ஏப்ரல் தாக்குதலை மைத்திரி முன்கூட்டியே அறிந்திருந்தாரா?

சந்தேகம் எழுகிறது என்கிறது ஐ.தே.க.

0 723

ஏப்ரல் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்ற சந்­தர்ப்­பத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன உட­ன­டி­யாக நாடு­தி­ரும்ப சந்­தர்ப்பம் இருந்தும் வராமல் இருந்­ததன் மூலம் இது தொடர்­பாக அவர் முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்­தாரா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. அதனால் இது­தொ­டர்பில் அவரை விசா­ரிக்­க­வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆசூ மார­சிங்க தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஏப்ரல் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு பிர­சாரம் செய்தே அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. ஆனால் அர­சாங்கம் இது­தொ­டர்­பாக எந்த விசா­ர­ணை­யையும் மேற்­கொள்­ள­வில்லை. அத்­துடன் ஏப்ரல் தாக்­குதல் தொடர்­பாக மேற்­கொண்ட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­யின்­போது முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொண்டோம்.

அவ­ரது வாசஸ்­த­லத்­துக்கு சென்று இது­தொ­டர்­பாக வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்­ளும்­போது, குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்ற தினத்தில் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்த உங்­க­ளுக்கு உட­ன­டி­யாக நாடு திரும்ப முடி­யாமல் போன­தற்கு காரணம் என்­ன­வெனக் கேட்­ட­போது, ஸ்ரீலங்கன் எயார்லைன் விமா­னத்தில் அன்­றை­ய­தினம் ஆசனம் இருக்­க­வில்லை. அத­னால்தான் வர­மு­டி­யாமல் போன­தென அவர் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் இது­தொ­டர்­பாக ஸ்ரீலங்கன் விமான நிறு­வ­னத்தின் அதி­கா­ரிகள் சிலரை பாரா­ளு­மன்ற விசா­ரணைக் குழு­வுக்கு அழைத்துக் கேட்­ட­போது, குறிப்­பிட்ட தினத்தில் 20க்கும் அதி­க­மான ஆச­னங்கள் மீத­மி­ருந்­த­தாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தார்கள். இந்த விட­யங்கள் அறிக்­கையில் எழு­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

அப்­ப­டி­யாயின் முன்னாள் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வுக்கு பொய் சாட்­சியம் தெரி­வித்­தி­ருக்­கின்றார். அத்­துடன் தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக அறிந்­து­கொண்­டுதான் அவர் இவ்­வாறு செயற்­பட்­டாரா என்ற சந்­தேகம் எமக்கு எழு­கின்­றது. அதனால் அர­சாங்கம் இது­தொ­டர்­பாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை விசா­ரிக்­க­வேண்டும்.

அத்­துடன் எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு பின்னர் அர­சாங்கம் அமைக்கும் கூட்­ட­ணியின் தவி­சா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது, தாக்­குதல் சம்­ப­வத்தின் பிர­தான குற்­ற­வா­ளி­யாக தெரிவிக்கப்படும் மைத்திரிபால சிறிசேன. இவ்வாறு இருக்கும்போது ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இந்த இரண்டு தரப்பினரும்தான் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. அத்துடன் மைத்திரிபால சிறிசேனவையும் இந்த அரசாங்கம் விசாரிக்கப்போவதில்லை என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.