சாதாரண தர பரீட்சை எழுதும்: மாணவிகளின் பர்தா விவகாரம் குறித்து வெளிவரும் செய்திகள் தவறானவை

கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும

0 1,528

நடை­பெற்று வரும் க.பொ.த சாதா­ரண தர பரீட்­சைக்குத் தோற்றும் எந்­த­வொரு முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தியும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. பர்தா அணிந்து பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் பரீட்சை மண்­ட­பங்­க­ளுக்குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என வெளி­வரும் செய்­திகள் தவ­றா­னவை என கல்வி, இளைஞர் விவ­காரம் மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்­துள்ளார்.

பாட­சாலை சீரு­டையில் பர்தா அணிந்து பரீட்சை எழு­தச்­சென்ற முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளரால் பரீட்சை மண்­ட­பத்­திற்குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­வந்த செய்தி தொடர்பில் மறுப்பு அறிக்­கை­யொன்­றினை கல்­வி­ய­மைச்சர் வெளி­யிட்­டுள்ளார். அவ்­வ­றிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘இது உண்­மைக்குப் புறம்­பான தகவல், அர­சியல் இலாபம் கருதி வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்தி. கெக்­கி­ராவ கல்வி வல­யத்தைச் சேர்ந்த பரீட்சை நிலை­யத்­திற்கு பரீட்சை எழு­து­வ­தற்­காக பர்தா அணிந்து சென்ற மாண­விகள் பரீட்சை மண்­ட­பத்­துக்குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்ற செய்­தியைக் கேள்­வி­யுற்ற நான் உட­ன­டி­யாக பரீட்சை ஆணை­யாளர் நாய­கத்தை தொடர்பு கொண்டேன். இது தொடர்பில் ஆரா­யு­மாறு உத்­த­ர­விட்டேன். குறிப்­பி­டப்­பட்ட பரீட்சை நிலைய பொறுப்­பா­ள­ரிடம் இது தொடர்பில் வின­வப்­பட்­டுள்­ளது. பரீட்சை ஆணை­யாளர் நாயகம் அவ­ரு­டனும், வல­யக்­கல்விப் பணிப்­பா­ள­ரு­டனும் தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறார். இவ்­வா­றான சம்­பவம் இடம்­பெ­ற­வில்லை என அவர்கள் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

பரீட்­சைக்குத் தோற்றும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் பரீட்­சார்த்­திகள் எவ்­வித இடை­யூ­று­மின்றி பரீட்சை எழு­து­வ­தற்­கான சூழல் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கையர்களாகிய நாம்இச்சந்தர்ப்பத்தில் பொய்ப்பிரசாரங்களைப் பரப்பாமல் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவர்கள் தைரியத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்’ என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.