தேசிய மக்கள் சக்தி அடுத்து என்ன செய்யும்?

0 1,307

சட்­டி­யி­லி­ருந்து தான் அகப்­பைக்கு வரும் என்­பார்கள், அது போன்றுதான் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலும் நிகழ்ந்து முடிந்­தி­ருக்­கி­றது. அதா­வது சிங்­கள மக்கள் இன அடிப்­ப­டை­யி­லேயே தமது தீர்­மா­னங்­களை எடுத்து வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இவர்­களின் வாக்­கு­களில் தளம்பல் இருந்­ததால் தான் சிறு­பான்­மை­களின் வாக்­குகள் ஆதிக்கம் செலுத்தி இவர்­களின் அடிப்­படைத் தெரிவு தோல்­வி­யுற்­றது. இதனால்தான் அந்த அரசை சிறு­பான்­மை­களின் அரசு என அடிக்­கடி இவர்கள் கூறி வந்­தார்கள். சிறு­பான்­மை­களும் நம்மால் தெரி­வான அரசு எனக் கூறிக் கொண்­டி­ருந்­தார்கள்.

எனினும், வெறு­மனே ஆட்சி மாற்­றத்­துக்கு மட்­டுமே சிறு­பான்­மை­களின் வாக்­குகள் உத­வி­னவே தவிர எந்த உருப்­ப­டி­யான பலன்­களும் சிறு­பான்­மை­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை. சிறு­பான்­மை­களின் வாக்­கு­களால் பயன்­பெற்று ஜனா­தி­ப­தி­யான மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறு­பான்­மை­களை மறந்து ரணி­லுக்கும் முட்­டுக்­கட்­டை­களை போட்டார். சிறு­பான்­மை­க­ளுக்கு சார்பு இல்­லா­த­வ­ரா­கவும் இருந்தார். உண்­மையில் இவ­ரது பாத்­திரம் ஒரு­வரைப் பாது­காக்க அவரைத் தோற்­க­டிப்­பது போன்றே அமைந்­தி­ருந்­தது. எதிர்­தரப்பு வலிமை பெறாமல் அதைக் கட்­டுக்குள் வைத்­தி­ருப்­ப­தா­க­வுமே அமைந்­தி­ருந்­தது.

* பல கட்­சி­க­ளி­னதும் குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சி­க­ளி­னதும் வாக்­கு­க­ளையும் பெற்று பொது அபேட்­ச­க­ராகப் போட்­டி­யிட்டு வென்ற இவர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையை ஏற்றுக் கொண்டார். அன்றே போட்டி அர­சியல் ஆரம்­ப­மாகி விட்­டது.

* அதி­லி­ருந்து கொண்டே ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ரான நிலைப்­பா­டு­களை மும்­மு­ர­மாக முடுக்­கி­விட்டார். சில சம­யங்­களில் கட்டு மீறியும் சென்றார்.

* முதலில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு விசு­வா­ச­மாக இருப்­ப­தாகக் காட்டிக் கொள்ள சில நட­வ­டிக்­கை­களை எடுத்த பிறகு மறை­மு­க­மாக முழு­மூச்சில் மகிந்த தரப்பை வளர விட்டார்.

* அவற்றில் ஓர் உச்­ச­கட்டம் தான் தன்­னிடம் தோல்­வி­யுற்ற மகிந்த ராஜபக் ஷவைப் பிர­த­ம­ராக்கி ரணிலை எம்­பி­யாக்­கி­ய­மை­யாகும்.

*தமிழ் தரப்பை ஆசு­வா­சப்­ப­டுத்த ரணிலை அமைத்துக் கொண்டு முஸ்­லிம்­க­ளையும் அதில் சேர­விட்டு தேசிய ரீதியில் முழு நாடும் இணைந்­தி­ருப்­ப­தாக ஐ.நாவிடம் எண்­பித்துப் போர்க் குற்­றத்­தையும் ஏற்றுக் கொண்டு, பொறுப்­புக்­கூ­றவும் ஒப்­புக்­கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்றுக் கொண்டு, 30/1 ஆம், 34/1 ஆம் நிபந்­த­னை­க­ளுக்கும் இணங்கி விசா­ர­ணை­யையும் தண்­ட­னை­யையும் முடுக்கிவிட்டார்.

