முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துங்கள் ; நீக்காதீர்

0 782

இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான சட்­டங்கள் இருக்கக் கூடாது. நாட்டு மக்கள் அனை­வரும் பொது­வான சட்­டத்தின் மூலமே ஆளப்­பட வேண்டும் என இன­வாத பெளத்த குரு­மார்­க­ளினால் நீண்ட கால­மாக குர­லெ­ழுப்­பப்­பட்டு வந்­துள்­ளது.

இந்தக் கோரிக்கை தற்­போது உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இதன் ஆரம்­ப­மாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் பிரே­ரணை ஒன்­றினை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ளார்.

1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் பிரே­ர­ணை­யா­கவே இது சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­ர­லியே ரதன தேரர் 1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விவாக (பொது) கட்­டளைச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான பிரே­ர­ணை­யொன்­றி­னையும் சமர்ப்­பித்­துள்ளார். இச்­சட்­டத்தின் முக­வு­ரையில் காணப்­படும் ‘முஸ்­லிம்­களின் திரு­மணம் தவிர்ந்த’ என்ற வசனம் நீக்­கப்­பட வேண்­டு­மெ­ன பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் முஸ்­லிம்கள் பல நூற்­றாண்டு கால­மாக முஸ்லிம் தனியார் சட்­டத்தின் மூலமே ஆளப்­பட்டு வரு­கி­றார்கள். எமது நாட்டில் இன­வாத அமைப்­பு­களும் பெளத்த குரு­மாரும் தலை­யெ­டுத்­ததன் பின்பே முஸ்லிம் தனியார் சட்டம் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

முஸ்லிம் சமூகம் ஒரு தசாப்த கால­மாக ஆராய்ந்து முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­துள்­ளது. அத்­தி­ருத்­தங்­களை கடந்த ஆட்­சியில் அமைச்­ச­ர­வையும் அங்­கீ­க­ரித்­துள்­ளது. அத்­தி­ருத்­தங்கள் சட்­ட­வ­ரைஞர் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு காத்­தி­ருக்­கையில் அச்­சட்­டத்தை முழு­மை­யாக நீக்கி விட­வேண்டும் என்ற கோரிக்­கையை ஒரு போதும் அனு­ம­திக்க முடி­யாது. இது நாட்டில் இன நல்­லி­ணக்­கத்­துக்கு விழுந்­துள்ள பாரிய அடி­யாகும்.

அத்­து­ர­லியே ரதன தேரரின் தனி­நபர் பிரே­ரணை அடிப்­படை மனித உரிமை மீற­லாகும். உயர் நீதி­மன்றில் இதற்­கான அடிப்­படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அத்­து­ர­லியே ரதன தேரரின் தனி­நபர் பிரே­ர­ணையை தற்­போது அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் எதிர்த்­துள்­ளனர். ‘‘இது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் கொள்கைப் பிர­க­ட­னத்­துக்கு முர­ணா­னது. இப்­பி­ரே­ரணை மீளப்­பெ­றப்­பட வேண்டும்‘‘ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா தெரி­வித்­துள்ளார்.

பிரே­ரணை விவா­தத்­துக்கு வந்தால் பல்­லினச் சூழலை ஆத­ரிக்கும் அனைத்து கட்­சி­களும் சேர்ந்து பிரே­ர­ணையைத் தோற்­க­டிக்க வேண்டும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

‘ரதன தேரரின் தனி­நபர் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை. அது தோல்­வி­யி­லேயே முடியும்’ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்தான் தெரி­வித்­துள்ளார். அர­சாங்க தரப்பில் இப்­பி­ரே­ர­ணைக்கு ஆத­ரவு கிடைக்­காது எனவும் அவர் கூறி­யுள்ளார்.

‘ரதன தேரர் இன­மு­று­கலை உரு­வாக்க முயற்­சிக்­கிறார். அவ­ரது பிரே­ரணை இந்­நாட்டில் முஸ்லிம் சமூகம் வாழ முடி­யாது என்ற செய்­தியை கூறு­வது போன்­றுள்­ளது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இந்த இன­வாத நட­வ­டிக்­கையைத் தடுக்க வேண்டும்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.எம்.எம் ஹரீஸ் தெரி­வித்­துள்ளார்.

ரதன தேரரின் தனி­நபர் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு வந்தால் நாட்டில் அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் விரும்பும் மக்கள் பிர­தி­நி­திகள் பிரே­ர­ணையைத் தோற்­க­டித்து இன­வா­தி­களை ஓரம் கட்ட வேண்டும்.

‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்றில் தனி­நபர் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு பாதிப்­பில்­லாத வகையில் தீர்வு காணப்­படும்’ என நீதி சட்ட மறு­சீ­ர­மைப்பு மனித உரி­மைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

சட்ட திருத்த சிபா­ரிசு குழுவின் திருத்­தங்­களும் பாதிப்­பற்ற வகையில் நிறை­வேற்­றப்­படும் எனவும் கூறி­யுள்ளார். அமைச்­சரின் உறுதி மொழிகள் முஸ்லிம் சமூகத்தை ஆறுதல் படுத்தியுள்ளன.

முஸ்லிம் சமூகம் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை எதிர்பார்த்திருக்கின்றதேயன்றி அதனை முற்றாக நீக்குவதற்கு ஒருபோதும் உடன்படப் போவதில்லை. அரசியல் களத்தில் முஸ்லிம்களின் ஆதரவைக் கோரும் ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கமும், அவர்களுடன் இணைந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.