தனித்துவ முஸ்லிம் அரசியலின் தேவை வலிந்து வரவில்லை

0 727

ஜே.ஆர். 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த திம்புப் பேச்சு வார்த்­தையில் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு உரை­யாட முஸ்­லிம்­களைத் தவிர்த்­து­விட்டே தனது பிர­தி­நி­தியை அனுப்பி வைத்­தி­ருந்தார். முன்பு ஜன­நா­யக தமிழ் தலை­வர்­களைப் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றிய அதே ஜே.ஆர்.தான் அப்­போது தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேசி­யி­ருந்தார். காரணம், 1981 ஆம் ஆண்டு யாழ்.

மாவட்ட சபைத் தேர்தல் குழப்­பப்­பட்டு அங்­குள்ள பொது நூலகம் எரிக்­கப்­பட்­டதும் 1983 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர் பர­வ­லாகத் தாக்­கப்­பட்­டதும் இலங்­கை­யி­லி­ருந்து ஏரா­ள­மான தமி­ழர்கள் இந்­தி­யா­வுக்கு அக­தி­க­ளாகச் சென்­றதால் தமி­ழகம் குழம்­பி­யது. அது மத்­திய அர­சுக்கு விடுத்த கடும் அழுத்­தத்­துக்கே ஜே.ஆர். தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேச உடன்­பட வேண்­டி­யி­ருந்­தது. அதன்­ப­டிதான் 1984 ஆம் ஆண்டு தனது பிர­தி­நி­தி­யை­ ­னுப்பிப் பேசினார்.

அந்த வகையில் ஜே.ஆர். ஆயுதப் போராட்­டத்தை அங்­கீ­க­ரித்தார் என்று தான் கூற வேண்­டி­யி­ருக்­கி­றது. இல்­லா­விட்டால் பொதுத்­தேர்தல் மூலம் ஜன­நா­யக ரீதியில் தெரி­வான தமிழ் எம்.பி.க்களை வெளி­யேற்றி அவர் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேசி­யி­ருப்­பாரா? முஸ்லிம் தலை­வர்­க­ளோடும் அவர் பேச­வில்லை. மாறாக தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேசும்­ப­டியே முஸ்லிம் தலை­வர்­களை விட்­டி­ருந்தார்.

அதன்­படி 1985 ஆம் ஆண்டு சேர். ராசிக் பரீத், கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத், ஹொன­ரபல் ஏ.டபிள்யூ.எம். அமீர், எம்.ஐ.எம். மொஹிதீன், எம்.எச்.எம். அஷ்ரப் ஆகியோர் பெங்­க­ளூ­ருக்கு சென்று தமிழ் ஆயு­தக்­கு­ழுக்­களை சந்­தித்­தி­ருந்­தனர்.

எனினும், 1987 ஆம் ஆண்டு ஜே.ஆர். இந்­தி­யா­வோடு செய்த ஒப்­பந்­தத்தில் தமி­ழ­ரையும் முஸ்­லிம்­க­ளையும் மட்­டு­மல்ல, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளையும் கூட தவிர்த்­து­விட்டே இந்­தி­யா­வோடு நேர­டி­யாக ஒப்­பந்தம் செய்து கொண்டார். 1984 ஆம் ஆண்டு இனப்­பி­ரச்­சினைத் தீர்வில் முஸ்­லிம்கள் கவ­னிக்­கப்­ப­டா­மலும் 1985 ஆம் ஆண்டு புறக்­க­ணிக்­கப்­ப­டா­மலும் 1987 ஆம் ஆண்டு காவு கொள்­ளப்­ப­டா­மலும் இருந்­தி­ருக்­கு­மாயின் அஷ்ரப் தனித்­துவ முஸ்லிம் கட்­சியை உரு­வாக்­கியே இருக்­க­மாட்டார். பெருந்­தே­சிய கட்­சி­க­ளை­விட்டும் அகன்று 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பே வடக்கு கிழக்­கிலும் மலை­ய­கத்­திலும் சமூ­க­வாரி கட்­சிகள் உரு­வா­கி­யி­ருந்­தன.

