வில்பத்து வன விவகாரம் : ஏப்ரல் 3 இல் தீர்ப்பு

0 678

வில்­பத்து தேசி­ய­வன பாது­காப்பு பிர­தே­சத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலப்­ப­கு­தியை துப்­பு­ரவு செய்து மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்­களை முன்­னெ­டுத்­த­தாக குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட நபர்­க­ளுக்­கெ­தி­ராக தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­படும் என மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நிர்­ண­யித்­தது.
குறிப்­பிட்ட சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு சூழல் ­நீ­திக்­கான மையம் இந்த வழக்­கினைத் தொடர்ந்­தி­ருந்­தது.

இந்த வழக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­திகள் ஜனக் டி சில்வா, நிஸ்­ஸங்க பந்­துல கரு­ணா­ரத்ன ஆகியோர் முன்­னி­லையில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. விசா­ர­ணையை முடி­வுக்­குக்­கொண்டு வந்த நீதி­ப­திகள் குழாம் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திக­திக்கு தீர்ப்பு வழங்­கப்­படும் என நிர்­ண­யித்­தது.

இந்த ரிட் மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக வன­ஜீ­வ­ரா­சிகள் பணிப்­பாளர் நாயகம், மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை, மன்னார் மாவட்ட செய­லாளர், கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சர் (முன்னாள்) ரிஷாத் பதி­யுதீன், சட்ட மா அதிபர் உட்­பட 9 பேர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பிட்ட மனு விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு திகதி குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நிலையில் 2019 ஆகஸ்ட் மாதம் தீர்ப்­பினை அறி­விப்­ப­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­பதி மஹிந்த சம­ய­வர்­தன விருப்பம் தெரி­விக்­கா­மை­யினால் இவ்­வ­ழக்­கினை ஆரம்­பத்­தி­லி­ருந்தே வேறு நீதி­ப­திகள் குழாம் மூலம் விசா­ரணை செய்­வ­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலைவர் தீர்­மா­னித்தார். அதன் அடிப்­ப­டை­யிலே புதிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் இவ்­வ­ழக்கு விசா­ரிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

சுற்­றாடல் சட்டம் மற்றும் நடை­மு­றை­யி­லுள்ள சட்­டத்­திற்கு முர­ணாக மேற்­கொள்­ளப்­பட்ட காடழிப்பு, சட்டவிரோத நிர்மாணங்கள் மேற்கொண்ட நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.