* எமது ஆட்சி இப்­போது தான் பொறுப்­பேற்­றி­ருக்­கி­றது. கால அவ­காசம் தேவை. சர்­வ­தேசத் தலை­யீடு அனர்த்­தங்­களை ஏற்­ப­டுத்தும். நாமே எமது பிரச்­சி­னையைத் தீர்த்­துக்­கொள்ள அனு­மதி தேவை என்றார்.

இப்­ப­டி­யெல்லாம் கூறி­யவர் போர் வீரர்கள், நாட்டின் தியா­கிகள் இத்­த­கை­யோரை உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ விசா­ரிக்­கவும் தண்­டிக்­கவும் இட­ம­ளிக்க மாட்டோம் எனவும் கூறித் தனது ஆட்சி காலம் முழு­வதும் எதுவும் செய்­ய­வில்லை. இறு­தி­யாக ஐ.நாவில் குற்ற விலக்கை மட்டும் பெற்று ஏனை­ய­வற்­றுக்குத் தவணை பெற முயன்று அது பலிக்­காது எனத் தெரிந்­ததும் திரும்­பி­விட்டார். இப்­போது ஐ.நாவின் நிபந்­த­னைகள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டாமல் அப்­ப­டியே கிடப்பில் இருக்­கின்­றன.

இந்­நி­லை­யி­லேயே சிங்­கள வாக்­கு­களை 90 வீதம் பெற்ற புதிய அரசு இம்­முறை நிகழ்ந்த ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வின்­படி ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றது. குற்­றத்தின் பங்­கா­ளிகள் எனப்­பட்­டோ­ரி­டமே ஆட்சி கிடைத்­தி­ருப்­பதும் எதிர்­பா­ராத ஒரு மாற்­ற­மா­கவே இருக்­கி­றது. இவர்கள் ஐ.நாவுக்கு என்ன முன்­வைக்கப் போகி­றார்கள்.

* குற்­றத்தை ஒப்புக் கொள்­வார்­களா?

* பொறுப்­புக்­கூ­றலை ஏற்­றுக்­கொள்ளப் போகி­றார்­களா?

* இணை அனு­ச­ர­ணையைப் பெற்றுக் கொள்­ளப்­போ­கி­றார்­களா?

* 30/1 ஆம், 34/1 ஆம் நிபந்­த­னை­களை முழு­மை­யாக நிறை­வேற்­றப்­போ­கி­றார்­களா?

* பல்­லின வடி­வி­லான புதிய யாப்பை இயற்­று­வார்­களா?

* வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னைக்­கான தீர்வை வழங்­கு­வார்­களா?

* இவை யாவற்­றையும் நீர்த்துப் போகச் செய்யும் உபா­யங்­களை ஐ.நாவில் கையா­ளு­வார்­களா?

* ஐ.நாவும் பெரும்­பான்மை சிங்­கள மக்­களும் எதிரும் புதி­ரு­மாக இரு முனை­களில் இருந்தால் இவர்­களின் நிலை எவ்­வாறு அமையும்?

* தற்­போ­தைய அரசு முற்­றிலும் பேரின வடி­வத்தைப் பெற்­றி­ருப்­பதால் அந்தப் பேரின கட்­ட­மைப்பை மீறும் வாய்ப்பு அமை­யாது என்றே நான் நினைக்­கின்றேன்.

* கடந்த அரசில் ஓர­ளவு பல்­லினக் கட்­ட­மைப்பு இருந்த நிலை­யி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் கண்­டி­ருக்க வேண்டும். 100 திட்­டத்தின் போது அதிக வாய்ப்பு இருந்­தது.

தற்­போது நிகழ்ந்­தி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்தல் இனங்­களின் மத்­தியில் பிர­தே­சங்­களை வேறு­ப­டுத்­தி­யி­ருப்­ப­தோடு இனப்­பா­கு­பாட்­டையும் கூராக்­கி­யி­ருக்­கி­றது. ஒத்­தொ­ரு­மித்த நாட்டில் சகல இனங்­களும் அதி­காரப் பகிர்வு மூலம் நல்­லு­ற­வோடு வாழும் இணக்­கப்­பாட்டை நீக்கி நாங்கள் வேறு நீங்கள் வேறு என்னும் ரீதியில் வேண்டாம் எனத் தனித்­த­னி­யாகப் பிரித்து விட்­டி­ருக்­கி­றது. மனம் பிரிந்து நிலம் பிரிய விட்­டி­ருக்­கி­றது. எவ­ரையும் வலுக்­கட்­டா­ய­மாக ஆள முடி­யாது.

