உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம், இன்று அல்லது நாளை: மைத்திரியிடம் விசாரணை

ருவன்,ரிஷாத்திடம் வாக்குமூலம் பதிவு; ஹக்கீம், அசாத் சாலி, ஹிஸ்புல்லாவை விசாரிக்கவும் திட்டம்

0 763

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வாக்­கு­மூலம் பதிய சி.ஐ.டி. நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதன்­படி இன்று அல்­லது நாளை, சி.ஐ.டி.யில் ஆஜ­ராகி, குறித்த விவ­காரம் தொடர்பில் வாக்­கு­மூலம் வழங்­கு­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்­ள­தாக பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார். 4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறைத்­துக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் இடம்­பெறும் சி.ஐ.டி. விசா­ர­ணை­க­ளுக்­க­மைய இந்த விசா­ரணை நடாத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­ன­கே­வுக்கு இவ்­வாறு அறி­வித்தார்.

இந்த விடயம் தொடர்­பி­லான நீதிவான் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் மீளவும் விசா­ர­ணைக்கு வந்­தன. இதன்­போது விளக்­க­ம­றி­ய­லி­லுள்ள கட்­டாய விடு­முறை வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகியோர் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதன்­போது விசா­ர­ணை­யா­ளர்­க­ளான சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்ர விம­ல­சிறி மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்­றுக்கு சமர்ப்­பித்­த­துடன், பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடயம் தொடர்பில் மன்­றுக்குத் தெளி­வு­ப­டுத்­தினார்.

“கனம் நீதிவான் அவர்­களே, இந்த விவ­கா­ரத்தில் , வாக்­கு­மூ­லங்­களை பதி­வு­செய்­வ­தற்குத் திக­தி­யொன்றை ஒதுக்­கு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கு அறி­வித்­தி­ருந்தோம். இதன் பிர­காரம் நாளை (இன்று) மற்றும் நாளை மறு­தி­னங்­களில் (நாளை) திக­தி­யொன்றை ஒதுக்­கு­வ­தற்கு இய­லு­மென முன்னாள் ஜனா­தி­பதி அறி­வித்­துள்ளார். எனினும், முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சாட்சிப் பதி­வு­க­ளுக்கு இது­வரை நாளொன்றை ஒதுக்கித் தர­வில்லை.

இந்த விவ­கா­ரத்தில் முன்னாள் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் ஆகி­யோ­ரிடம் விஷேட விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டன. அவர்­க­ளிடம் அது தொடர்பில் வாக்­கு­மூ­லங்­களும் பெறப்­பட்­டுள்­ளன.

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா ஆகி­யோ­ரி­டமும் வாக்­கு­மூலம் பதிவு செய்­ய­வுள்ளோம். இதற்கான ஆலோ­ச­னை­களை சட்­டமா அதிபர் வழங்­கி­யுள்ளார். இந்த விவ­கா­ரத்தில் பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்­ட­கையின் வாக்­கு­மூ­லத்தை பெற நாம் முயன்றோம். அவ­ரது சட்­டத்­த­ரணி ஊடாக எமக்கு விஷேட அறி­வித்­த­லொன்று தரப்­பட்­டுள்­ளது. அதா­வது, இந்த விடயம் தொடர்பில் பூர­ண­மாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு­வுக்குத் தெரி­வித்­துள்ள விட­யங்­களை இந்த விசா­ர­ணைக்கும் எடுத்­துக்­கொள்­ளு­மாறு கூறப்­பட்­டுள்­ளது. அதன்­படி அவ­ரது சாட்­சி­யத்­தைப்­பெற ஆணைக் குழுவின் தலை­வரின் அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்­ள­வுள்ளோம்” என பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்­றுக்கு அறி­வித்தார்.

இந்­நி­லையில் விட­யங்­களை ஆராய்ந்த கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே, மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து அறிக்கை சமர்ப்­பிக்க சி.ஐ.டிக்கு உத்­த­ர­விட்­ட­துடன், கட்­டாய விடு­முறை வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகி­யோரின் விளக்­க­ம­றி­யலை நீடித்தார்.

அதன்­படி அவ்­வி­ரு­வரும் எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் 250 இற்கும் அதிகமானோர் பலியாகவும் பாரிய சொத்து சேதமேற்படவும் உதவி ஒத்தாசை புரியும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் கூறி மேற்படி இருவருக்கும் எதிராக தண்டனை சட்டக் கோவையின் 250,296, 298,326,327,328,329 மற்றும் 410 ஆம் அத்தியாயங்களின் கீழ் இவர்கள் இருவரும் தண்டனைக்குரிய குற்றமொன்றைப் புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.