எனினும் முஸ்­லிம்கள் மட்டும் பெருந்­தே­சியக் கட்­சி­களில் இணைந்து தம்மைக் கரைத்­துக்­கொண்டு அடிப்­படை உரி­மை­க­ளுக்கு ஈடாக வளங்­க­ளையும் வாழ்­வா­தா­ரங்­க­ளையும் பதவி பட்­டங்­க­ளையும் பெற்று வந்­தார்கள். இவற்றின் விளை­வாக பெருந்­தே­சிய கட்­சி­களின் பேரின நெகிழ்ச்சி நிர­லுக்குப் பக்கத் துணை­யா­கவும் நின்­றார்கள்.

இவற்றால் காலப்­போக்கில் தமது அடிப்­படை உரி­மைகள் ஒரு­பு­ற­மி­ருக்க அவை யாவை என அறி­யா­மலும் தெளிவு பெறா­மலும் இருந்­தார்கள். அர­சியல் அறிவு ஒரு­பு­ற­மி­ருக்க பொது அறி­விலும் கூட போதிய தேர்ச்சி இல்லை. மத அறிவே முழு­மை­யா­னது, வர்த்­த­கமே அடிப்­ப­டை­யா­னது என வாழ்ந்து வந்­தார்கள்.

ஆங்­கி­லேய ஆட்­சி­யா­ளரும் கூட பிஸ்னஸ் மைன்ட் பீபள் (வர்த்­தக சிந்­த­னை­யுள்ள மக்கள்), டிரேடர்ஸ் கொமி­னிடி (வியா­பார சமூகம்), மனி­மைன்டர் (பண­யோ­ச­னை­யாளர்) என்றே இலங்கை முஸ்­லிம்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இதனால் அரச விசு­வா­சத்தை நிபந்­த­னை­யாக விதித்து தாராள வர்த்­தக சலு­கை­க­ளையும் வழங்கி மதத்தை மட்­டுமே முன்­னி­லைப்­ப­டுத்தும் மனோ நிலை­யையும் உரு­வாக்­கி­விட்­டனர்.

கடந்த கால தலை­முறை அர­சி­ய­லையும், பொது அறி­வையும் புறந்­தள்ளி முழு­மை­யாக மத­வி­ட­யங்­க­ளிலும் வர்த்­தக நோக்­கிலும் திளைத்து இற்­றை­வரை சுயா­தீனம் கிடைத்து 70 ஆண்­டுகள் கழிந்தும் கூட அடிப்­படை உரி­மைகள் ஒரு­பு­ற­மி­ருக்க அவை பற்­றிய போதிய அறிவோ, தெளிவோ இல்­லா­தி­ருக்­கி­றார்கள். உரிமை எது? சலுகை எது? என்­பதும் தெரி­ய­வில்லை. சலு­கை­க­ளையே உரி­மை­க­ளாக நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆங்­கி­லே­யரின் ஆட்சிக் காலத்தில் எம்.சி. அப்துர் ரஹ்மான், ஹொன­ரபல் அப்துல் ரஹ்மான், சித்தி லெப்பை, வாப்­பிச்சி மரைக்கார், ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், சேர் ராசிக் பரீத் ஆகியோர் பெற்றுத் தந்­ததே இலங்கை முஸ்லிம் சமூ­கத்­துக்­கான அடிப்­படை உரி­மை­க­ளாகும். முஸ்லிம் தனியார் சட்­டத்தின் மூலம் அமைந்த வகுப்பு வாரி­சு­ரிமை, விவாக விவா­க­ரத்து உரிமை அப்­ப­டித்தான் கிடைத்­தி­ருந்­தன.

எனினும், 1947 ஆம் ஆண்­டுக்குப் பின் கட்­சி­முறை உரு­வான பின் முஸ்லிம் எம்.பி.க்கள் கட்­சி­க­ளுக்கு கட்­டுப்­படும் நிலைக்கு உள்­ளா­னார்கள். அதன் பிறகு முஸ்­லிம்­களின் சுய விருப்பம் தடுக்­கப்­பட்­டதால் தமது அடிப்­படை உரி­மை­க­ளையே தாரை வார்த்­து­விட்­டார்கள்.

இலங்கை முஸ்­லிம்­களின் தாய் மொழி தமி­ழாக இருந்­த­போதும் கூட 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்­களச் சட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தார்கள். இவர்­க­ளது ஆங்­கிலம் மட்டும் கற்ற தலை­வர்­களே மொழி ரீதியில் இவர்­களைத் தாரை வார்த்து விட்­டார்கள்.

