ஹஜ் ஏற்பாடுகளில் மாற்றங்கள் நிகழுமா?

0 795

முஸ்­லிம்­களின் கட்­டாயக் கட­மை­களில் இறுதிக் கடமை ஹஜ்­ஜாகும். 2020 ஆம் ஆண்டு ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு இலங்­கை­யி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தயார் நிலையில் இருக்­கி­றார்கள்.

அதற்­கான ஏற்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் விரை­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

நாட்டில் புதிய ஜனா­தி­பதி, புதிய பிர­தமர் மற்றும் புதிய அர­சாங்கம் ஒன்று நிறு­வப்­பட்­டுள்ள நிலையில் 2020 க்கான ஹஜ் ஏற்­பா­டு­களில் மாற்­றங்கள் நிக­ழக்­கூடுமென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

கடந்த காலங்­களில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான அமைச்­சொன்று இயங்­கி­யது. கடந்த அர­சாங்­கத்தில் முஸ்லிம் விவ­கார அமைச்­ச­ராக எம்.எச்.ஏ.ஹலீம் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். அவ­ரது தலை­மையின் கீழ் அரச ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் இணைந்து ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வந்­தன. ஆனால் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றதும் அரச ஹஜ் குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­டா­மலே ஹஜ் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

ஹஜ் தூதுக்­கு­ழுவின் சவூதி விஜயம்

ஒவ்­வொரு வரு­டமும் சவூதி ஹஜ் அமைச்சு ஒவ்­வொரு நாடு­களின் தூதுக் குழு­வி­னரை அழைத்து வரு­டாந்தம் வழங்­கப்­படும் ஹஜ் கோட்டா உட்­பட ஹஜ் சார்ந்த ஏனைய விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி உடன்­ப­டிக்கை ஒன்றில் கைச்­சாத்­தி­டு­வது வழக்­க­மாகும்.

அந்த வகையில் கடந்த 19 ஆம் திகதி சவூதி ஹஜ் அமைச்சு கலந்­து­ரை­யா­ட­லுக்கும் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கும் உத்­தி­யோ­க­பூர்வ அழைப்­பொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்­தது. அந்த அழைப்­பினை ஏற்று சவூதி அரே­பி­யா­வுக்கு செல்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்­கினால் மேற்­கொள்­ளப்­பட்­டன. கலா­சார அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் மற்றும் ஹஜ் முகவர் ஒருவர் உட்­பட மூவரும் சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்லத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த நிலையில் கலா­சார அமைச்சின் செய­லா­ள­ரினால் அது தடை­செய்­யப்­பட்டு சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்கைத் தூது­வரும் கொன்­சி­யுலர் ஜென­ரலும் சவூதி ஹஜ் அமைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொள்­வார்கள். இலங்­கை­யி­லி­ருந்து தூதுக் குழு­வொன்று அனுப்பி வைக்­கப்­படத் தேவை­யில்லை என கலா­சார அமைச்சின் செய­லாளர் தீர்­மா­னித்தார். அது தொடர்பில் சவூ­தி­யி­லுள்ள இலங்கைத் தூத­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யிலே பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் தூதுக் குழு­வொன்­றினை அனுப்பி வைக்கத் தீர்­மா­னித்து முன்னாள் பேரு­வளை நக­ர­சபைத் தலைவர் மர்ஜான் பளீலின் தலை­மையில் குழு­வொன்­றினை நிய­மித்தார். இத்­தூ­துக்­கு­ழுவின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக அப்துல் சத்தார், நகீப் மெள­லானா, அஹ்கம் உவைஸ், புவாட் ஜெமீல் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டனர். இந்த ஹஜ் குழு கடந்த 23 ஆம் திகதி சவூதி அரே­பி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டது.

