ஹிஜாப் அணிந்து கொண்டு பரீட்சை எழுதிய பெண்களுக்கு அதிகாரிகளால் அச்சுறுத்தல்

0 1,269

பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­சையின் போது காது­களை மூடி ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிக் கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண்கள், இடை­ந­டுவில் பரீட்சை மண்­டபத் துக்குள் நுழைந்த பரீட்­சைகள் திணைக்­கள உயர் அதி­கா­ரி­யொ­ரு­வரால் சப்­த­மிட்டு அச்­சு­றுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

ஆணை­யாளர் தரத்­தி­லான அவ்­வ­தி­காரி ‘நான் உங்­க­ளுக்குப் பாட­மொன்று படிப்­பிக்­கிறேன்’ எனக்­கூறி தனது கைய­டக்கத் தொலை­பே­சி­யினால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை புகைப்­ப­டமும் எடுத்­த­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு– மிலா­கி­ரிய புனித போல்ஸ் மகளிர் கல்­லூ­ரியின் 1 ஆம் மண்­டபம் 5 ஆம் இலக்க பரீட்சை அறையில் இடம்­பெற்­றுள்­ளது. இதனால் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் பம்­ப­லப்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்­றையும் பதிவு செய்­துள்­ளனர். குறிப்­பிட்ட பரீட்சைத் திணைக்­கள உயர் அதி­கா­ரிக்கு எதி­ராக அடிப்­படை மனித உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது, ‘அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்கள் சேவையில் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்சை கடந்த 19 ஆம் திகதி மிலா­கி­ரிய புனித போல்ஸ் மகளிர் கல்­லூ­ரியில் நடை­பெற்­றது. பரீட்­சைகள் திணைக்­க­ளமே இந்தப் பரீட்­சையை நடத்­தி­யது. பரீட்சை ஆரம்­ப­மா­வ­தற்கு முன்பு இரு மேற்­பார்­வை­யா­ளர்­களால் உரிய அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டன. முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் காது­களை மூடி ஆடை அணிந்­தி­ருப்­பதில் பிரச்­சினை இல்லை எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. அனைத்து பரீட்­சார்த்­தி­க­ளுக்கும் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

முத­லா­வது வினாத்தாள் காலை 9 மணிக்கு வழங்­கப்­பட்டு காலை 11 மணிக்கு நிறை­வுற்­றது. முத­லா­வது வினாத்­தா­ளுக்கு விடை­ய­ளிக்கும் சந்­தர்ப்­பத்தில் எந்த பிரச்­சி­னை­களும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. இரண்­டா­வது வினாத்தாள் 12 மணிக்கு வழங்­கப்­பட்­டது. சில முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் அங்­கி­ருந்­தனர்.

பரீட்சை ஆரம்­பித்து இடை­ந­டுவில் பரீட்சை திணைக்­க­ளத்தைச் சேர்ந்­தவர் எனக் கூறுப்­படும் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் திடீ­ரென பரீட்சை மண்­ட­பத்­துக்குள் உள்­நு­ழைந்தார். காது­களை மூடி ஆடை அணிந்­தி­ருந்த முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­க­ளிடம் சென்று அவர் சப்­த­மிட்டு அவர்­களை அச்­சு­றுத்­தினார். காது­களை மூடி ஆடை அணிய முடி­யாது என்றார். உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தனது கைய­டக்கத் தொலை­பே­சியில் படம் எடுத்தார்.

அத்­தோடு ஒரு கட­தா­சியில் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களின் பரீட்சை இலக்­கங்­களைக் குறித்­துக்­கொண்டார். இதனால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் மாத்­தி­ர­மல்ல அங்கு பரீட்சை எழு­திய ஏனைய பரீட்­சார்த்­தி­களும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­னார்கள்.

பரீட்சை எழு­தி­யதும் பரீட்­சார்த்­திகள் சம்­பந்­தப்­பட்­ட­வ­ரிடம் சென்று அவ­ரது பெயர், பதவி என்னும் விப­ரங்­களைக் கேட்­டார்கள். அதற்கு மறுப்புத் தெரி­வித்த அவர் தான் சுற்று நிரு­பத்­துக்கு அமை­யவே செயற்­ப­டு­வ­தாகக் கூறினார். சுற்று நிருபத்தைக் காண்பிக்குமாறு பரீட்சார்த்திகள் கோரியபோதும் அவர் மறுத்தார். பரீட்சார்த்திகளில் சிலர் அவரது புகைப்படத்தை தமது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து கொண்டார்கள். குறிப்பிட்ட பரீட்சைத் திணைக்களத்தின் உயர் அதிகாரி தொடர்ந்து பரீட்சைகளின் போது இவ்வாறு இனவாதமாக செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.