தமிழ் முஸ்லிம்கள் சஜித்துக்கு அளித்த வாக்குகள் தேசிய அரசியலில் நியாயம் தேடும் நோக்கத்திலானது

இடதுசாரி குரல் அமைப்பு அறிக்கை

0 1,381

சிங்­கள தேசி­ய­வாத வெற்­றியை முன்­னி­லைப்­ப­டுத்­திய தேர்தல் பிர­சா­ரங்­களின் விளை­வாக இன்­றைய சமூக சூழ­மைவு தோற்­று­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும், தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் தங்­க­ளது சொந்த இனத்தை சார்ந்த வேட்பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­காமல் சிங்­கள வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளித்தன் மூலம் தேசிய அர­சியலில் தங்களுக்கு நியா­யத்தைப் பெறும் நோக்­கி­லேயே செயற்பட்­டி­ருக்­கி­றார்கள் என்று ‘இடது­சாரி குரல்’ அமைப்பு தெரி­வித்­தி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் மிகப் பயங்­க­ர­மா­னவை என்ற நிலையில் இட­து­சாரிக் குரல் அமைப்­பினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது :

இலங்­கையில் ஏழா­வது ஜனா­தி­ப­தியைத் தெரி­வு­செய்­வ­தற்­கான தேர்தல் பெறு­பே­றுகள் நாட்டில் இது­வரை இடம்­பெற்ற அர­சியல் பய­ணத்தின் தீர்­மா­ன­க­ர­மான மாற்­றத்தைக் குறித்­து­ரைக்­கின்­றது என நாம் நம்­பு­கிறோம். தேர்தல் பெறு­பே­றுகள் இலங்­கையில் வேறு எப்­போதைக் காட்­டிலும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே பாரதூ­ர­மான விரி­சலை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தாகத் தோன்­றி­னாலும், அது முழு­மை­யான உண்­மை­யல்ல. சிங்­களத் தேசி­ய­வாத வெறியை முன்­னி­லைப்­ப­டுத்­திய தேர்தல் இயக்­கத்தின் விளை­வாக இன்­றைய சமூக சூழ­மைவு சிருஷ்­டிக்­கப்­பட்­டாலும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது சொந்த இனத்தைச் சார்ந்த வேட்­பா­ளர்கள் இருக்­கத்­தக்­க­தாக, சிங்­கள வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­ச­விற்கு வா­க்­க­ளித்­ததன் மூலம், தேசிய அர­சி­யலில் தமக்கு நியா­யத்தைப் பெறும் நோக்­கு­ட­னேயே செயற்­பட்­டுள்­ளனர் என்­பது தெளிவு.

வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் பெரும்­பான்­மை­யான வாக்­குகள் ஒரே முகா­மாக இணைந்து தேர்­தலில்; பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தோடு, தென்­னி­லங்கை வாழ் மக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியை முன்­னி­லைப்­ப­டுத்­திய, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை தோல்­வி­யுறச் செய்­துள்­ளனர்.

மைத்­திரி -– ரணில் போலி நல்­லாட்சி அர­சாங்கம் 2015இல் மக்கள் எதிர்­பார்த்த சமூக சுதந்­தி­ரத்தை ஏலத்தில் விற்­பனை செய்­து­விட்டு, கடந்த நாலரை ஆண்­டு­க­ளாக மக்­களை பார­தூ­ர­மான பொரு­ளா­தாரக் கஷ்­டங்­களில் சிக்­க­வைத்­தமை இர­க­சி­ய­மா­ன­தொன்­றல்ல. தடுத்­தி­ருக்கக் கூடிய, 2019 ஏப்ரல் பயங்­க­ர­வாதத் தாக்­குதல் கார­ண­மாக, தென்­னி­லங்கை மக்கள் அத்­து­மீறி தமது பாது­காப்புக் குறித்து அச்­ச­ம­டைந்­தி­ருந்­தனர். இந்­நி­லை­மையை சிறப்­பாக முகாமை செய்து, ஏப்ரல் தாக்­கு­தலை தமது தேர்தல் இயக்­கத்தின் முக்­கிய போராட்டச் சுலோ­க­மாக்­கு­வதில் கோத்­தா­ப­யவின் அணி வெற்றி கண்­டது.

தென்­னி­லங்­கையின் பௌத்த பிக்­கு­களை முன்­னி­லைப்­ப­டுத்­திய விகா­ரை­களை முன்­ன­ணி­யாகக் கொண்ட சிங்­கள மக்கள் மத்­தியில் ‘எல்­லா­வற்­றிற்கும் மேலாக வாழ்­வ­தற்கு எமக்கு ஒரு நாடு இருக்க வேண்டும்’ என்ற தேர்தல் சுலோகம் பிர­பல்­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

‘சிங்­கள தேசிய இனத்­திற்கு ஒரு நாடு’ என்ற கோஷம் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, தென்­னி­லங்­கையில் சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டது. கத்­தோ­லிக்க மக்­களில் பெரும்­பான்­மை­யினர் இந்த அலையை மையப்­ப­டுத்தி ஒன்று குவிந்­தனர்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவில் கோத்­தா­பய முகாம் மாபெரும் வெற்­றியை ஈட்­டி­யுள்­ளது. இன்று தமிழ் -– சிங்­கள மக்­களை ஒன்­றி­ணைப்­பது பெரும் சவா­லா­கவே அமைந்­துள்­ளது. சர்­வ­தேச அழுத்­தத்தின் முன்னே கோத்­தா­பய வெறு­மனே பித்­த­லாட்­டங்­களை அலட்­டி­ய­வாறு, வெறும் சிங்­கள பௌத்த அரசை நிறு­வு­வது இல­கு­வான செயல் அல்ல என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

நாட்டின் பொரு­ளா­தார வீழ்ச்சி, வெளி­நாட்டு இரா­ணுவ முகாம்கள் இலங்­கையில் ஊடு­ருவத் திட்­ட­மிட்­டுள்ள உடன்­ப­டிக்­கைகள் என்­பன முன்­னெ­டுக்­கப்­படும் அதேவேளை, மக்கள் மறந்­துள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்டம், தொழிலாளர்களுக்கான புதிய சட்டம், உட்பட ஒட்டுமொத்தமாக மக்களை ஒடுக்கும் நட­வ­டிக்­கைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் ஆபத்து எம்முன் உள்­ளது.

எதிர்­கா­லத்தில் நாம் எதிர்­நோக்கும் பொதுத் தேர்தல் நட­வ­டிக்­கைகள், இந்த அனைத்துக் கொடூ­ர­மான நட­வ­டிக்­கை­க­ளையும் மறக்கச் செய்­வ­தற்கு இன்­றைய அர­சியல் நிலைமை உதவும். வடக்­கிலும் தெற்­கி­லும் வாழும் மக்­க­ளுக்கு இந்த அர­சியல் ஆபத்­துக்­க­ளை­யிட்டு’ இடதுசாரிக் குரல்’ எச்சரிக்கை செய்கிறது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.