கட்டாய முகாம்களில் உய்குர் முஸ்லிம்களை மூளைச்சலவை செய்யும் சீனா

நடப்பது என்ன?

0 1,140

உயர் பாது­காப்பு சிறை முகாம்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை சீனா எப்­படி திட்­ட­மிட்டு மூளைச் சலவை செய்­கி­றது என்­பதை, வெளியில் கசிந்­துள்ள ஆவ­ணங்கள் முதன்­மு­றை­யாக அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளன.

மேற்குப் பகு­தியில் உள்ள சின்­ஜியாங் மாகா­ணத்தில் உள்ள முகாம்­களில், சேவை முறை­யி­லான கல்வி மற்றும் பயிற்­சிதான் அளிக்­கப்­ப­டு­கி­றது என்று சீன அரசு தொடர்ச்­சி­யாகக் கூறி வரு­கி­றது.

ஆனால், பிபிசி பனோ­ர­மா­வுக்கு கிடைத்த ஆவ­ணங்கள், அந்த முகாம்­வா­சிகள் எவ்­வாறு அடைத்து வைக்­கப்­பட்டு, கருத்து திணிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்டு தண்­டிக்­கப்­ப­டு­கி­றார்கள் என்­பதைக் காட்­டு­ப­வை­யாக உள்­ளன. இந்த ஆவ­ணங்கள் பொய்­யா­னவை என்று பிரிட்­ட­னுக்­கான சீன தூதர் கூறி­யுள்ளார்.

சர்­வ­தேச புல­னாய்வுச் செய்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்­பிடம் (ஐ.சி­.ஐ.ஜே) இந்த ஆவ­ணங்கள் அளிக்­கப்­பட்­டன. பிபிசி பனோ­ரமா மற்றும் பிரிட்­டனை சேர்ந்த தி கார்­டியன் பத்­தி­ரிகை உள்­ளிட்ட 17 ஊட­கங்கள் இணைந்து இந்தக் கூட்­ட­மைப்பு செயற்­ப­டு­கி­றது.

சின்­ஜியாங் முழு­வதும் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக அமைக்­கப்­பட்டு வரும் முகாம்கள், பயங்­க­ர­வா­தத்தை ஒடுக்கும் நோக்கில், தன்­னார்­வத்தின் அடிப்­ப­டையில் மறு-­கற்­பித்தல் தேவை­க­ளுக்­காக, உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன என்று சீனா கூறி­யி­ருப்­பது பொய் என இந்தப் புல­னாய்வுத் தக­வல்கள் காட்­டு­கின்­றன.

சுமார் பத்து இலட்சம் பேர் – பெரும்­பாலும் முஸ்லிம் உய்குர் சமூ­கத்­த­வர்கள் – விசா­ரணை ஏது­மின்றி இந்த முகாம்­களில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

`சீன கேபிள்கள்’ என்று ஐ.சி.ஐ.ஜே. குறிப்­பிடும் சீன அரசின் ஆவ­ணங்கள், 2017ல் சின்­ஜியாங் கம்­யூனிஸ்ட் கட்­சியின் துணைச் செய­லா­ள­ரா­கவும், அந்தப் பிராந்­திய பாது­காப்புப் பிரிவு உயர் அதி­கா­ரி­யா­கவும் இருந்த ட்ச்சு ஹாய்லுன் என்­பவர், அந்த முகாம்­களை நிர்­வ­கித்து வந்­த­வர்­க­ளுக்கு அனுப்­பிய ஒன்­பது பக்க குறிப்­பா­ணையை உள்­ள­டக்­கி­ய­தாக உள்­ளது.

முகாம்­களை உயர் பாது­காப்பு கொண்ட சிறை­க­ளாக, கடு­மை­யான ஒழுங்­கு­மு­றைகள் மற்றும் தண்­ட­னை­க­ளுடன், யாரும் தப்­பி­விட முடி­யா­த­படி நிர்­வ­கிக்க வேண்டும் என்ற அறி­வு­றுத்­தல்கள் அதில் உள்­ளன.

இந்தக் குறிப்­பா­ணையில் உள்ள உத்­த­ர­வு­களில் பின்­வ­ரு­பவை அடங்­கி­யுள்­ளன:

“தப்பிச் செல்­வதை ஒரு­போதும் அனு­ம­திக்கக் கூடாது.”

“நடத்தை விதி­களை மீறினால் ஒழுங்­கு­முறை மற்றும் தண்­ட­னை­களை அதி­க­ரி­யுங்கள்.”

“தவ­றுக்­காக வருந்­து­வ­தையும், ஒப்புக் கொள்­வ­தையும் அதி­க­ரி­யுங்கள்.”

“பரி­கா­ர­மாக சீன மொழியை கற்­பித்­த­லுக்கு உயர் முன்­னு­ரிமை அளி­யுங்கள்.”

