இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்

0 840

உலகின் 13 நாடு­களில் இது­வரை பர­வி­யுள்ள ‘கொரோனா’ வைரஸ் இலங்­கைக்­குள்ளும் பரவும் அச்­சு­றுத்­த­லுடன் கூடிய சூழ­லுள்­ள­தாக சுகா­தாரத் தரப்­பினர் தெரி­விக்­கின்­றனர். இந்­நி­லையில் உல­க­நா­டுகள் பல­வற்­றிலும் இந்த வைரஸ் தொற்­றுடன் கூடி­ய­வர்கள் உள்­நு­ழை­வதைக் கண்­ட­றிந்து தடுக்கப் பயன்­ப­டுத்­தப்­படும் டேர்மல் ஸ்கேனிங் முறைமை ஊடாக, அவ்­வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­னோரை நூற்­றுக்கு நூறு வீதம் கண்­ட­றி­வது சாத்­தி­ய­மற்­ற­தெ­னவும், கொரோனா வைரஸ் சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க இலங்கை தயார் நிலை­யி­லேயே உள்­ள­தா­கவும் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அனில் ஜாசிங்க தெரி­வித்தார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் இலங்கை மக்கள், இந்த கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவை இல்­லை­யெனத் தெரி­வித்த, சுகா­தார அமைச்சின் தொற்­றுநோய்ப் பிரிவின் பிர­தான தொற்­றுநோய் ஆய்வு வைத்­திய நிபுணர் வைத்­தியர் சுதத் சம­ர­வீர, வைரஸ் தாக்­கத்­துக்கு எதி­ரான பாது­காப்பு நடை­மு­றை­களை கண்­டிப்­பாகக் கையா­ளு­மாறு பொது­மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

இது­வரை இலங்­கையில் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான நோயா­ளர்கள் எவரும் அடை­யாளம் காணப்­ப­டா­த­போதும், அந்த தொற்­றினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளென சந்­தே­கிக்­கப்­படும் நால்வர் நேற்று முன்­தினம் முதல், ஐ.டி.எச். காய்ச்சல் வைத்­தி­ய­சா­லை­யென பர­வ­லாக அறி­யப்­படும் அங்­கொடை தொற்­றுநோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­பெற்று வரு­கின்­றனர். குறித்த வைத்­தி­ய­சா­லையில் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள விஷேட சிகிச்­சை­ய­றை­களில் அவர்கள் சிகிச்­சை­பெற்று வரு­வ­தா­கவும், அவர்கள் சுவாசப் பிரச்­சி­னை­யுடன் கூடிய காய்ச்சல் கார­ண­மாக சிகிச்­சை­க­ளுக்­காக வந்­த­வர்கள் எனவும், இது­வரை அவர்கள் கொரோனா வைரஸ் தாக்­கத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளமை உறுதி செய்­யப்­ப­ட­வில்லை எனவும் குறித்த வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் அசித்த அத்­த­நா­யக்க தெரி­வித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் முதலில் அடை­யாளம் காணப்­பட்ட சீனாவின் வுஹான் மாகா­ணத்தில் கல்வி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட பின்னர் நாடு­தி­ரும்­பிய இலங்கை மாணவர் ஒருவர், மற்­றொரு இலங்கை பெண், இரு சீன பெண்­களே இவ்­வாறு குறித்த வைத்­தி­ய­சா­லையில் சிறப்பு கண்­கா­ணிப்பில் சிகிச்­சை­பெற்று வரு­ப­வர்­க­ளென வைத்­தியர் அசித்த அத்­த­நா­யக்க மேலும் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும், இந்த நால்­வரின் இரத்த மாதி­ரி­களும் பொரளை மருத்­துவ பரி­சோ­தனை நிலை­யத்­திற்கு அனுப்­பப்­பட்ட நிலையில், அந்த இரத்த மாதிரி பரி­சோ­த­னை­களில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்­றுக்கு இலக்­கா­க­வில்­லை­யென உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அங்­கொடை தொற்­றுநோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து குறித்த இரத்த மாதி­ரிகள் அனுப்­பப்­பட்­ட­தா­கவும், அது­கு­றித்த ஆரம்­ப­கட்ட பரி­சோ­த­னை­களில் குறித்த நான்கு இரத்த மாதி­ரி­க­ளுக்கும் உரித்­தா­ன­வர்கள் கொரோனா வைரஸ் தொற்­றுக்கு இலக்­கா­க­வில்லை என்­பது தெரி­ய­வந்­த­தா­கவும் பொரளை மருத்­துவ பரி­சோ­தனை நிலை­யத்தின் பணிப்­பாளர், வைத்­தியர் ஜய­ருவன் பண்­டார தெரி­வித்தார். எவ்­வா­றா­யினும் அது­கு­றித்து தொடர்ந்தும் மேல­திக பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் வைத்­தியர் ஜய­ருவன் பண்­டார தெரி­வித்தார்.

