இலங்கையின் 2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கோட்டா மற்றும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையிலிருந்து ஹஜ் தூதுக்குழு எதிர்வரும் 23 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணமாகவுள்ளது.
சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சரின் அழைப்பின் பேரில் பயணமாகவுள்ள இக்குழுவினை பிரதமரும், கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ நியமித்துள்ளார்.ஐவர் கொண்ட இக்குழுவுக்கு தலைவராக மர்ஜான் பளீல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களான கலாசார அமைச்சின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமரின் ஆலோசகர் நகீப் மெளலானா, அப்துல் சத்தார் , மசூர் மெளலானா, அஹ்கம் உவைஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சவூதியில் ஹஜ் அமைச்சருடன் இலங்கை ஹஜ் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தூதுக்குழுவொன்றினை அனுப்புவதில்லை என கலாசார அமைச்சு தீர்மானித்திருந்த நிலையில் அத்தீர்மானத்தை மாற்றி தூதுக் குழுவொன்றினை அனுப்பி வைக்க பிரதமரும், கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ தீர்மானித்துள்ளார்.
இக்குழுவுடன் சவூதியில் இலங்கைத் தூதுவரும் கொன்சியுலர் ஜெனரலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கோட்டா, முஅல்லிம் ஏற்பாடுகள், மக்கா, மதீனா போக்குவரத்துகள், சவூதியில் தங்குமிட வசதிகள் உட்பட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
இக்குழு தங்கியிருக்கும் காலத்தில் மக்காவுக்கும் மதீனாவுக்கும் விஜயம் செய்யவுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்