1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்­தலில் 168 பாரா­ளு­மன்ற ஆச­னங்­களில் ஜே.ஆர் 140 ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்தார். இது ஆறில் ஐந்து பங்­காகும்.

எனினும் வடக்கு, கிழக்கில் தமிழ் தரப்பே 18 ஆச­னங்­க­ளையும் பெற்­றி­ருந்­தது.

அதற்கு சுய­நிர்­ணய இறைமைக் கோரிக்­கை­யோ­டுதான் மக்­க­ளாணை கிடைத்­தி­ருந்­தது. எனவே ஜே.ஆர். தான் பெற்ற அதிகப் பெரும்­பான்­மையைக் கரு­தாமல் ஜன­நா­யக ரீதியில் மக்­க­ளா­ணைக்கு மதிப்­ப­ளித்து வடக்கு, கிழக்குத் தமிழ் தரப்­பி­னரை அழைத்துப் பேசி தீர்வு கண்­டி­ருந்தால் அப்­போதே இனப்­பி­ரச்­சினை இலங்­கையில் ஒழிந்து போயி­ருக்கும்.

அதே சூழல்தான் இப்­போது மீளவும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது என நினைக்­கிறேன். தற்­போ­தைய அர­சுக்கு சிங்­கள மக்கள் 90 வீதம் வாக்­க­ளித்த போதும் கூட கட்சி பேத­மின்றி வடக்கு கிழக்கு தமிழ் தரப்பின் மக்­க­ளா­ணையை ஏற்று இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தாக வேண்டும். 1956 ஆம் ஆண்டு சிங்­களப் பேரி­ன­வா­தத்தைக் கையாண்டே எஸ்.டபிள்யூ.ஆர்.டிபண்­டா­ர­நா­யக்க பிர­த­ம­ரானார். பின்னர் பேரின வடிவில் நாட்டை ஆள­மு­டி­யாது எனத் தெரிந்து கொண்டு தந்தை செல்­வா­வோடு ஒப்­பந்தம் செய்ய முயன்­றதும் சிங்­களப் பேரி­ன­வாதம் அவ­ரது உயி­ரையே பறித்­து­விட்­டது. எனவே அதைப்­போ­ஷித்து வளர்த்துக் கொண்டு இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க முயல்­வது உசி­த­மல்ல.

ஆக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்­கையில் நிகழ்ந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு முற்­றிலும் எதிர்­பா­ரா­த­தாகும். 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்­த­லின்­படி வடக்­குக்கும் கிழக்­குக்கும், மலை­ய­கத்­துக்கும் வெளி­யே­யுள்ள சிங்­கள வாக்­குகள் இரு­பெரும் தேசியக் கட்­சி­க­ளுக்கும் ஓர­ளவு கூட குறையப் பிரிந்­தாலும் வடக்கு, கிழக்கு மலை­யக சிறு­பான்மை வாக்­குகள் குறை­நி­ரப்பு செய்யும் கட்­சியே வெற்­றி­பெறும் என்னும் நிலையே அன்று அமைந்­தி­ருந்­தது.

அத­னால்தான் அப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­தி­ருந்த அநு­ர­கு­மார திஸா­நா­யக்க இம்­முறை தனி­யாகப் போட்­டி­யிட்டு இரு தரப்­புக்­களும் வெற்­றி­பெற 51% வீதம் பெற முடி­யாத நிலை ஏற்­ப­டு­மாயின் இரண்டாம் கட்டக் கணக்­கெ­டுப்புத் தெரிவு மூலம் தனக்குக் கிடைக்கும் வாக்­கு­களால் ஒரு­வரைத் தீர்­மா­னிக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அதன் மூலம் தனது கட்சிக் கொள்­கை­களை வலுப்­ப­டுத்திக் கொள்­ளலாம் எனவும் அவர் எண்­ணி­யி­ருக்­கலாம்.
1982 ஆம் ஆண்டு ரோஹன விஜே­வீ­ரவும் 1988 ஆம் ஆண்டு நந்­தன குண­தி­லக்­கவும் ஜே.வி.பி.யின் சார்பில் தனி­யாகப் போட்­டி­யிட்டுப் பெற்ற வாக்­கு­களை விடவும் பெரி­தாக அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்குக் கிடைக்­க­வில்லை.

