இலங்கையின் அரசியல் பரப்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்ற விவகாரமே பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவு பற்றிய சர்ச்சையாகும். இந்த ஒலிப்பதிவுகள் அரசியலில் மாத்திரமன்றி நீதித்துறை, பாதுகாப்புத்துறை, ஊடகத்துறைகளிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளன. இதற்கப்பால் சிலரது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப சூழலிலும் இது கடும் பாதிப்பை தோற்றுவித்துள்ளது.
அந்தவகையில் ரஞ்சனுடன் உரையாடியதாக கருதப்படும் நீதிபதிகள் சிலர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர். ஒரு நீதிபதியை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் நேற்று அறிவுறுத்தியுள்ளார். புலனாய்வுப் பிரவின் முன்னாள் பணிப்பாளரும் இதுவிடயமாக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளித்துள்ளார்.
இதற்கப்பால் இந்த விவகாரம் மக்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக இந்த ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதன் பின்னர் அவை அதிகமானோரால் செவிமடுக்கப்பட்டுள்ளன. இது நீதி மற்றும் புலனாய்வுத்துறை சார்ந்தோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் அவற்றில் அரசியல் தலையீடுகள் இருந்தனவா எனும் கேள்வியையும் தோற்றுவித்துள்ளது.
ஒரு நாட்டின் நீதி மற்றும் பாதுகாப்புத்துறைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீதித்துறை மற்றும் குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தராதரம் பாராது பதவி நீக்கம் செய்யப்படுவதுடன் அதிகபட்ச தண்டனையும் வழங்கப்பட வேண்டும்
எனினும், இந்த விவகாரத்தில் ஓர் அரசியல் தரப்பை மாத்திரம் குறிவைத்து காய்நகர்த்தப்படுவதை பொதுப்புத்தியுள்ள அனைவராலும் புரிந்து கொள்ள முடியுமாகவிருக்கும். இந்த குரல் பதிவை வெளிப்படுத்தும் ஊடகங்கள் முற்றிலும் அரசியல் உள்நோக்கங்களும் பக்கச்சார்பும் கொண்டவை என்பது வெளிப்படையானதாகும். பொலிஸாரிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இந்த ஆவணங்கள் எவ்வாறு ஊடகங்களுக்கு கசியவிடப்படுகின்றன எனும் கேள்விக்கும் விடை காணப்பட வேண்டும். தன்னிடம் தற்போதைய ஆளும்தரப்பு அரசியல்வாதிகள் பலரது குரல் பதிவுகள் உள்ளதாகவும் அவற்றை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவை வெளிவந்தால் அவற்றையும் இதே ஊடகங்கள் அதே அளவு முக்கியம் கொடுத்து வெளிப்படுத்துமா என்பது கேள்விக்குரியதே.
எது எப்படியிருப்பினும் இந்த குரல் பதிவு விவகாரத்தினால் நிர்வாணமாக்கப்பட்டிருப்பது இலங்கையின் அரசியல் கலாசாரமேயாகும். ஏலவே பல்வேறு வகைகளிலும் சீரழிந்துள்ள நமது அரசியலை மேலும் பாதாளத்தில் தள்ளுவதாகவே இந்த விவகாரம் அமைந்துள்ளது. அத்துடன் அரசியல்வாதிகளின் ஒழுக்கம் குறித்து ஏலவே இருந்த சந்தேகத்தையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை ரஞ்சனைப் பிடித்து சிறையில் தள்ளுவதால் மாத்திரம் தீர்வைப் பெற்றுவிட முடியாது. மாறாக இந்த விவகாரத்தினால் வெளிப்பட்டுள்ள ஆழ அகலங்கள் ஆராயப்பட வேண்டும். அரசியல் தலையீடுகள் உள்ள அரச துறைகளைக் கண்டறிந்து அவற்றில் களையெடுக்க வேண்டும். ஒழுக்கமும் நேர்மையும் அற்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும். அவர்களை அடுத்த தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்க கூடாது. அவ்வாறு போட்டியிட்டாலும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
இலங்கையின் அரசியலை சுத்தப்படுத்துவதே மக்கள் முன்னுள்ள பிரதான பணியாகும். அதனை சுத்தப்படுத்தாதவரை எந்த துறையிலும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.
இலங்கை மிகவும் திறமையும் நேர்மையும் கொண்ட அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையுமே வேண்டி நிற்கிறது. அவ்வாறானவர்கள் வானத்திலிருந்து விழ முடியாது. மாறாக நம்மத்தியில் உள்ள நல்லவர்களை இனங்கண்டு நாம்தான் அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும். நல்ல அரசியல்வாதிகள் பாராளுமன்ற கதிரைகளில் அமர்வதன் மூலமே ஊழல்கள் நிறைந்துள்ள அரச இயந்திரத்திலும் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை கொண்டுவர முடியுமாகவிருக்கும். இதற்காக ஏப்ரலில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை மக்கள் நன்றாக பயன்படுத்த தயாராக வேண்டும்.
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ஊழல் மோசடிக்கு எதிராக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி யுள்ளதுடன் அரச இயந்திரத்தை வினைத்திறனாக்கும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார். தான் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவர்களின் விடயத்திலும் அவர் கறாராகவே நடந்து கொள்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும். நல்லதொரு அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப அவர் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று பாடுபடுவாராயின் அதுவே அவர் இந்த தேசத்துக்குச் செய்யும் பேருபகாரமாக அமையும்.-இலங்கையின் அரசியல் பரப்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்ற விவகாரமே பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவு பற்றிய சர்ச்சையாகும். இந்த ஒலிப்பதிவுகள் அரசியலில் மாத்திரமன்றி நீதித்துறை, பாதுகாப்புத்துறை, ஊடகத்துறைகளிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளன. இதற்கப்பால் சிலரது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப சூழலிலும் இது கடும் பாதிப்பை தோற்றுவித்துள்ளது.
