புத்தளத்தில் மு.கா. – அ.இ.ம.கா. இணைந்தே பயணிக்க வேண்டும்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆபிதீன் எஹியா

0 743

புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொள்ள அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி­ரஸும் இணைந்தே பய­ணிக்க வேண்­டு­மென முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னரும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் கற்­பிட்டி பிராந்­திய அமைப்­பா­ள­ரு­மான ஆப்தீன் எஹியா தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
கடந்த 30 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை தொடர்ந்தும் இழந்து வந்­ததன் விளை­வாக பல­த­ரப்­பட்ட சவால்­க­ளையும், இழப்­பு­க­ளையும், துரோ­கங்­க­ளையும் மட்­டுமே எதிர்­கொண்டு விரக்­தியின் விளிம்பில் வாழ்ந்து கொண்­டி­ருந்த புத்­தளம் மாவட்ட மக்­களின் பிரார்த்­த­னைகள் எல்­லாமே எப்­ப­டி­யா­வது தமக்­கான ஒரு எம்.பியைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­ப­தா­கவே உள்­ளன. இந்த அடி­மைத்­தளை வாழ்­வி­லி­ருந்து நாம் விடு­பட வேண்டும். அதற்­கா­கவே கடந்த ஒன்­றரை வருட கால­மாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் போரா­ளி­களும், உயர்­பீட உறுப்­பி­னர்­களும் புத்­த­ளத்­திலே பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வ­மொன்றைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மாக இருந்தால் தனித்தே போட்­டி­யிட வேண்­டு­மென்று அய­ராது உழைத்து வரு­கி­றார்கள்.

இதற்­காக வேண்டி எந்த விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளையும் செய்தும் பய­ணிக்கத் தயார் என்­ப­த­னையும் பெரு­ம­ன­தோடு கட்­சியின் தேசியத் தலை­மையும் உறு­தி­யாக முடி­வுக்கு வந்­தது. இவ்­வா­றான சூழ்­நி­லையில் முஸ்லிம் காங்­கிரஸ் எவ்­வா­றான முடி­வு­களை எடுக்கும் என்­றி­ருந்த நிலையில் இன்று காலம் கனிந்து வந்­தி­ருக்­கின்­றது. கடந்த வாரம் நடை­பெற்ற முஸ்லிம் காங்கி­ரஸின் உயர்­பீடக் கூட்­டத்தில் புத்­தளம் மாவட்ட போரா­ளி­களின், உயர்­பீட உறுப்­பி­னர்­களின் வேண்­டு­கோ­ளை­யேற்று கட்­சியின் தலைவர் இதற்­கான சமிக்­ஞையை வெளி­யிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் அடுத்த கட்­ட­மாக இரண்டு தலை­மை­களும் ஒன்­றி­ணைந்து புத்­தளம் மாவட்ட மக்­களின் மனோ நிலை­யையும் போரா­ளி­களின் மனோ நிலை­க­ளையும் புரிந்து நியாயமாகவும் நேர்மையாகவும் இரு தலைமைகளுமே முடிவுக்கு வரவேண்டும். சலசலப்பில்லாத சுமுகமான ஒற்றுமையோடு பயணிக்கக்கூடிய ஆற்றல்களை இறைவன் வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். -Vidivelli

  • முஹம்மது சனூன்

Leave A Reply

Your email address will not be published.