மொத்தம் 4 இலட்சம் வாக்­கு­களை மட்­டுமே இவர் பெற்­றி­ருந்தார். 37 ஆண்­டு­க­ளுக்கு முன் ரோஹன விஜே­வீர பெற்­றி­ருந்த வாக்­கு­களை விடவும் 31 ஆண்­டு­க­ளுக்கு முன்பு போட்­டி­யிட்­டி­ருந்த நந்­தன குண­தி­லக சிறி­த­ளவு வாக்­கு­களை அதி­க­மாகப் பெற்­றி­ருந்தார்.

அப்­ப­டி­யானால் ஜே.வி.பியின் சார்பில் தனி­யாக இம்­முறை போட்­டி­யிட்­டி­ருந்த இதன் தலைவர் இம்­முறை 37 ஆண்­டுகள் கழிந்த நிலையில் ஆளும் கட்­சி­யா­கவோ எதிர்க்­கட்­சி­யா­கவோ அமை­யா­விட்­டாலும் கூட இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் குறைந்த அளவு 10 இலட்சம் வாக்­கு­க­ளை­யா­வது பெற்றுக் காட்­டி­யி­ருக்க வேண்டும். காரணம் இத்­தேர்­தலில் முந்திக் கொண்டு 1 இலட்சம் பேரை கொழும்பு காலி முகத்திடலில் கூட்டிக் காட்­டி­யி­ருந்தார். அதைக் கண்­டதும் பாரிய வெற்­றியை அது பெறும் என்றே எல்­லோரும் நினைத்­தனர்.

காத்­தான்­குடி நல்­லாட்­சிக்­கான முன்­ன­ணியின் நஜா முஹம்மத் இதன் எழுச்­சியைப் பற்றி தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டியில் 1988 ஆம் ஆண்டு அஷ்­ர­புக்கு கிழக்கில் இருந்த அமோக வர­வேற்பே தற்­போது அங்கு அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்கு இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தார். தற்­போது கிடைக்கப் பெற்­றி­ருக்கும் வாக்­கு­களைப் பார்க்­கையில் முழு நாட்­டிலும் ஒவ்­வொரு தேர்தல் தொகு­தி­க­ளி­லு­மி­ருந்தும் கொஞ்சம் கொஞ்­ச­மாகப் பெற்­றுத்தான் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க 4 இலட்சம் வாக்­கு­களை மொத்­த­மாகப் பெற்­றி­ருக்­கிறார்.

1988 ஆம் ஆண்டு அஷ்ரப் ஜனா­தி­பதி பிரே­ம­தா­ச­வுடன் பேசி விகி­தா­சாரத் தேர்தல் முறை­யி­லி­ருந்த 12.5 வெட்­டுப்­புள்­ளியை 5 ஆகக் குறைக்­கா­தி­ருந்தால் சிறு கட்­சி­களும் சிறு­பான்மைக் கட்­சி­களும் பாரா­ளு­மன்ற ஆச­னங்­களைப் பெற்­றி­ருக்­கவே முடி­யாது. ரோஹன விஜே­வீ­ரவின் காலத்­திலும் நந்­தன குண­தி­லக்­கவின் காலத்­திலும் இந்த வாய்ப்பு இருக்­க­வில்லை. ஆக அநு­ர­கு­மார திசா­நா­யக்க இந்த வாய்ப்பைப் பயன்­ப­டுத்­தியே பாரா­ளு­மன்ற ஆச­னங்கள் சில­வற்றைப் பெற்றுக் கொண்டு வந்­தி­ருக்­கிறார்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ அண்­மையில் 5% வெட்­டுப்­புள்­ளியை 12.5% வீத­மாக்க ஒரு தனி­நபர் பிரே­ர­ணையைப் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வரப் போவ­தாகக் கூறி­யி­ருந்தார். அது நடை­மு­றை­யாகும் பட்­சத்தில் அக்­கட்­சிக்கும் பாரா­ளு­மன்ற ஆச­னங்கள் கிடைக்க வழி­யில்லை.