வழ­மைக்கு மாறான நகர்­வுகள்

வரு­டாந்தம் ஹஜ் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு இலங்­கை­யி­லி­ருந்து முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் (அவர் முஸ்­லி­மாக இருந்தால்) மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர், அரச ஹஜ் குழுவின் தலைவர் உள்­ளிட்­டோரே பய­ண­மா­கினர். ஆனால் 2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்­கான குழுவில் இவ்­வா­றா­ன­வர்கள் இடம்­பெ­ற­வில்லை. கடந்­த­கால ஆட்­சியில் முஸ்லிம் சமய விவ­கா­ரத்­துக்­கென தனி­யான அமைச்சு இயங்­கி­யது. முஸ்லிம் அமைச்­ச­ரொ­ரு­வரே இருந்தார். தற்­போது முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் கலா­சார அமைச்­சி­னாலே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. கலா­சார அமைச்­ச­ராக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவே செயற்­பட்டு வரு­கிறார். இவ்­வா­றான நிலையில் அவரால் ஹஜ் தூதுக்­கு­ழுவில் பங்­கு­கொள்ள முடி­யாத நிலைமை இருந்­தாலும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் கட்­டா­ய­மாக ஹஜ் தூதுக்­கு­ழுவில் இணைக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும்.

ஆனால், 2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் நகர்­வு­களில் வழ­மைக்கு மாறான முறை­களே பின்­பற்­றப்­பட்­டுள்­ள­மையை அறி­ய­மு­டி­கி­றது. கலா­சார அமைச்­ச­ரான பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தனது ஆத­ர­வா­ளர்­களை மாத்­தி­ரமே இக்­கு­ழுவில் இணைத்­துள்ளார்.

கலா­சார அமைச்சு 2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் விவ­கா­ரங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தாம­தி­யாது அரச ஹஜ் குழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும். அக்­கு­ழுவில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பா­ளரும் உள்­வாங்­கப்­பட வேண்டும். ஹஜ் விவ­கா­ரங்­களில் அர­சியல் தலை­யீ­டுகள் தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். இத­னையே சமூகம் எதிர்­பார்க்­கி­றது. புனி­த­மான கட­மைக்­கான ஏற்­பா­டுகள் புனி­த­மா­ன­வை­க­ளாக அமை­ய­வேண்டும். இதில் ஊழல் மோச­டி­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

இலங்­கைக்கு 3500 கோட்டா

கடந்த வாரம் இலங்­கை­யி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­வுக்குப் பய­ண­மான ஹஜ் தூதுக்­குழு சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்சில் இலங்கை ஹஜ் விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டது. மர்ஜான் பளீலின் தலை­மையில் பய­ண­மான ஐவர் கொண்ட தூதுக்­கு­ழு­வுடன் சவூ­தியில் இருக்கும் இலங்கைப் பிர­தி­நி­திகள் சிலரும் இணைந்து கொண்­டனர்.

சவூதி ஹஜ் அமைச்சின் சார்பில் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கார பிர­தி­ய­மைச்சர் கலா­நிதி அப்துல் சுலைமான், மக்கா ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி ரவூப் பின் இஸ்­மாயில் உள்­ளிட்­ட­வர்கள் கலந்­து­கொண்­டனர். இலங்கைக் குழு­வுடன் சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம், முன்னாள் மேல்­நீ­தி­மன்ற நீதி­ப­தியும் ஜித்தா உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் கொன்­சி­யுலர் ஜென­ர­லு­மான ஏ.டப்­ளியு. ஏ.சலாம், மக்கா ஹரத்தின் குர்ஆன் பதிப்­ப­கத்தின் முன்னாள் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் சாதிக் சாதிஹான் செய்­லானி, அப்துல் காதர் மசூர் மெள­லானா ஆகியோர் பங்கு கொண்­டி­ருந்­தனர்.

2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் கோட்டா உடன்­ப­டிக்­கையில் இலங்கைக் குழுவின் தலைவர் மர்ஜான் பளீலும், சவூதி ஹஜ் விவ­கார பிர­தி­ய­மைச்சர் கலா­நிதி அப்துல் சுலை­மானும் கையொப்­ப­மிட்­டனர்.

