றபீஉனில் ஆகிர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்றைய தினம் மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
மௌலவி அப்துல் ஹமீத் தலைமையில் இடம்பெறும் இம்மாநாட்டில் பெரிய பள்ளி நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உட்பட மேமன், ஹனபி பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.
இன்று மாலை தலைப்பிறையை கண்டவர்கள் பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுவிற்கு அறியத் தருமாறும் வேண்டப்பட்டுள்ளனர்.
அத்துடன், தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் இறுதித் தீர்மானம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கபடும் தலைப்பிறை சம்பந்த பட்ட பொய்யான வதந்திகளை மக்களுக்கு பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கொழும்பு பெரியபள்ளிவாசல் பிறைக்குழு கேட்டுள்ளது.-Vidivelli
- ஷிப்னா சிராஜ்