கஷோக்­ஜியின் கொலை­யுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை நாடு­க­டத்­து­மாறு சவூதியிடம் துருக்கி வேண்டுகோள்

விசாரணைக்கு சவூதி ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் குற்றச்சாட்டு

0 761

விசா­ர­ணைக்கு சவூதி ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தில்லை எனத் தெரி­வித்­துள்ள துருக்­கிய ஜனா­தி­பதி ரிசெப் தைய்யிப் அர்­துகான், இஸ்­தான்­பூலில் வைத்து படு­கொலை செய்­யப்­பட்ட பத்தி எழுத்­தா­ள­ரான கஷோக்­ஜியின் கொலை­யுடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்­களை சவூதி அரே­பியா நாடு­க­டத்த வேண்­டு­மென கடந்த சனிக்­கி­ழமை வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

கடந்த நவம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 1 ஆம் திகதி வரை ஆஜென்­ரீ­னாவின் புவனர்ஸ் அயர்ஸில் நடை­பெற்ற ஜீ 20 உச்சி மாநாட்­டின்­போது சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மா­னிடம்  துருக்­கிய ஜன­ா தி­பதி ரிசெப் தைய்யிப் அர்­துகான் இதனை உறு­தி­படத் தெரி­வித்தார்.

ஊட­க­வி­ய­லாளர் கமால் கஷோக்ஜி தனது விவா­க­ரத்து தொடர்­பான ஆவ­ணங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்­தினுள் கடந்த ஒக்­டோபர் மாதம் 02 ஆம் திகதி நுழைந்­ததன் பின்னர் காணாமல் போயி­ருந்தார்.

இரண்டு வாரங்­க­ளுக்கும் அதி­க­மாக மறு­த­லித்துக் கருத்துத் தெரி­வித்து வந்த சவூதி அரே­பியா,  துருக்­கியின் இஸ்­தான்­பூ­லி­லுள்ள தனது நாட்டுத் துணைத் தூதர­கத்­தினுள் ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்­டுள்ளார் என்­பதை ஏற்­றுக்­கொண்­ட­து.

கஷோக்­ஜியை கொலை­செய்து அவ­ரது உட­லு­றுப்­புக்­களை வேறாக்­கி­ய­தாகக் கூறப்­படும் சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த 18 சந்­தேக நபர்­களும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், கொலை தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­படும் எனவும் அந் நாடு அறி­வித்­துள்­ளது.

சர்­வ­தேச சமூ­கத்தின் முன்­னா­லுள்ள கேள்­வி­க­ளுக்கு விடை காணப்­பட வேண்­டு­மானால் இவ்­வா­றான சந்­தேக நபர்கள் துருக்­கி­யி­லேயே விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென அர்­துகான் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்

இந்தப் படு­பா­தக செய­லுக்கு உத்­த­ர­விட்­ட­வர்­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­வர்­களும் யாராக இருந்­தாலும் அவர்கள் உட­ன­டி­யாகக் கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும். அவ்­வா­றான சூத்­தி­ர­தா­ரிகள் கண்­ட­றி­யப்­ப­டா­விட்டால், ஒட்­டு­மொத்த உல­கத்­தையும்; இஸ்­லா­மிய சமூ­கத்­தையும் திருப்­தி­ய­டையச் செய்ய முடி­யாது எனவும் அவர் தெரி­வித்தார்.

கஷோக்­ஜியின் உடல் எங்­கி­ருக்­கி­றது, கஷோக்­ஜியைக் கொலை செய்ய வரு­கை­தந்த குழு­வி­ன­ருக்கு உத­வி­ய­வர்கள் எனக் கூறப்­படும் நபர்கள் உள்­ளிட்ட தக­வல்­களை சேக­ரிக்கும் துருக்­கிய விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு சவூதி அரே­பியா உதவி வழங்க மறுத்து வருகின்றது எனவும் அர்துகான் குற்றம்சாட்டினார்.

பிராந்தியத்தில் சவூதி அரேபியாவுடன் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள விரும்பும் துருக்கிய ஜனாதிபதி அர்துகான் அரச குடும்பத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.