பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள ஹஜ் தூதுக்குழு தொழில் வல்லுநர்களை மாத்திரமே உள்ளடக்கியுள்ளது. இதனாலேயே அத்தூதுக் குழுவினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 2850 ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரித்துப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது என பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
புதிய ஹஜ் தூதுக்குழு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘ஹஜ் தூதுக்குழுவில் அனுபவம் வாய்ந்த தொழில் நிபுணர்களே அங்கம் பெற்றுள்ளனர். அரசியல்வாதிகளல்ல. மர்ஜான் பளீல் தலைமையில் ஐவர் கொண்ட குழு மேலதிக ஹஜ் கோட்டாவும் பெற்றுக் கொள்ளும் என்பதில் நம்பிக்கை வைக்கலாம்.
இலங்கையின் ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்வரும் காலங்களில் சிறந்த சேவையொன்றினை எதிர்பார்க்கலாம். ஊழல்களற்ற சிறந்த சேவையையே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் கீழ் கலாசார அமைச்சு இயங்கி வருவதால் ஹஜ் ஏற்பாடுகளில் பல புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்