ஹஜ் ஏற்பாடுகளை அரசு பொறுப்பேற்கும்

ஹஜ் குழுவினருடனான கலந்துரையாடலில் பிரதமர் தெரிவிப்பு

0 975

2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களை அர­சாங்கம் பொறுப்­பேற்று மேற்­கொள்­வ­தற்கு பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ தீர்­மா­னித்­துள்ளார்.

நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை பிர­தமர் ஹஜ் குழு­வி­ன­ருடன் நடாத்­திய கலந்­து­ரை­யா­டலின் போதே இந்த இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.
ஹஜ் முக­வர்­களில் பலர் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தையும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து கூடு­த­லான பணத்தை அற­வி­டு­வ­தையும் கருத்திற்கொண்டு இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்கருதி இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

கடந்த காலங்­களில் ஹஜ் முக­வர்கள் சிலரின் ஏமாற்று நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக அநேக ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பல அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குட்­பட்­ட­தாலும் மற்றும் சில ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் உரிய கட்­டணம் செலுத்­தியும் கட­மையை நிறை­வேற்ற முடி­யாமல் போன­தையும் கவ­னத்திற் கொண்டு பிர­த­மரால் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்­தோ­னே­ஷி­யாவில் ஒரு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் வரு­டாந்தம் பய­ணிக்­கி­றார்கள். இவர்கள் அர­சாங்­கத்தின் ஏற்­பாட்­டி­லேயே அனுப்பி வைக்­கப்­ப­டு­கி­றார்கள். இதே போன்றே மலே­ஷியா மற்றும் இந்­தியா போன்ற நாடு­க­ளிலும் அர­சாங்­கத்­தி­னூ­டா­கவே ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பய­ணங்கள் இடம்­பெ­று­கின்­றன என்­பதைச் சுட்­டிக்­காட்­டிய பிர­தமர் மகிந்த ராஜபக் ஷ ஏன் சில ஆயிரம் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைக் கையாள்­வ­தற்கு இலங்­கையில் முக­வர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர் என வினா எழுப்­பி­ய­துடன் முக­வர்­களை இச்­சே­வை­யி­லி­ருந்து விடு­வித்து அர­சாங்­கமே முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் ஹஜ் குழுவே ஹஜ் ஏற்­பா­டு­களைக் கையெ­டுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் ஹஜ் குழு உறுப்­பி­னரும் முன்னாள் வக்பு சபை உறுப்­பி­ன­ரு­மான அஹ்கம் உவைஸ் விடி­வெள்­ளிக்குக் கருத்து தெரி­விக்­கையில், 2020 ஆம் ஆண்டு ஹஜ் கட்­ட­ண­மாக ஐந்து இலட்சம் ரூபா நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹரம் ஷரீ­பி­லி­ருந்து ஆகக் கூடி­யது 300 மீற்­றர்­க­ளுக்­குட்­பட்ட பகு­தியில் 5 நட்­சத்­திர ஹோட்­டல்­களில் தங்க வைக்­கப்­ப­டு­வார்கள். மினாவில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளக்கு அதிக வச­தி­யான “பீ” தரத்­தி­லான கூடா­ரங்கள் ஏற்­பாடு செய்­யப்­படும். மினா­வி­லி­ருந்து ஷைத்­தா­னுக்கு கல் எறிய செல்­வ­தற்கு மாற்றுத் திற­னா­ளி­க­ளுக்கு சவூதி ஹஜ் அமைச்சு மின்­சார வாகனம் ஏற்­பாடு செய்து தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது.

சவூதி விமான சேவையைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் பேச்­சு­வார்த்தை நடாத்­தப்­பட்­டுள்­ளது.

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு இலங்கை உணவு வழங்­கு­வ­தற்கு இங்­கி­ருந்து சமை­யற்­கா­ரர்கள் மற்றும் வழி­காட்­டு­வ­தற்­காக மெள­ல­வி­மார்கள் அழைத்துச் செல்­லப்­ப­டு­வார்கள்.

இலங்கை அர­சாங்கம் இவ்­வ­ருடம் முதல் ஹஜ் ஏற்­பா­டு­களைக் கையேற்­றுள்­ள­தாக சவூதி ஹஜ் அமைச்­சுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் அந்த அர­சாங்­கத்தின் உத­வியும் கோரப்­பட்­டுள்­ளது.

ஜித்தா விமான நிலை­யத்தில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­காக ஹஜ் பிரிவு ஒன்­றினை நிறு­வு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­போன்று கிழக்கு மாகாண மக்­களின் நலன் கருதி மத்­தள விமான நிலை­யத்­திலும் ஹஜ் பிரி­வொன்று நிறு­வப்­படும்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துடன் இணைந்து ஹஜ் குழுவினால் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும். விரைவில் சகல அறிவுறுத்தல்களும் ஹஜ் கடமைக்காக தங்களை பதிவு செய்துள்ளவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.

நேற்று முன்தினம் பிரதமருடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் மற்றும் உறுப்பினர்களான அஹ்கம் உவைஸ், அப்துல் சத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.