அதைத்தான் இப்­போது பேரி­ன­வா­திகள் செய்யத் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார்கள்.

* வடக்­கையும் கிழக்­கையும் நீதி­மன்றத் தீர்ப்பின் மூலம் பிரித்­தது ஜே.வி.பி என்­பதால் வடக்கு, கிழக்குத் தமி­ழரின் வெறுப்­புக்கு அது ஏற்­க­னவே ஆளா­கி­யி­ருந்­தது.

* வடக்கு கிழக்கு தமிழ் தரப்பின் 13 கோரிக்­கை­களில் இணைப்பைத் தவிர ஏனைய 12 கோரிக்­கை­க­ளையும் ஏற்­கிறோம் எனக்­கூ­றி­யது சிங்­க­ள­வர்­களை விட்டும் அதைத் தனி­மைப்­ப­டுத்­தி­விட்­டது.

* 37 ஆண்­டு­களும் ஜே.வி.பி.க்கு முஸ்­லிம்­க­ளோடு எந்த பங்­க­ளிப்பும் இல்லை. 1971 ஆம் ஆண்டு அது உரு­வாகி இத்­தனை காலமும் இந்­நி­லையே இருந்­தது. காரணம் ஆரம்பம் முதல் சிங்­கள வாக்கு வங்­கி­யையே மூல­த­ன­மாகக் கொண்­டி­ருந்­த­தாகும்.

* 2013 ஆம் ஆண்டு முதல், பிக்­கு­களின் தலை­மையில் முஸ்­லிம்கள் பர­வ­லாக இம்­சைப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். ஜே.வி.பி. அவற்றை எதிர்த்துப் போரா­ட­வு­மில்லை. நீதியின் பக்கம் நின்று முஸ்­லிம்­களை ஆத­ரிக்­கவும் இல்லை. பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­க­வு­மில்லை. அண்­மையில் நிகழ்ந்த ஜனா­தி­பதித் தேர்­த­லில்தான் முஸ்லிம் வாக்­கு­க­ளுக்­காகப் பர­வ­லாக முஸ்­லிம்­களை நெருங்­கி­யது.

பாரா­ளு­மன்ற ஒதுக்­கீட்டுப் பணத்தின் மூலமோ தனி முயற்­சி­களின் மூலமோ அவர்கள் பொது சேவைகள் செய்­த­தாகத் தெரி­ய­வில்லை. வெறும் பேச்சு வன்­மை­யாலும் தர்க்கக் கேள்­வி­க­ளா­லுமே ஒரு வட்­டத்­துக்குள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

மக்கள் விடு­தலை எனப் பெய­ருள்ள போதும; ஒரே இனத்தின் அடிப்­ப­டை­யி­லேயே கட்­சியின் நிர்­வா­கிகள் அமைந்­தி­ருக்­கி­றார்கள்.

பல்­லினம் சார்ந்து தலை­வரும், செய­லா­ளரும், பொரு­ளா­ளரும் அமைந்­தி­ருக்க வேண்டும். அவர்கள் பல்­வேறு மத, கலா­சார, மொழி விழு­மி­யங்­க­ளையும் கொண்­டி­ருக்க வேண்டும்.

பொரு­ளி­யலில் இறுக்­க­மான நிலைப்­பா­டற்­றதும் ஏற்ற தாழ்­வற்­ற­து­மான இல­கு­வான சம­நி­லைப்­பாட்டை கையாள வேண்டும்.

சம­தர்ம முன்­னோடி நாடு­க­ளான ரஷ்­யாவும் சீனாவும் கூடத் தற்­போது இறுக்­க­மான நிலைப்­பாட்டைக் கைவிட்­டி­ருப்­பதால் எம்­மி­டமும் நெகிழ்வு தேவை.
1971 ஆம், 1988 ஆம், 1989 ஆம் ஆண்­டு­க­ளிலும் கிளர்ச்சி நிகழ்ந்­த­தா­லேயே அச்சம் மேலிட்டு அங்­கத்­தவர் இணைப்பு நீண்ட கால­மாக வள­ர­வில்லை.