இந்நிலையில், இவ்­வா­றான வைரஸ் தொற்று குறித்து இரத்த மாதிரி பரி­சோ­த­னைகள் ஊடாக உறு­தி­செய்யும் பிரதான நிறு­வ­ன­மாக பொரளை மருத்­துவ பரி­சோ­தனை நிலையம் விளங்கும் நிலையில், அங்கு நேற்று நண்­பகல் வரை பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இரத்த மாதி­ரி­களை மையப்­ப­டுத்தி நாட்டில் இது­வரை கொரோனா வைர­ஸினால் எவரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும் பொரளை மருத்­துவ பரி­சோ­தனை நிலையம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத­னி­டையே, கொரோனா வைரஸ் இலங்­கையில் ஏற்­ப­டுத்­த­வல்ல தாக்­கத்தை குறைப்­ப­தற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் சுகா­தார அமைச்சின் தொற்­றுநோய் தடுப்புப் பிரிவு உள்­ளிட்ட உரிய தரப்­பினர் முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும், பொது­மக்கள் குறித்த தொற்­றி­லி­ருந்து பாது­காத்­துக்­கொள்ள உரிய பாது­காப்பு வழி­மு­றை­களைக் கையா­ளு­மாறும் சுகா­தார அமைச்சின் தொற்­றுநோய் தடுப்புப் பிரிவு நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

முதன் முறை­யாக சீனாவின் ஹுபேய் மாகா­ணத்­துக்கு உட்­பட்ட வுஹான் நகரில் கண்­ட­றி­ய­ப்பட்ட கொரோனா எனும் வர்க்­கத்தை சேர்ந்த இந்த வைர­ஸா­னது சுவாச நோய் சார்ந்த வைர­ஸென உறுதி செய்­யப்பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் தொற்­றுநோய் தடுப்புப் பிரிவு தெரி­வித்­தது.

இந்த வைரஸ் முதலில் பர­விய சீனாவில் நேற்று நண்­பகல் வரை 56 பேர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். அத்­துடன் கொரோனா வைரஸ் தொற்­றுக்கு இலக்­கான 2000 பேர் உல­கெங்கும் இது­வரை அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில், அவர்­களில் 1975 பேர் சீனாவில் வசிப்­ப­வர்­க­ளாவர். வைரஸ் வேக­மாகப் பர­வு­வதைத் தடுக்க சீனாவின் சில நக­ரங்­களில் போக்­கு­வ­ரத்­திற்குத் தடை விதிக்­கப்­பட்­டதால், சுமார் 4 கோடி பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில், அதி­க­ரித்­துள்ள கொரோனா வைரஸ் அச்­சத்­தினால் சீனாவின் 13 நக­ரங்­க­ளுக்­கான சுற்­றுலா பய­ணத்­தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட நக­ரங்­க­ளுக்கு செல்­லவோ அங்­கி­ருந்து வெளி­யே­றவோ வேண்­டா­மென அதி­கா­ரி­களால் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கொரோனா தாக்கம் அதிகம் காணப்­படும் ஹூபெய் மாகா­ணத்தில் சுமார் 36 மில்­லியன் மக்கள் வசித்து வரு­கின்­றனர்.

