2020 ஹஜ் ஏற்பாடுகள்: முகவர்களை தவிர்த்து அரசாங்கம் முன்னெடுக்கும்

பிரதமர் மஹிந்த புதிய ஹஜ் குழுவுக்கு அறிவுறுத்து

0 931

2020 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்­பா­டு­களை அரசின் அனு­ச­ர­ணை­யுடன் புதிய ஹஜ் குழு மேற்­கொள்­வது தொடர்பில் ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கி­றது. பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ ஹஜ் முக­வர்­களைத் தவிர்த்து ஹஜ் ஏற்­பா­டு­களை ஹஜ் குழுவே மேற்­கொள்­ள­வேண்டும் என்று அறி­வு­றுத்­தி­யுள்ளார் என ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரி­வித்தார்.

2020 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், அண்­மையில் ஹஜ் உடன்­ப­டிக்­கைக்காக சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் செய்த ஹஜ் குழு தனது அறிக்­கையை இவ்­வாரம் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் கைய­ளிக்­க­வுள்­ளது. அறிக்­கையில் பல சிபா­ரி­சுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு 2020 ஆம் ஆண்டு முதல் சிறந்த சேவையை வழங்­கு­வ­தற்கு ஹஜ் ஏற்­பா­டு­களை அரச அனு­ச­ர­ணை­யுடன் ஹஜ் குழுவே மேற்­கொள்ள வேண்டும் என பிர­தமர் எம்மை வேண்­டி­யுள்ளார். இது தொடர்பில் நாம் ஆராய்ந்து வரு­கிறோம். எமது ஆலோ­ச­னை­க­ளையும் பிர­த­ம­ரிடம் முன்­வைக்­க­வுள்ளோம். பிர­த­ம­ருடன் ஹஜ் குழு கலந்­து­ரை­யாடி இறுதி தீர்­மா­னத்­துக்கு வர­வுள்­ளது.

இது­வரை காலம் எமது ஹஜ் ஏற்­பா­டு­களில் ஹஜ் முக­வர்­களே ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றனர். முக­வர்கள் சிலரின் மோச­டி­க­ளினால் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கடந்த காலங்­களில் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இவற்­றுக்கு முடிவு காணப்­பட வேண்­டி­யுள்­ளது.

ஹஜ் ஏற்­பா­டுகள் அரச அனு­ச­ர­ணை­யுடன் ஹஜ் குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பதில் பிர­தமர் உறு­தி­யாக இருந்தால் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை ஹஜ் குழுவே மேற்­கொள்ளும் என்றார்.

இதே­வேளை 2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் முக­வர்கள் நிய­ம­னத்­துக்­கான நேர்­மு­கப்­ப­ரீட்­சைகள் இம்­மாதம் நடை­பெ­ற­வி­ருந்­தன. ஆனால் நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்­கான ஏற்­பா­டுகள் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் அனைத்தும் ஸ்தம்­பி­த ­நி­லையில் இருப்­ப­தா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவினால் மர்ஜான் பளீலின் தலை­மையில் ஹஜ் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். ஐவர்­கொண்ட ஹஜ் குழுவில் ஏனைய அங்­கத்­த­வர்­க­ளாக அஹ்கம் உவைஸ், அப்துல் சத்தார், நகீப் மெள­லானா, அஹமட் புவாட் ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

இலங்­கையில் சுமார் 100க்கும் மேற்­பட்ட ஹஜ் முக­வர்கள் இயங்கி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இவர்­களின் நிய­மனம் வரு­டாந்தம் நேர்­மு­கப்­பரீட்.சையொன்றின் பின்பே வழங்கப்பட்டு வந்தது. ஹஜ் கோட்டா அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலே வழங்கப்பட்டு வந்தன.

இம்முறை ஹஜ் குழுவில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்வாங்கப்படாமை விஷேட அம்சமாகும்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.