புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு பொறுப்புதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

0 780

நாட்டின் புற்­று­நோ­யா­ளர்கள் அத்­தி­யா­வ­சிய மருந்­து­களின் தட்­டு­ப்பாட்­டினால் பல இன்­னல்­களை அனு­ப­வித்­தனர். மஹ­ர­கம தேசிய புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையில் நில­விய மருந்து தட்­டு­ப்பாட்டின் கார­ண­மாக நோயா­ளர்கள் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கினர். கடந்த கால அர­சாங்­கத்தின் சுகா­தார அமைச்­சரின் அசி­ரத்­தையே இதற்குக் காரணம் என தற்­போது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

புற்று நோயா­ளர்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாக தேவைப்­படும் தட்­டு­ப்பாடு நிலவும் மருந்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு புதிய அர­சாங்கம் 100கோடி ரூபாவை உட­ன­டி­யாக ஒதுக்­கி­யுள்­ளதை நாம் செய்­தி­யாக வெளி­யிட்­டி­ருந்தோம். புற்று நோயா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய மருந்­து­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­ட­வேண்­டிய நிதி வேறு தேவை­க­ளுக்கு கடந்த காலங்­களில் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அச்செய்தி தெரிவித்தது.

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் தேவை­யான மருந்து வகை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு புதிய சுகா­தார அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சி உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்தார். அமைச்­சரும், அமைச்சின் செய­லாளர் பி.எம்.எஸ். சார்ல்ஸும் திறை­சே­ரி­யுடன் கலந்­து­ரை­யா­டி­ய­தன்பின் 100 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது.

தட்­டுப்­பாடு நிலவும் அத்­தி­யா­வ­சிய மருந்து வகை­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு திறை­சேரி 100 கோடி ரூபா நிதி­யினை ஒதுக்­கி­ய­போதும் அந்­நிதி மருந்து கொள்­வ­ன­வுக்கு முழு­மை­யாக பயன்­ப­டுத்த முடி­யாமற் போனதை அறிந்து கொள்­ளும்­போது வேத­னை­ய­ளிக்­கி­றது.

ஒதுக்­கப்­பட்ட 100 கோடி ரூபாவில் 80 கோடி ரூபாவை முன்பு மருந்து கொள்­வ­னவு செய்த கடனைச் செலுத்­து­வ­தற்கு பயன்­ப­டுத்­தி­ய­தாக மஹ­ர­கம அபேக் ஷா வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் விஷேட வைத்­தியர் வசந்த திசா­நா­யக்க ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

எஞ்­சிய 20 கோடி ரூபாவில் தட்­டு­ப்பாடு நிலவிய 24 மருந்து வகை­களில் 15 வகை மருந்­து­களை அவ­சர கொள்­வ­னவு விதியின் கீழ் கொள்­வ­னவு செய்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். கடந்த 5 வரு­டங்­க­ளாக அரச ஒள­டத கூட்­டு­த்தா­பனம் மற்றும் தனியார் மருந்து கம்­ப­னி­களில் கட­னுக்கு மருந்து கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளதால் அதற்­கு­ரிய பணம் செலுத்­தப்­ப­டாமை கார­ண­மா­கவே மருந்து தட்­டுப்­பாடு நில­வி­ய­தா­கவும் அவர் கூறினார். மேலும் 9 வகை மருந்­துகள் வெளி­நா­டு­களில் இருந்து கொள்­வ­னவு செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

கடந்த காலத்தில் புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையில் மாத்­தி­ர­மல்ல ஏனைய அரச வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் மருந்து தட்­டுப்­பாடு நில­வி­யது. முறைப்­பா­டு­களும் முன்­வைக்­கப்­பட்­டன. புற்று நோய்க்­கான மருந்­துகள் வேறு எந்த வைத்­தி­ய­சா­லை­யிலும் பெற்றுக் கொள்­ள­மு­டி­யாது. இதனால் மாற்று வழி­யின்றி நோயா­ளர்­களும் அவர்­க­ளது குடும்­பத்­தி­னரும் நோயாளர்களின் நலனுக்கு பிரார்த்­த­னை­களிலே ஈடு­பட்டனர். உரிய மருந்து கிடைக்­காத நிலையில் அவர்கள் தெய்­வங்கள் மீதே நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர்.

இந்த மருந்து தட்­டுப்­பாடு பற்றி மாவட்ட ரீதியில் ஊடக மாநா­டுகள் நடத்தி அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. ஊடக மாநா­டு­களை வைத்­தியர் சங்கம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அதனால் எவ்­வித பலனும் கிடைக்­க­வில்லை.
சுமார் 35 வகை புற்­றுநோய் மருந்­துகள் தட்­டுப்­பாடு நிலவி வந்­த­தா­கவும் மருந்து தட்­டுப்­பாடு தொடர்பில் வாய் திறக்க வேண்டாம் என முன்னாள் சுகா­தார அமைச்சர் தனக்கு உத்­த­ர­விட்­ட­தா­கவும், வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் திசா­நா­யக்க ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்­த­போது தெரி­வித்­தி­ருந்தார்.

முன்னாள் அமைச்­சரின் இவ்­வா­றான செயற்­பா­டுகள் கண்­டிக்­கத்­தக்­கதும் மனி­தா­பி­மானம் அற்­ற­து­மாகும். வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் தெரி­விப்­பது உண்மை என்றால் இது தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

நோயா­ளர்­களின் உயிர்­களை பாது­காக்கும் மருந்து வகைகள் தட்­டுப்­பாடு நில­வும்­போது – தட்­டுப்­பாடு இல்லை என்று ஊடக அறிக்கை வெளி­யிடும் விட­யத்­துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

நோயாளர்களின் வாழ்க்கையை அரசியலுடன் சம்பந்தப்படுத்தக் கூடாது.

இவ்வாறான அமைச்சர்களுக்கு சிகிச்சை பெற சிங்கப்பூரில் வைத்தியசாலைகள் இருக்கின்றன. ஆனால் எமது நாட்டு நோயாளர்களுக்கு இருப்பது எமது நாட்டு வைத்தியசாலைகள் மாத்திரமே. எமது நாட்டில் இலவச வைத்தியசேவை பெயரளவில் இருக்கக் கூடாது. புதிய அரசாங்கம் இலவச வைத்தியசேவை தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.