தமிழ் கூட்டமைப்புக்கு பேச்சில் அக்கறையில்லை

டில்லியில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவிப்பு

0 695

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தற்­ச­மயம் பேச்­சு­வார்த்­தை­களில் அக்­க­றை­யில்லை. அவர்கள் இலங்­கையில் பெரும்­பான்மை சமூ­கத்­தினர் ஏற்றுக் கொள்­ளாத விட­யங்­க­ளையே கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்தில் உள்­ள­வாறு அதி­காரப் பர­வ­லாக்­கலை முன்­னெ­டுப்­ப­தற்குப் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தானால் தமி­ழர்­க­ளுக்­காகப் பேசக்­கூ­டிய பொறுப்­புள்ள பிர­தி­நி­திகள் எமக்குத் தேவை.

அதனால் பொதுத் தேர்­தலை நடத்­திய பின்னர் தமி­ழர்­க­ளினால் தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டிய பிர­தி­நி­தி­க­ளுடன் எதிர்­காலம் குறித்துப் பேச­வ­ரு­மாறு கேட்போம் என்று பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தனது இந்­திய விஜ­யத்­தின்­போது டில்­லியில் வைத்து ‘ த இந்து ‘ பத்­தி­ரி­கைக்கு அளித்த நேர்­கா­ணலில் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

பிர­தமர் ராஜபக் ஷவை அந்தப் பத்­தி­ரி­கையின் இரா­ஜ­தந்­திர விவ­கார ஆசி­ரியர் சுஹா­சினி ஹைதர் நேற்று முன்­தினம் நேர்­காணல் செய்தார். இதன்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கை தமிழ் மக்­களின் நலன்கள் தொடர்­பான தங்­க­ளது அக்­க­றையை புது­டில்­லியில் பிர­தமர் மோடியும் கொழும்­புக்கு விஜயம் செய்த வேளையில் வெளி­யு­றவு அமைச்சர் எஸ். ஜெய்­சங்­கரும் வெளிக்­காட்­டி­யி­ருந்­தார்கள். உங்­க­ளது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து பிர­தி­ப­லிப்­பையும் அவர்கள் எதிர்­பார்த்­தார்கள். இதற்கு நீங்கள் எவ்­வாறு பதி­ல­ளிக்கப் போகி­றீர்கள் என்று பிர­தமர் ராஜபக் ஷவிடம் கேட்­கப்­பட்ட போது அவர், ‘இந்­தி­யாவின் இந்த அக்­க­றை­களை நாம் எப்­போதும் விளங்கிக் கொண்­டி­ருக்­கின்றோம். போர் முடி­வுக்கு வந்த பின்னர் நாம் தேர்­தல்­களை நடத்­தினோம். வட­ப­குதி மக்கள் தங்­க­ளது சொந்த முத­ல­மைச்­சரைத் தெரிவு செய்­யவும் அனு­ம­தித்தோம். எமக்குத் தோல்­வியே கிடைக்­கு­மென்று தெரிந்­தி­ருந்தும் கூட நாம் அங்கு மாகாண சபைத் தேர்­தலை நடத்­தினோம். ஆனால் எது­வுமே முன்­னோக்கி நக­ர­வில்லை. எதிர்­வரும் ஏப்­ரலில் எமது பாரா­ளு­மன்றத் தேர்­த­லையும் பிறகு மாகாண சபை தேர்­த­லையும் நடத்­த­வி­ருக்­கின்றோம். யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்று பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு குழு­வொன்றை நாம் நிய­மிப்போம்’ என்று இதற்கு பிர­தமர் மஹிந்த பதி­ல­ளித்தார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அதி­காரப் பர­வ­லாக்­கத்­துக்கு மேலாக அபி­வி­ருத்­திக்கு முன்­னு­ரிமை கொடுத்­தி­ருக்­கிறார். முன்­னோக்கி செல்­வ­தற்­கான வழி இது என்­பதே அவ­ரது நம்­பிக்கை. உங்கள் இரு­வ­ரி­னதும் நிலைப்­பா­டு­களில் வேறு­பா­டுகள் இருக்­கின்­றதா என்ற கேள்­விக்கு பதி­ல­ளித்த பிர­தமர், ‘இல்லை. இல்லை. மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி தேவைப்­ப­டு­கி­றது. 30 வரு­டங்­க­ளாக அபி­வி­ருத்­தி­யின்றி அவர்கள் கவ­லைப்­ப­டு­கின்­றார்கள். அதனால் அந்தப் பகு­தி­களை முதலில் அபி­வி­ருத்தி செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது ‘ என்றார்.

இலங்­கையின் தேசிய தின வைப­வத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்­பதை நிறுத்­து­வ­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மானம் தொடர்­பாக சர்ச்சை நில­வி­யது. இது தமி­ழர்­க­ளுக்கு கூறப்­பட்ட ஒரு செய்­தி­யாக இருந்தால் அவர்­க­ளுக்கு மீள நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு எவ்­வாறு செயற்­ப­டு­வீர்கள் என்று சுஹா­சினி ஹைதர் கேட்ட போது, ‘உலகம் பூரா­கவும் பார்த்­தி­ருப்­பீர்கள். தேசிய கீதம் பிர­தா­ன­மாக ஒரு மொழி­யி­லேயே இசைக்­கப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில் பல மொழிகள் இருக்­கின்­றன. என்­றாலும் உங்­க­ளது தேசிய தினங்­களில் நீங்கள் ஒரு மொழி­யில்தான் தேசிய கீதத்தை இசைக்­கின்­றீர்கள். இதே முறைதான் இலங்கையிலும். நான் யாழ்ப்பாணம் போகும்போது பாடசாலையொன்றில் அவர்கள் தமிழில் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள். தேசிய கீதத்தை தங்களது விருப்பப்படி இசைப்பதற்கு மக்கள் விரும்பினால் எந்த ஆட்சேபனையும் இல்லை. சில அரசியல்வாதிகளே இதுகுறித்துப் பிரச்சினையை கிளப்புகிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து பொதுமக்களுக்கு அக்கறை இல்லை என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.