இலங்கை-இந்திய ஒப்பந்தமே முஸ்லிம்கள் இன ரீதியான காட்சிகளை ஆரம்பிக்க காரணம்
இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டு
இந்நாட்டில் முன்னர் முஸ்லிம்கள் மத்தியில் இன ரீதியாகவோ மத ரீதியாகவோ அரசியல் கட்சிகள் இருக்கவில்லை. அவ்வாறான ஒரு கட்சி உருவாக 1982 இல் ஏற்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தமே காரணமாகுமென அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர் சந்திப்பொன்றின்போதே அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
1987க்கு முன்னர் இந்நாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் மத ரீதியாகவோ இன ரீதியாகவோ அரசியல் கட்சியொன்றிருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பிரச்சினை உக்கிரமடைந்த காலகட்டத்தில் ஜே.ஆர்.ஜயவர்தனவும் காமினி திஸாநாயக்கவும் இந்தியாவுடன் செய்துகொண்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக இடம்பெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலின்போதே காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்களால் முதன் முதலாக முஸ்லிம் பெயரில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது.
அதன் பிறகே முஸ்லிம் மதத்தின் பெயர்களாலும் முஸ்லிம் இனங்களின் பெயர்களாலும் பல அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டன. இதற்கு காரணமானவர்கள் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் காலஞ் சென்ற காமினி திஸாநாயக்க ஆகியோர்களுமே என்றும் அவர் தெரிவித்தார்.-Vidivelli
- செங்கடகல நிருபர்