எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகத் திடமான முடிவெடுத்திருக்கிறேன் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை உப பிரதேச் செயலக முன்றலில் நேற்றுமுன்தினம் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் பேசுகையில்,எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகத் திடமான முடிவெடுத்திருக்கிறேன்.
ஏனெனில், இங்குள்ள திறமைமிக்க புத்திஜீவிகள், இளைஞர்களை இணைத்துக் கொண்டு நாங்கள் தனித்துவமாகப் போட்டியிடுவதற்கு முடிவெடுத்திருக்கிறோம்.
அம்பாறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.
ஒவ்வொரு கிராமத்திற்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன.
இன்றும்கூட திருக்கோவில், தம்பிலுவில் பிரதேச மக்களை சந்தித்து அங்கு இடம்பெறும் பாரிய கொள்ளை, கொலைச் சம்பவங் கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளை அழைத்துப்பேசியிருக் கின்றேன்.
பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் பல அபிவிருத்திப் பணிகள் செய்வதற்காகவும் அந்த மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இன்று நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டிடயிட முடி வெடுத்திருக்கிறேன். அதற்கு நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் அந்த மக்கள் பாரிய ஆதரவை வழங்கி வருகிறார் என கூறினார்.-Vidivelli
- பாறுக் ஷிஹான்