ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இதுவரை காலமும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரபல வர்த்தகர் இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று முதல் விளக்கமறியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தெமட்டகொடை வீட்டுத் தொகுதியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அதே தினம் கைது செய்யப்பட்ட எம்.யூ.இப்ராஹிம், எம்.ஐ.எம்.அஹமட், எம்.ஐ. இஜாஸ் அகமட், எம்.ஐ.இஸ்மாயில், எம்.எம். இர்ஷான், எம்.ஏ.எம். ஹக்கீம் ஆகியோரே இவ்வாறு தடுப்புக் காவலிலிருந்து விளக்கமறியலுக்கு மாற்றப்பட்டுள்ளவர்களாவர்.
நேற்றைய தினம் இவர்களை கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.-Vidivelli