மதஸ்தலங்களை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர்

0 728

தேர்­தல்­களின் போது மதத் தலங்­களை தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­கான நிலை­யங்­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது தடுக்­கப்­ப­ட­வேண்டும் என தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் கோரிக்கை விடுக்க பெப்ரல் அமைப்பு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக அவ் அமைப்பின்நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­ஆ­ராச்சி தெரி­வித்தார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது சில ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் தங்­க­ளது பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மதத்தலங்களை பயன்­ப­டுத்­தி­யது தொடர்பில் தேர்தல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­லேயே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

ரோஹண ஹெட்­டி­ஆ­ராச்சி இது தொடர்பில் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;
மதஸ்­த­லங்கள் புனி­த­மா­னவை. அவை சுயா­தீ­ன­மாக இருக்­க­வேண்டும். கட்சி மற்றும் நிறங்கள் அடிப்­ப­டையில் வேறு­ப­டக்­கூ­டாது. மதஸ்­த­லங்கள் இவ்­வாறு செயற்­படுவதால் சுதந்­தி­ர­மா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லொன்றை நடத்த முடி­யாத நிலை ஏற்­ப­டு­கி­றது. அத்­தோடு சில பகு­தி­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு பல கிலோ மீற்றர் தூரம் பய­ணிக்க வேண்­டி­யி­ருந்­தமை இந்த ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கும் தேர்தல் ஆணைக்குழு தீர்வு காணவேண்டும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.