பொரு­ளூக்கம் கொண்­ட­வர்கள் செஞ்­சட்­டை­யையும் புரட்சி தாடி­யையும் கண்டு மிரண்டே பாமர மக்­களை ஜே.வி.பிக்கு எதி­ராக உசுப்­பேற்­றி­னார்கள். எனினும் பல்­லி­னங்­க­ளி­னதும் நாட்­டி­னதும் அடிப்­படை அவ­சி­யத்­தே­வைக்­கேற்ப அது தனது நிலைப்­பா­டு­களை மாற்றி புன­ர­மைத்துக் கொள்ள வேண்டும்.

இரு பெருந்­தே­சிய கட்­சி­க­ளிலும் பேரி­ன­வா­தி­களின் ஆளுமை இருப்­பதால் அவற்­றி­லான சிறு­பான்­மை­களின் இருப்பு கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது.
ஒரு பல்­லின யாப்பை இயற்­றி­னா­லன்றி சகல இனத்­தி­னரும் சம­மாக வாழ முடி­யாது.

ஒரு மத, ஒரு இன, ஒரு மொழி முன்­னு­ரி­மைகள் பிர­ஜைகள் மத்­தியில் ஏற்றத் தாழ்வை ஏற்­ப­டுத்­து­கின்­றன. இது கூடாது.

அரச தொழில்­க­ளிலும் தேச வளங்­க­ளிலும் விகி­தா­சாரப் பகிர்வு இல்­லா­தி­ருக்­கி­றது. இந்­நிலை நீக்­கப்­பட வேண்டும்.

ஒரே தேசம் ஒரே சமூகம் என்னும் நிலையில் எல்­லோரும் இன வித்­தி­யா­சங்­க­ளின்றி இலங்­கையர் என்னும் நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்த வேண்டும்.
ஜன­நா­ய­கமும் மனித உரி­மையும் சமூக நீதியும் சட்­ட­வாக்­கத்தின் நியா­யா­திக்­கமும் நிலை பெற­வேண்டும்.

தேங்­கி­யி­ருக்­காத பொரு­ளா­தாரப் பரவலாக்கலும் தொழில் பெருக்கமும் அமைய வேண்டும்.

இவற்றை சாதனையில் கொண்டு வர வேண்டுமாயின் பல்லின தேசிய ஒருமைப்பாடு அவசியமாகிறது. தனித்தனி இன மத அமைப்புகளால் இது சாத்தியமாக போவதில்லை. அத்தகைய முறையில் முழு இலங்கையரைக் கூட்டிணைக்கவும் முடியாது. சிங்களவர் சார்பில் மக்கள் விடுதலை

முன்னணியும் வடக்கு, கிழக்கு தமிழர் அமைப்புகளும் தனித்துவ முஸ்லிம் அமைப்புகளும் மலையகக் கட்சிகளும் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருவர் ஒன்றிணைந்து இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மூன்றாம் தரப்பினராக வென்று பெருந்தேசியக் கட்சிகளிலிருந்து ஒருவருக்கு நிபந்தனைகள் விதித்து 51% வீதத்தை அடையச்செய்திருக்கலாம்.

உண்மையில் சிறுபான்மைகளில் எவரும் தனித்து நின்று முழு நாட்டுக்குமான இந்த தேர்தலில் ஜனாதிபதியாக முடியாது. காரணம் 74 வீதம் சிங்கள மக்கள் வாழுகையில் 26 வீதமே சிறுபான்மைகள் வாழ்கிறார்கள்.

எனவே அனைத்து சிறுபான்மைகளும் ஜே.வி.பியோடு இணைந்து போட்டியிட்டிருப்பார்களாயின் மூன்றாம் இடத்திற்கு வருபவருக்கு தக்க அதிகாரத்தை வழங்கியிருக்கலாம். அதன்படி நிபந்தனைகளை விதித்து ஒப்புதல் வாங்கி சிறுபான்மைகள் தமது அபிலாஷைகள் யாவற்றையும் நிறைவேறச் செய்திருக்கலாம். இது தவறவிடப்பட்டதால் சிறுபான்மைகள் வழங்கிய சஜித்துக்கான வாக்குகள் வீணாகி விட்டன. சிங்கள வாக்குகள் மட்டுமே தனக்கு கிடைத்ததாக கோத்தாபய கூறிவிட்டார்.-Vidivelli

  • ஏ.ஜே.எம்.நிழாம்

Leave A Reply

Your email address will not be published.