2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கட்டணம் பற்றி ஹஜ் குழு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லையெனவும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அவற்றை நம்பவேண்டாமெனவும் பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷவின் முஸ்லிம் விவகாரங்ளுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர் தெரிவித்தார்.
ஹஜ் குழு இவ்வருடம் மிகக்குறைவான ஹஜ் கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் வதந்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
இவ்வருடம் ஹஜ் கட்டணமாக 5 இலட்சத்துக்கும் குறைவான தொகையை ஹஜ் குழு நிர்ணயித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மைக்கு மாறான தகவலாகும்.
ஹஜ் குழு இவ்வருடத்துக்கான ஹஜ் கட்டணம் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை. ஹஜ் கட்டணம் உரிய கலந்து ரையாடல்களின் பின்பே தீர்மானிக்கப்படும். அத்தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
எனவே, தற்போது பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்