அந்தவகையில் ரஞ்சனுடன் உரையாடியதாக கருதப்படும் நீதிபதிகள் சிலர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர். ஒரு நீதிபதியை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் நேற்று அறிவுறுத்தியுள்ளார். புலனாய்வுப் பிரவின் முன்னாள் பணிப்பாளரும் இதுவிடயமாக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளித்துள்ளார்.
இதற்கப்பால் இந்த விவகாரம் மக்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக இந்த ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதன் பின்னர் அவை அதிகமானோரால் செவிமடுக்கப்பட்டுள்ளன. இது நீதி மற்றும் புலனாய்வுத்துறை சார்ந்தோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் அவற்றில் அரசியல் தலையீடுகள் இருந்தனவா எனும் கேள்வியையும் தோற்றுவித்துள்ளது.
ஒரு நாட்டின் நீதி மற்றும் பாதுகாப்புத்துறைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீதித்துறை மற்றும் குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தராதரம் பாராது பதவி நீக்கம் செய்யப்படுவதுடன் அதிகபட்ச தண்டனையும் வழங்கப்பட வேண்டும்
எனினும், இந்த விவகாரத்தில் ஓர் அரசியல் தரப்பை மாத்திரம் குறிவைத்து காய்நகர்த்தப்படுவதை பொதுப்புத்தியுள்ள அனைவராலும் புரிந்து கொள்ள முடியுமாகவிருக்கும். இந்த குரல் பதிவை வெளிப்படுத்தும் ஊடகங்கள் முற்றிலும் அரசியல் உள்நோக்கங்களும் பக்கச்சார்பும் கொண்டவை என்பது வெளிப்படையானதாகும். பொலிஸாரிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இந்த ஆவணங்கள் எவ்வாறு ஊடகங்களுக்கு கசியவிடப்படுகின்றன எனும் கேள்விக்கும் விடை காணப்பட வேண்டும். தன்னிடம் தற்போதைய ஆளும்தரப்பு அரசியல்வாதிகள் பலரது குரல் பதிவுகள் உள்ளதாகவும் அவற்றை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவை வெளிவந்தால் அவற்றையும் இதே ஊடகங்கள் அதே அளவு முக்கியம் கொடுத்து வெளிப்படுத்துமா என்பது கேள்விக்குரியதே.
எது எப்படியிருப்பினும் இந்த குரல் பதிவு விவகாரத்தினால் நிர்வாணமாக்கப்பட்டிருப்பது இலங்கையின் அரசியல் கலாசாரமேயாகும். ஏலவே பல்வேறு வகைகளிலும் சீரழிந்துள்ள நமது அரசியலை மேலும் பாதாளத்தில் தள்ளுவதாகவே இந்த விவகாரம் அமைந்துள்ளது. அத்துடன் அரசியல்வாதிகளின் ஒழுக்கம் குறித்து ஏலவே இருந்த சந்தேகத்தையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை ரஞ்சனைப் பிடித்து சிறையில் தள்ளுவதால் மாத்திரம் தீர்வைப் பெற்றுவிட முடியாது. மாறாக இந்த விவகாரத்தினால் வெளிப்பட்டுள்ள ஆழ அகலங்கள் ஆராயப்பட வேண்டும். அரசியல் தலையீடுகள் உள்ள அரச துறைகளைக் கண்டறிந்து அவற்றில் களையெடுக்க வேண்டும். ஒழுக்கமும் நேர்மையும் அற்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும். அவர்களை அடுத்த தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்க கூடாது. அவ்வாறு போட்டியிட்டாலும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
இலங்கையின் அரசியலை சுத்தப்படுத்துவதே மக்கள் முன்னுள்ள பிரதான பணியாகும். அதனை சுத்தப்படுத்தாதவரை எந்த துறையிலும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.
இலங்கை மிகவும் திறமையும் நேர்மையும் கொண்ட அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையுமே வேண்டி நிற்கிறது. அவ்வாறானவர்கள் வானத்திலிருந்து விழ முடியாது. மாறாக நம்மத்தியில் உள்ள நல்லவர்களை இனங்கண்டு நாம்தான் அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும். நல்ல அரசியல்வாதிகள் பாராளுமன்ற கதிரைகளில் அமர்வதன் மூலமே ஊழல்கள் நிறைந்துள்ள அரச இயந்திரத்திலும் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை கொண்டுவர முடியுமாகவிருக்கும். இதற்காக ஏப்ரலில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை மக்கள் நன்றாக பயன்படுத்த தயாராக வேண்டும்.
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ஊழல் மோசடிக்கு எதிராக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி யுள்ளதுடன் அரச இயந்திரத்தை வினைத்திறனாக்கும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார். தான் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவர்களின் விடயத்திலும் அவர் கறாராகவே நடந்து கொள்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும். நல்லதொரு அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப அவர் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று பாடுபடுவாராயின் அதுவே அவர் இந்த தேசத்துக்குச் செய்யும் பேருபகாரமாக அமையும்.-Vidivelli