­வரும் எழுந்து நின்று வலது கரத்தை உயர்த்­தி­ய­வாறு உறு­தி­மொ­ழி­களை வழங்­கினர். தமி­ழிலும் உறு­தி­மொழி அறி­விக்­கப்­பட்­டது.
உறு­தி­மொழி;

இலங்கை தாய் பூமியை மிக உயர்ந்த வெற்றி பூமி­யாக வள­ர­செய்து, மக்­களின் சுதந்­திரம், தேசத்தின் பாது­காப்பு ஆகி­ய­வற்றை சிறப்­பாக நிச்­ச­யப்­ப­டுத்­திக்­கொண்டு நாட்டின் எதிர்­கால அபி­வி­ருத்­திக்­காக இயற்கை தர்மம் எமக்கு வழங்­கி­யுள்ள வளங்­களை பாது­காத்து, தன்­னி­றை­வான தேசத்தின் எதிர்­கால தலை­மு­றைக்­காக அர்ப்­ப­ணிக்க மனோ­திடம் கொண்டு விஷ­மத்­த­ன­மான சக்­தி­களால் ஆட்­கொள்­ளப்­பட்­டுள்ள இலங்கை மக்­களின் திறன்­களை மேம்­ப­டுத்தி பொரு­ளா­தார, சமூக, அர­சியல் நிலை­களில் சம சந்­தர்ப்­பங்­களை உரு­வாக்கும் சம­பூ­மியை அர்ப்­ப­ணித்து உரு­வாக்க சமத்­துவம், சக­வாழ்வு ஆகிய அடிப்­ப­டை­களை கொண்டு, உலகம் ஏற்­றுக்­கொண்­டுள்ள மனித உரிமை மற்றும் கௌர­வங்­களை பாது­காத்­துக்­கொண்டு எமது அதி­யுயர் பாரம்­ப­ரிய கொள்­கை­க­ளின்­படி அதி­யுயர் தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதை எமது அபி­லா­ஷை­க­ளாகக் கொள்­வ­தற்­காக பிர­மாண்­ட­மான பொரு­ளா­தா­ரத்தைப் புனர்­நிர்­மாணம் செய்ய மக்­க­ளுக்­கான சமத்துவ ஆட்­சியை உரு­வாக்­கு­வ­தற்­காக நாட்டின் அனைத்து மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து மக்­களின் வெற்­றியை உறுதி செய்­வதன் நோக்கில் ஐக்­கிய மக்கள் சக்தி மனப்பூர்வமாக அர்ப்பணிப்புடன் செயற் படும் என்பதை இலங்கை மக்களின் முன்னிலையில் கௌரவபூர்வமாக உறுதி யுடன் கூறுகின்றோம்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற கலை நிகழ்வொன்றின் பின்னர் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் உரை இடம்பெற்றது.

பொதுத்தேர்தல் மாத்திரமல்ல, அதனை தொடர்ந்து வரும் மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அனைத்திலும் வெற்றி பெறுவோமென ஆதரவாளர்கள் மத்தியில் இதன் போது சஜித் பிரமேதாச அறிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.