“உண்­மை­யி­லேயே போக்கை மாற்றிக் கொள்ளும் மாண­வர்­களை ஊக்­கு­வி­யுங்கள்.”

“குழு­வாகத் தங்கும் பகு­தி­களை வீடியோ கமரா மூலம் கண்­கா­ணிப்­ப­தையும், வகுப்­ப­றை­களில் கம­ராவில் படாத பகு­திகள் இல்­லா­தி­ருப்­ப­தையும் உறுதி செய்­யுங்கள்.”

அங்கே அடைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் ஒவ்வோர் அசைவும் எப்­படி கண்­கா­ணிக்­கப்­பட்டு, கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பதை இந்த ஆவ­ணங்கள் காட்­டு­கின்­றன: “மாண­வர்­களின் படுக்­கைகள் இடம் மாறா­தி­ருக்க வேண்டும்,

மாண­வர்­களின் வரிசை மாறக் கூடாது, வகுப்­ப­றையில் அமரும் இடம் மாறக் கூடாது, திறன் செயல்­பா­டு­க­ளின்­போது நிரந்­த­ர­மான இடம் ஒதுக்­கப்­பட வேண்டும், இவற்றை மாற்­றினால் கடு­மை­யாகத் தண்­டிக்­கப்­பட வேண்டும்.”

அதிக அளவில் உய்குர் மக்கள் அடைக்­கப்­பட்­டி­ருப்­பதை மற்ற சில ஆவ­ணங்கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. தெற்கு சின்­ஜியாங் பகு­தியில் இருந்து 2017இல் ஒரு வாரத்தில் மட்டும் 15,000 க்கும் மேற்­பட்­ட­வர்கள் பாது­காப்பு முகாம்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

வெளியில் கசிந்­துள்ள ஆவ­ணங்­களை, வழக்­க­றி­ஞர்கள் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்று மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பக அமைப்பின் சீன இயக்­குநர் ஷோபி ரிச்­சர்ட்சன் கூறி­யுள்ளார்.

“இது நட­வ­டிக்­கைக்கு உகந்த ஆவ­ண­மாக உள்­ளது. மனித உரி­மைகள் அப்­பட்­ட­மாக மீறப்­ப­டு­வதைக் காட்­டு­ப­வை­யாக உள்­ளன” என்று அந்தப் பெண் இயக்­குநர் கூறு­கிறார். “அங்கே அடைக்­கப்­பட்­டுள்ள நபர்கள் குறைந்­த­பட்சம் உள­வியல் ரீதியில் கொடு­மைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறு­வது சரி­யாக இருக்கும் என்று நான் நினைக்­கிறேன். ஏனெனில், எவ்­வ­ளவு காலத்­துக்கு அங்கே இருக்கப் போகிறோம் என்று அவர்­க­ளுக்குத் தெரி­யாது” என்று அவர் குறிப்­பி­டு­கிறார்.

தங்­க­ளு­டைய போக்­கு­களில், நம்­பிக்­கையில், மொழி பயன்­பாட்டில் மாறி­யி­ருக்­கிறோம் என்­பதை நிரூ­பித்தால் மட்­டுமே அங்­கி­ருந்து விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள் என்­பதை இந்தக் குறிப்­பா­ணைகள் விவ­ரிக்­கின்­றன.

“தங்­க­ளு­டைய கடந்த கால செயல்­பா­டுகள் சட்­ட­வி­ரோ­த­மா­னவை, குற்றச் செய­லா­னவை, அபா­ய­க­ர­மா­னவை என்­பதை ஆழ­மாகப் புரிந்து கொள்ளும் வகையில், தண்­டனை மற்றும் ஒப்புக் கொள்ளச் செய்யும் செயற்­பா­டு­களை தீவி­ரப்­ப­டுத்த வேண்டும்” என்று குறிப்­பாணை கூறு­கி­றது.

“சரி­யான புரிதல் இல்­லா­த­வர்கள், எதிர்­மறை சிந்­தனை கொண்­ட­வர்கள் அல்­லது ஏற்றுக் கொள்­ளாத சிந்­தனை உள்­ள­வர்­களைப் பொறுத்­த­வரை, பலன் ஏற்­ப­டு­வதை உறுதி செய்யும் வரையில் கல்வி சீர­மைப்பு நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து மேற்­கொள்­ளுங்கள்.”

மக்­களின் அடை­யா­ளங்­களை மாற்­று­வ­தற்கு இந்த முகாம்­களில் முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக, உலக உய்குர் காங்­கிரஸ் ஆலோ­ச­கரும், மனித உரி­மைகள் முன்­னணி வழக்­க­றி­ஞ­ரு­மான பென் எம்­மர்சன் க்யூ.சி. கூறு­கிறார்.

