சீனாவிலிருந்து நாடு திரும்பிய 33 மாணவர்களும் ஞாயிறன்று வீடு செல்வர்.

0 762

கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான சீனாவின் வூஹான் நக­ரி­லி­ருந்து விஷேட ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்டு தியத்­த­லாவை இரா­ணுவ முகாமில் வைத்­திய கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட்­டி­ருக்கும்  33 மாண­வர்கள் எதிர்­வரும் 16 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அவர்­க­ளது வீடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

33 மாண­வர்­க­ளுக்கும் கொரோனா வைரஸ் தொற்­றுக்­கான அறி­குறி இன்­மையால் அவர்கள் விஷேட வைத்­திய கண்­கா­ணிப்­பி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்டு எதிர்­வரும் 16 ஆம் திகதி வீடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தொற்று நோய்­க­ளுக்­கான விஷேட வைத்­திய நிபுணர் சுஜித் சம­ரவீர தெரி­வித்தார்.

இந்த மாண­வர்கள் கடந்த முதலாம் திகதி சீனா­வி­லி­ருந்து இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்டு அன்று முதல் தொடர்ந்து வைத்­திய கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். நாளை அவர்­க­ளது விஷேட வைத்­திய கண்­கா­ணிப்பு கால எல்லை நிறை­வுக்கு வரு­கி­றது. அவர்­க­ளுக்கு 2019ncov வைரஸ் தொற்று இல்லை என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் அவர்­களைத் தொடர்ந்தும் முகாமில் தடுத்து வைப்பதற்கு அவசியமில்லை எனவும் டாக்டர் சுஜித் சமரவீர தெரிவித்தார்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.