வைரஸ் தாக்கம் முதலில் அடை­யா­ளங்­கா­ணப்­பட்ட சீனாவின் வுஹான் நகரில் 11 மில்­லியன் பேர் வசித்து வரு­வ­துடன், அங்கு ஆயிரம் கட்­டில்­களைக் கொண்ட வைத்­தி­ய­சா­லையை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.இந்த நட­வ­டிக்­கைகள் ஆறு நாட்­களில் நிறை­வ­டை­ய­வுள்­ள­தாக சீன அதி­கா­ரிகள் கூறி­யுள்­ளனர்.

இவை இவ்­வா­றி­ருக்க, இந்த கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகா­தார அமைச்சின் தொற்­றுநோய் தடுப்புப் பிரிவின் பிர­தான தொற்று நோய் ஆய்­வாளர் வைத்­தியர் சுதத் சமரவீர பின்­வ­ரு­மாறு தெளி­வு­ப­டுத்­தினார்.
‘ஏற்­க­னவே கொரோனா வைரஸ் ரகத்தில் இரு வைரஸ் தொற்­றுக்கள் கண்­டு­பி­டிக்­கப்பட்­டுள்­ளன. இந்த கொரோனா வைரஸ் தொற்று கார­ண­மாக அதிக காய்ச்சல், தடிமன், சுவாசப் பிரச்­சினை போன்­றன நோய் அறி­கு­றி­க­ளாகத் தென்­படும்.

உண்­மையில் இந்த வைரஸ் தொற்று தொடர்பில் இலங்­கைக்­குள்ள அச்­சு­றுத்­த­லா­னது, இந்த தொற்­றுநோய் பரவும் ஒரு நாட்­டி­லி­ருந்து அதனால் பாதிக்­கப்­பட்ட ஒருவர் இலங்­கைக்கு வரு­வ­தாகும். எனவே அவ்­வச்­சு­றுத்­தலைக் குறைக்க தற்­போதும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்பட்­டுள்­ளன. அதன்­படி விமானப் பய­னி­களை விமா­னங்­க­ளுக்­குள்­ளேயே நாம் தெளி­வு­ப­டுத்­து­கின்றோம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்­பி­லான அறி­கு­றிகள் உள்­ள­வர்கள் எவ­ரேனும் இருப்பின் கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள விஷேட பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு நாம் அறி­வு­றுத்­து­கின்றோம். அதற்கு மேல­தி­க­மாக டேர்மல் ஸ்கேனர் ஊடாக பய­ணி­களை பரி­சோ­தனை செய்­கின்றோம். அவ்­வாறு சோத­னை­யின்­போது வைரஸ் தொற்­றுள்­ள­வர்கள் தொடர்பில் தகவல் வெளிப்­பட்டால் உட­ன­டி­யாக அவர்­களை ஐ.டி.எச். தொற்­றுநோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லைக்கு பாது­காப்­பாக அழைத்­து­செல்ல நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக, இன்­னொரு விட­யத்தை கூற­வேண்டும். இந்த வைரஸ் தொற்று குறித்து வைத்­தி­யர்கள் மிக எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ் தொற்றின் அறி­கு­றி­க­ளுடன் எவ­ரேனும் சிகிச்­சைக்கு வந்தால், அந்த நோயா­ளியின் அண்­மைக்­கால பயண விப­ரங்கள் குறித்தும் வைத்­தி­யர்கள் அவ­தானம் செலுத்த வேண்டும். தற்­போ­தைய ஆய்­வு­களின் பிர­காரம், இந்த வைரஸ் உடலில் செயற்­பட முடி­யு­மான காலம் இரு வாரங்­க­ளெனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அப்ப­டி­யானால் ஒருவர் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த இரு வாரங்­க­ளில்­கூட இந்த வைரஸ் தொற்றின் அறி­கு­றி­க­ளு­டன்­கூ­டிய நோய் நிலை­மை­க­ளுக்கு ஆளா­கலாம். எனவே, அது­கு­றித்தும் வைத்­தி­யர்­களும், பொது­மக்­களும் மிக அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும்’ என்றார்.