“ஒட்­டு­மொத்த இனத்தின் மீது பெரிய அளவில் மூளைச் சலவை செய்யும் திட்­டங்கள் திணிக்­கப்­ப­டு­கின்­றன.”

“சின்­ஜியாங் முஸ்லிம் உய்­குர்­களை தனிக் கலா­சார பிரி­வி­ன­ராக இல்­லாமல் ஆக்கும் நோக்கில் குறிப்­பாக திட்­ட­மிட்டு முயற்­சிகள் மேற்­கொள்ளப் படு­கின்­றன. பூமியில் அப்­படி ஒரு கலா­சாரப் பிரிவே இல்லை என்று ஆக்­கி­விட முயற்­சிக்­கி­றார்கள்.”

முகாம்­களில் அடைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் “சித்­தாந்த மாறு­பா­டு­க­ளுக்கு, கல்வி மற்றும் பயிற்­சி­க­ளுக்கு, ஒழுங்­கு­முறை விதி­களைப் பின்­பற்­று­த­லுக்கு” என மதிப்பெண் பெறு­கி­றார்கள் என்று குறிப்­பாணை கூறு­கி­றது.

தண்­ட­னைகள் மற்றும் பாராட்டுப் புள்­ளி­களைப் பொறுத்து, குடும்­பத்­தி­ன­ருடன் அவர்கள் தொடர்பு கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்கள். அதன் அடிப்­ப­டை­யில்தான் விடு­தலை பற்­றியும் முடிவு செய்­யப்­ப­டு­கி­றது. அவர்­க­ளிடம் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது என்று நான்கு கம்­யூனிஸ்ட் கட்சி கமிட்­டிகள் உறுதி செய்த பிற­குதான் அவர்­க­ளு­டைய விடு­தலை பற்றி பரி­சீ­லிக்­கப்­ப­டு­கி­றது.

பெரிய அளவில் மக்­களை சீன அரசு எப்­படி கண்­கா­ணிக்­கி­றது என்­ப­தையும், தனிப்­பட்ட தக­வல்­களை எப்­படி ஊகித்து கவ­னிக்­கி­றது என்­ப­தையும் காட்­டு­வ­தா­கவும் இந்த ஆவ­ணங்கள் உள்­ளன.

Zapya என்ற தகவல் பகிர்வு ஆப் -ஐ தங்கள் செல்­போன்­களில் வைத்­தி­ருக்கும் கார­ணத்­துக்­காக 1.8 மில்­லியன் பேரை எப்­படி சீனா கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை ஓர் ஆவணம் காட்­டு­கி­றது.

பிறகு அவர்­களில் 40,557 பேரை “ஒவ்­வொ­ரு­வ­ராக” அதி­கா­ரிகள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர். “சந்­தே­க­மற்­றவர் என உறுதி செய்ய முடி­யாமல் போனால்” அவர்­களை “தீவிர பயிற்சி முகா­முக்கு” அனுப்ப வேண்டும் என்று அந்த ஆவணம் கூறு­கி­றது.

வெளி­நாட்டுக் குடி­யு­ரிமை வைத்­தி­ருக்கும் வீகர் மக்­களை கைது செய்­வ­தற்கு வெளிப்­ப­டை­யான உத்­த­ர­வுகள் அதில் உள்­ளன. வெளி­நா­டு­களில் வாழும் வீகர் மக்­களின் செயல்­பா­டு­களை கண்­கா­ணிக்­கவும் அறி­வு­றுத்தல் உள்­ளது. உலக அள­வி­லான இந்த செயல்­பா­டு­களில், வெளி­நா­டு­களில் உள்ள சீன தூத­ரக அலு­வ­ல­கங்கள் ஈடு­பட்­டுள்­ளன என்­பதும் இந்த ஆவ­ணங்கள் மூலம் தெரிய வரு­கி­றது.

அரசின் நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பாதுகாக்கப் பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் சின்ஜியாங் பகுதியில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் கூட நடக்கவில்லை என்றும் பிரிட்டனில் உள்ள சீன தூதர் லியூ ஜியாவோமிங் கூறியுள்ளார்.

“அந்தப் பிராந்தியத்தில் சமூக ஸ்திரத்தன்மை உள்ளது. இன மக்களிடையே ஒற்றுமை உள்ளது. மனநிறைவு மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.”

“உண்மைகள் இப்படி இருந்தாலும், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான காரணமாக சின்ஜியாங் முகாம்கள் குறித்து மேற்கத்திய நாடுகளில் சிலர் அவதூறு பேசுகின்றனர். சின்ஜியாங்கில் தீவிரவாத ஒழிப்புக்கு சீன அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடையூறு செய்யவும், சீனாவின் உறுதியான வளர்ச்சியைத் தடுக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்” என்று அவர் கூறினார்.-Vidivelli
   

  • பி.பி.சி

Leave A Reply

Your email address will not be published.