பல்­லின தேசி­யத்­துக்குப் புறம்­பாக பேரின தேசி­யத்­தையே சார்ந்து நின்று சிறு­பான்மை மக்­களின் கல்விக் கூடங்­களை அர­சு­ட­மை­யாக்கி உயர் கல்­வியில் பெரும்­பான்மைச் சமூ­கத்­துக்கு சார்­பாகத் தரப்­ப­டுத்­த­லையும் கொண்­டு­வர ஒத்­து­ழைத்­தார்கள். 1972 ஆம் ஆண்டு மத சாச­ன­சார்­போடு சிறு­பான்மைக் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்து நீக்­கப்­பட்ட யாப்­பையும் ஆத­ரித்­தார்கள். இவற்றால் பேரி­ன­வாதம் உரு­வாகி வளர்ந்­தது மட்­டு­மல்ல, சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மைகள் யாவும் சலு­கை­க­ளாக்­கப்­பட்­டன.

இன்று எத்­தனை முஸ்­லிம்­க­ளுக்கு சோல்­பரி யாப்பின் சிறு­பான்மைக் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்து தெரியும். 48 ஆண்­டு­களும் கழிந்­து­விட்­டன. அதை மீட்­டெ­டுக்க எந்த முஸ்­லி­மா­வது குரல் எழுப்­பி­ய­துண்டா? உத்­தேச புதிய யாப்பில் அதுவும் இடம்­பெற்­றாக வேண்டும். அது­ர­லிய ரத­ன­ தேரர் முஸ்லிம் தனியார் சட்­டத்தை நீக்க வேண்­டு­மென அடம்­பி­டிக்­கிறார். 29 ஆம் ஷரத்தின் நீக்­கத்­துக்குப் பிறகு முஸ்லிம் தனியார் சட்டம் மட்­டுமே முஸ்­லிம்­களின் தேசிய உரி­மைக்கும் அடை­யா­ளத்­துக்கும் சான்­றாக இருக்­கி­றது. அது­ர­லியே ரதன தேரரின் கூற்று கோவ­ணத்­தோடு இருப்­ப­வனை நிர்­வா­ணி­யாக்­கு­வ­தாகும்.

தற்­போது 29 ஆம் ஷரத்­தான சிறு­பான்­மைக்­காப்­பீடு இல்­லா­தி­ருப்­பதால் சலு­கை­யோ­டி­ருக்கும் முஸ்லிம் தனியார் சட்­டத்தை சிறிய பெரும்­பான்­மை­யு­ட­னேனும் இரத்­தாக்­கி­வி­டலாம் என அது­ர­லிய ரதன தேரர் எண்­ணு­கிறார் போல் தெரி­கி­றது. தான் ஒரு பிக்கு என்­பதால் தனியார் பிரே­ர­ணை­யாக இதைத்தான் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்கும் பட்­சத்தில் இரு­பெரும் தேசிய கட்­சி­க­ளி­லு­முள்ள பெரும்­பான்­மை­யா­க­வுள்ள பெளத்­தர்கள் கட்சி வித்­தி­யா­ச­மின்றி ஏகோ­பித்து ஆத­ரித்து நிறை­வேற வைப்­பார்கள் என அவர் நம்­பு­வ­து­போலும் தெரி­கி­றது.

தற்­போது பொது­ஜன ஐக்­கிய முன்­னணி மூன்றில் இரண்டைப் பெறும் நோக்­கோடு இருக்­கி­றது. அதற்­காக இதை வைத்து மேலும் இன­வா­தத்தைக் கூராக்கி இலக்கை அடைந்து கொள்­ளவும் முய­லலாம். ஐக்­கிய தேசியக் கட்சி இழந்­து­போன பெளத்த சிங்­கள வாக்­கு­களைக் கூட்டிக் கொள்ளும் நிலையில் இருக்­கி­றது எனவே அது முஸ்லிம் தனியார் சட்­டத்தை தக்க வைக்கும் முயற்­சியில் இறங்குமென நான் நினைக்­க­வில்லை.

இலங்கை முஸ்­லிம்­களை தனித்­துவ அர­சியல் அமைப்பில் இணைத்­தா­லன்றி முஸ்­லிம்­களின் இருப்­பையும் தனித்­து­வத்­தையும் மார்க்க உரி­மை­க­ளையும் கலை கலா­சா­ரத்­தையும் வர­லாற்­றையும் வாழ்­வா­தா­ரங்­க­ளையும் வாழ்­வி­டங்­க­ளையும் தக்க வைத்­துக்­கொள்ள முடி­யாது என்­ப­தற்­கா­கவே அஷ்ரப் தன்­னையும் தனது உயி­ரையும் அர்ப்­ப­ணித்­தி­ருந்தார்.

தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளிகள் ஜன­நா­யக தமிழ் தரப்­புக்கு மாறாக வடக்கு கிழக்கு முஸ்­லிம்­களைப் பிரித்­து­விட்டு முடக்­கவும் செய்­த­போ­துதான் ஜே.ஆரும் வடக்கு கிழக்கு முஸ்­லிம்­களைத் தவிர்த்துக் கொண்டு தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளுடன் மட்டும் பேசினார்.

இதனால் அஷ்­ரபால் ஒன்­றி­ணைக்­கப்­பட்ட தனித்­துவ முஸ்­லிம்­களின் முழு வாக்­கு­களைப் பெற்றே 1988 ஆம் ஆண்டு பிரே­ம­தாஸ சிறிது வாக்கு வித்­தி­யா­சத்தில் ஜனா­தி­ப­தி­யானார். எனினும் பிரே­ம­தாஸ பின்னர் புலி­க­ளோடும் தொடர்பு கொண்டு இலங்­கையின் இறை­மையை மீட்க வேண்டும் எனக் கூறினார். இந்­திய சமா­தானப் படையை அகற்­று­வதே அவர் புலி­க­ளுக்கு விடுத்த கோரிக்­கை­யாக இருந்­தது. இதன் மூலம் தமிழ் மக்­களின் ஆத­ரவும் கிடைக்கும் எனவும் நம்­பினார். இதனால் புலி­களால் முஸ்­லிம்கள் அழிக்­கப்­பட்­டார்கள். அதுபோல் 1993 ஆம் ஆண்டு பிர­த­ம­ராகு­வ­தற்கு சந்­தி­ரி­கா­வுக்கு அஷ்ரப் உதவி புரிந்தார். 1994 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகு­வ­தற்கு சந்­தி­ரி­கா­வுக்கு உதவி புரிந்­தி­ருந்தார். எனினும் சந்­தி­ரிக்கா தேசிய ஐக்­கிய முன்­ன­ணி­யையும் ஆரம்­பிக்க வைத்து அஷ்­ர­பையும் வெற்­றிலைச் சின்­னத்தில் போட்­டி­யிட வைத்து அஷ்ரப் அகால மர­ண­முற்ற மர்­மத்­தையும் கூற­வில்லை.

அஷ்­ரபால் இவர் அர­சி­ய­லுக்கு வந்­ததை மறந்து அஷ்ரப் அகால மர­ண­முற்ற பின் பேரி­ன­வா­தத்தின் மூல பிதாக்­களில் ஒரு­வ­ரான சம்­பிக்க ரண­வக்­க­வோடும் பிக்­கு­க­ளோடும் தொடர்பு கொண்டு தனது பெற்றோரின் வழியில் நடந்தார். இவர்களால் உருவாகிய மஹிந்தவின் ஆட்சி காலத்தில் தான் அஷ்ரபின் கட்சி பல தலைமைகளோடு பல கூறுகளாக ஆகின.

இவரது கணவரான விஜய குமாரதுங்கவை ஜே.வி.யே கொன்றது என்றார்கள். இவர் ஏன் அதன் சொல்லையும் கேட்டு மஹிந்தவை ஜனாதிபதி அபேட்சகராக்க வேண்டும். பிக்குகள்தானே இவரது தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவைக் கொன்றார்கள். இவர் எதற்காக ஹெல உறுமய பிக்குகளின் சொல்லைக் கேட்டு மஹிந்தவை ஜனாதிபதி அபேட்சகராக்கினார். கணவரின் பல்லினக் கொள்கையை முன்வைத்து ஆட்சிபீடம் ஏறிவிட்டு பெற்றோரின் வழியில் பேரினவாதத்தை விதைத்தது.

கணவருக்கு செய்த மாறுபாடு அல்லவா. அஷ்ரபின் வழிவாறுகள் இப்போது பெருந்தேசியக் கட்சிகளின் போட்டி அரசியலில் சிக்கியிருப்பதால் வெவ்வேறு நிகழ்ச்சிகளைப் பேணுகிறார்கள். இவர்களின் நிகழ்ச்சி நிரல்களில் சமூகம் இழுபட்டுப் போகிறது.-Vidivelli

  • ஏ.ஜே.எம். நிழாம்

Leave A Reply

Your email address will not be published.