இலங்கை தூதுக்­கு­ழு­வினர் சவூதி அரே­பிய விமா­ன­சேவை அதி­காரிகளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்கள். ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு நிவா­ரண விலையில் விமான பய­ணச்­சீட்­டு­களை பெற்­றுத்­த­ரு­மாறு இலங்கைக் குழு­வி­னரால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அத்­தோடு இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் மக்கா, மதீனா போக்­கு­வ­ரத்து வச­திகள், தங்­கு­மிட வச­திகள் என்­பன தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

சவூதி ஹஜ் அமைச்சு உறுதி

2020 ஆம் ஆண்டு ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ளும் இலங்­கையர் களுக்கு உரிய சலு­கைகள், வச­தி­களை வழங்­கு­வ­தற்கு சவூதி ஹஜ் அமைச்சு தயா­ராக இருப்­ப­தா­கவும் அதற்­கான அறி­வு­றுத்­தல்கள் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் எனவும் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கார பிர­தி­ய­மைச்சர் கலா­நிதி அப்துல் சுலைமான் உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக மர்ஜான் பளீல் தெரி­வித்தார்.

இலங்­கை­யி­லி­ருந்து சென்ற ஹஜ் தூதுக்­குழு இவ்­வா­றான உறு­தி­மொ­ழி­களை சவூதி ஹஜ் அமைச்­சி­ட­மி­ருந்து பெற்­றி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­க­தாகும். கடந்த காலங்­களில் இலங்­கையின் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களில் பெரும்­பா­லானோர் ஹஜ் கட­மை­யின்­போது பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உட்­பட்­டமை அனை­வரும் அறிந்­ததே. ஹஜ் முக­வர்கள் சிலர் தாம் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் செய்­து­கொண்ட உடன்­ப­டிக்­கை­களை மீறினர். உறு­தி­ய­ளித்­த­படி தங்­கு­மிட வச­தி­களோ, உணவு ஏற்­பா­டு­களோ அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் இலங்கை யாத்­தி­ரி­கர்கள் பல இன்­னல்­க­ளுக்கு உள்­ளா­கி­னார்கள். புதிய அர­சாங்­கத்தின் கலா­சார அமைச்சு இவ்­வா­றான ஊழல் மோச­டி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் வகையில் ஹஜ் விவ­கா­ரத்தைக் கையாள வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாகும்.

முக­வர்­க­ளுக்கு ஆப்பு வைக்­கப்­ப­டுமா?

ஹஜ் தூதுக்­குழு இலங்­கையின் ஹஜ் விவ­கா­ரத்தில் பல முன்­னேற்­றங்­களை ஏற்­ப­டுத்தி ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சிறந்த சேவையைப் பெற்­றுக்­கொள்ளத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக ஹஜ் தூதுக்­கு­ழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை ஹஜ் முக­வர்கள் ஊடாக அனுப்பி வைப்­பதா? அல்­லது மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதா? என்­பது தொடர்பில் ஆராய்ந்து வரு­வ­தாக மர்ஜான் பளீல் தெரி­வித்­துள்ளார். ஹஜ் தூதுக்­குழு இது தொடர்பில் அறிக்­கை­யொன்­றினை பிர­த­ம­ரிடம் கைய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார். ஹஜ் ஏற்­பா­டுகள் எதிர்­வரும் காலங்­களில் ஊழல்­க­ளின்றி சிறப்­பாக முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

ஹஜ் முக­வர்கள் சிலரின் ஊழல் மோச­டிக்கு முடிவு கட்­ட­வேண்டும் என்றே சமூகம் எதிர்­பார்க்­கி­றது. சில ஹஜ் முக­வர்கள் புனித கட­மைக்­கான ஏற்­பா­டு­களில் கொள்­ளை­ய­டிக்­கி­றார்கள். இதனை ஒரு வர்த்­த­க­மாகக் கருதி வரு­டாந்தம் மில்­லியன் கணக்கில் தமது பைகளை நிறைத்துக் கொள்­கி­றார்கள். இவற்­றுக்கு புதிய அரசு தீர்வு வழங்­க­வேண்டும்.

ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு மாற்று வழி­யாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமே தலைமை தாங்­கலாம். இதன் மூலம் ஹஜ் முகவர் மாபி­யா­வுக்கு முடிவு கட்­ட­மு­டியும்.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களின் போது இரண்டு ஹஜ் முகவர் நிலை­யங்கள் நூற்­றுக்கும் மேற்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை இறு­தி­நே­ரத்தில் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யமை நாட­றிந்த ஈனச் செய­லாகும். ஆறு ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஒவ்­வொ­ரு­வரும் 7 இலட்சம் ரூபா கட்­டணம் செலுத்­தியும் இறுதி நேரத்தில் அவர்­களால் ஹஜ் கட­மையை முன்­னெ­டுக்க முடி­யா­மற்­போ­னமை மன்­னிக்க முடி­யாத குற்­ற­மாகும்.

ஹஜ் ஏற்­பா­டு­களின் எந்­த­வொரு விதி­மு­றை­யென்­றாலும் அதன் முன்­னேற்றம் கருதி சமூ­கத்­துடன் அல்­லது பங்­கு­தா­ரர்­க­ளுடன் தொடர்ச்­சி­யாகக் கலந்­து­ரை­யா­ட­வேண்டும். சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்ட குழு உணர்வு பூர்­வ­மாக தனது புதிய வழி­மு­றை­களை சமூ­கத்­திற்கு முன்­வைக்­க­வேண்டும். அவற்றில் அர­சியல் கலப்­படம் இருக்­கவே கூடாது. புதிய ஏற்­பா­டு­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு முன்பு பொது­மக்­க­ளிடம் சென்று அவற்றை மீளாய்வு செய்­வ­தற்குப் பின்­நிற்­கக்­கூ­டாது.

அர­சாங்கம் தான் நினைத்­த­வாறு ஹஜ் ஏற்­பா­டு­களை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு இட­ம­ளிக்­காது பொது­மக்­களும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும்.

கடந்த அர­சாங்க கால ஹஜ் ஏற்­பா­டுகள்

2015 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ரினால் ஹஜ் ஏற்­பா­டு­களில் பல மாற்­றங்கள் கொண்டு வரப்­பட்­டன. 2016 முதல் ஹஜ் குழு பல புதி­ய­மு­றை­களை அமுல்­ப­டுத்­தி­யது. இதில் குறிப்­பாக கோட்டா பகிர்வு முறையைக் குறிப்­பி­டலாம். ஹஜ் கட்­ட­ணத்தில் வீழ்ச்சி ஏற்­பட்­டது. ஹஜ் முக­வர்­களின் ஏக­போகத் தனி­யு­ரிமை முடி­வுக்குக் கொண்டுவரப்­பட்­டது. ஹஜ் முறைப்­பா­டுகள் தொடர்பில் முறை­யான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அத்­தோடு ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பதி­வுகள் சீர­மைக்­கப்­பட்­ட­துடன் இணை­யத்­தளம் ஊடாக பதிவும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதே­வேளை, இந்த ஏற்­பா­டு­களில் பல குறை­பா­டு­களும் காணப்­பட்­டன. மக்கள் ஹஜ் யாத்திரைக்காக தங்களைப் பதிவு செய்துவிட்டு தங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. திணைக்களம் காத்திருப்போர் பட்டியலொன்றினைத் தயாரிப்பதாக இல்லை. அவ்வாறான பட்டியல் ஒன்று நடைமுறையில் இருந்தால் யாத்திரிகர்கள் தங்கள் பயணம் குறித்து உரிமைகோர முடியும்.

பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபா செலுத்தப்படவேண்டும் என்பதை பலர் அறியாதிருக்கிறார்கள். இறுதி நேரத்திலே திணைக்களம் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தும்படி கடிதங்களை அனுப்பிவைக்கிறது.
ஹஜ் முகவர்கள் தலா 25 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்தி பல பதிவுகளைச் செய்து பின்பு அப்பதிவுகளில் திருத்தங்களைச் செய்கிறார்கள். இது வருடாந்தம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில முகவர்கள் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு முழுமையாக ஹஜ் கட்டணத்தையும் அறவிட்டுக்கொள்கிறார்கள். பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவை ஹஜ் கட்டணத்திலிருந்து கழிப்பதில்லை. பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபா திணைக்களத்துக்குரியது எனக்கூறி யாத்திரிகர்களை ஏமாற்றுகிறார்கள்.

திணைக்களம் ஹஜ் யாத்திரிகர்களுடன் முறையான தொடர்பாடல்களை மேற்கொள்வதில்லை. இதன் காரணமாகவும் ஹஜ் முகவர்கள் ஹஜ் யாத்திரிகர்கள் மீது பல வகையில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

3500 பேர் பய­ணத்தை உறுதி செய்­துள்­ளனர்

2020 ஆம் ஆண்­டுக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. இதே­வேளை மேல­திக ஹஜ் கோட்­டாவை வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­சிடம் கோரிக்­கையும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் பய­ணத்தை மீளப்­பெ­றக்­கூ­டிய பதிவுக் கட­ண­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபா செலுத்தி 3500 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் உறுதி செய்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார்.

அத்­தோடு அடுத்த வருட ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக ஹஜ் முகவர் நிய­ம­னமும் இடம்­பெ­ற­வுள்­ள­தாகக் கூறினார். அதற்­கான நேர்­முகப் பரீட்சை அடுத்த மாதம் ஜன­வ­ரியில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

எனவே, அரச ஹஜ் குழு­வொன்று உட­ன­டி­யாக நிய­மிக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். முகவர் நிய­ம­னங்­க­ளிலும் அர­சியல் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­படக் கூடாது. தகு­தி­யுள்­ள­வர்­க­ளுக்கும் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டா­த­வர்­க­ளுக்­குமே நிய­ம­னங்கள் வழங்­கப்­பட வேண்டும்.

ஹஜ் சட்ட மூலம்

தற்­போ­தைய ஹஜ் ஏற்­பா­டு­களில் நிலவும் குறை­பா­டு­க­ளையும் ஊழல் மோச­டி­க­ளையும் தவிர்ப்­ப­தற்கு சிறந்­தவோர் தீர்­வாக ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென்று தனி­யான சட்­ட­மொன்றை இயற்­றிக்­கொள்­வ­தாகும். கடந்­த­கால அர­சாங்­கத்தில் இதற்­கான முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அப்­போ­தைய முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மினால் இதற்­கென அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்று சமர்ப்­பிக்­கப்­பட்டு அதற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ர­வையும் வழங்­கி­யுள்­ளது.

சட்­ட­வ­ரைபு திணைக்­க­ளத்­திலும் ஆரா­யப்­பட்டு தற்­போது இச்­சட்­ட­மூலம் இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. அச்­சட்ட மூலம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும்.

தற்­போ­தைய அர­சாங்­கத்தில் முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­சர்கள் எவரும் இல்லை. அரச தரப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக முஸ்லிம் சம­யத்தைச் சேர்ந்த இரு­வரே இருக்­கி­றார்கள். ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்த்­த­ரப்­பிலே இருக்­கி­றார்கள்.
எனவே, அரச தரப்பைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஹஜ் சட்­ட­மூ­லத்தை விரை­வு­ப­டுத்­து­வ­தற்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­க­வேண்டும்.

2020 இல் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற தயார் நிலையில் உள்­ள­வர்­களும் அதன் பின்னரான ஹஜ் கடமையும் சீரான முறையில் அமைவதற்கு அரசு உறுதியளிக்க வேண்டும்.

ஊழல் மோசடிகளற்ற, அரசியல் கலப்பற்ற ஹஜ் ஏற்பாடுகளையே சமூகம் எதிர்பார்த்துள்ளது. புதிய அரசாங்கமும் புதிய கலாசார அமைச்சரும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளார்கள்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.