இத­னி­டையே இலங்­கையில் பெருந்­தொ­கை­யான சீன நாட்­ட­வர்கள் வசிக்கும் நிலையில், நேற்றுக் கொண்­டா­டப்­ப­ட­வி­ருந்த சீனாவின் லூனார் எனப்­படும் புது­வ­ருடக் கொண்­டாட்­டங்­களை மைய­ப்ப­டுத்தி அவர்­களில் பலர் சீனா சென்­றி­ருந்­தனர். எனினும் அங்கு அக்­கொண்­டாட்­டங்கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.
இவ்­வா­றான பின்­ன­ணியில் அவ்­வாறு சீனா சென்­ற­வர்கள் மீள இலங்­கைக்கு திரும்­பு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­ரித்­துள்­ளதால், கொரோனா வைரஸும் இலங்­கைக்குள் ஊடு­ரு­வு­வ­தற்­கான வாய்ப்­பு­களும் அதி­க­ரித்­துள்­ள­தாக சுகா­தாரத் தரப்­பினர் தெரி­விக்­கின்­றனர்.

இது­கு­றித்து சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அனில் ஜாசிங்க தெரி­விக்­கையில்,

‘ இந்த வைரஸ் தொற்­று இலங்­கையில் பர­வு­வதைத் தடுக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்­துள்ளோம். கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் இரு இடங்­களில் டேர்மல் ஸ்கேனிங் செய்­ய­ப்ப­டு­கின்­றன. இந்­நி­லையில் குறித்த வைரஸ் தொற்று கார­ண­மாக காய்ச்­ச­லுடன் கூடிய அறி­கு­றி­யுடன் ஒருவர் நாட்­டுக்குள் வந்தால் அங்கு அடை­யாளம் காண­மு­டியும்.

எனினும், இதனை நான் நூற்­றுக்கு நூறு வீதம் வெற்­றி­க­ர­மான நட­வ­டிக்­கை­யெனக் கூற­மாட்டேன். ஏனெனில், இந்த வைரஸ் தொற்று ஒரு­வரின் உடலில் செயற்­பட அல்­லது தாக்­கத்தை வெளிப்­ப­டுத்த இரு வாரங்கள் வரை செல்லும். எனவே அவ்­வா­றான பின்­ன­ணியில் காய்ச்சல் இல்­லாமல் ஒருவர் அந்த தொற்­றுடன் வந்தால், அவர் நாட்­டுக்குள் தடை­யின்றி வரு­வ­தற்­கான வாய்ப்­புள்­ளது. அவர் வந்த பின்னர் வைரஸ் தாக்­கத்­துக்கு ஆளா­கலாம்.

அவ்­வா­றான நிலை­மை­யொன்று ஏற்­பட்டால் அதற்கு முகம் கொடுக்­கவும் தயார்­ப­டுத்­தல்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. ஐ.டி.எச். தொற்­றுநோய் தடுப்பு வைத்­தி­ய­சாலை உள்­ளிட்ட சில வைத்­தி­ய­சா­லை­களில் அவ்­வா­றான நிலைமைகளுக்கு முகம்கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய ஊழியர்கள், சேவையாளர்களுக்கும் பாது­காப்பு வழி­மு­றைகள் குறித்து அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன என்றார்.

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடை முறைகள் தொடர்பிலும் சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், விஷேடமாக சன நெரிசலுள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதுடன், ஏனையோரும் தேவையின்றி அவ்வறான இடங்களில் நடமாடுவதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், காய்ச்சல், தடிமன் நோய்களால் பாதிக்கப்பட்டோர் அருகிலிருப்பதை தவிர்த்தல், இருமும் போது கைக்குட்டை அல்லது டிஸூ கொண்டு முகத்தை மூடிக்கொள்ளுதல், அவ்வாறு டிஸூ பயன்படுத்திய பின்னர் அதனை உரிய முறையில் அகற்றுதல், கைகளை சவர்க்காரமிட்டு சுத்தம் செய்துகொள்ளுதல், அடிக்கடி மூக்கு, முகத்தை ஸ்பரிசம் செய்வதை தவிர்த்தல் போன்ற பாதுகாப்பு வழி முறைகளைக் கையாளுமாறு சுகாதார அமைச்சின் ஊடாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.