நாளை வழங்கப்படவுள்ள இராஜாங்க அமைச்சர் நியமனங்களின்போது முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு பதவி வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பைசர் முஸ்தபா, முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமவீர மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தான் இக்கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்