யானை­களின் மர்ம மர­ணங்கள் தும்­பிக்­குளம் காட்டில் சோதனை

0 585

ஹப­ரனை – ஹிரி­வட்­டுன, தும்­பிக்­குளம் காட்டில் 7 பெண் யானைகள் மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்­துள்­ளமை தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்தின் அறி­வு­றுத்­தலின் கீழ் சீகி­ரிய வன­ஜீ­வ­ரா­சிகள் அலு­வ­லகம் ஊடாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், யானை­களின் மர­ணத்தின் பின்­ன­ணியில் பாரிய குற்­ற­மொன்று இருக்­க­லா­மென சந்­தே­கிக்­கப்­படும் நிலையில் அது­தொ­டர்பில் விசா­ர­ணைகள் சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ளன. இது­கு­றித்து பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்­ர­ம­ரத்­ன­வுக்கு சூழல் மற்றும் இயற்கை தொடர்­பி­லான கற்கை நிலை­யத்தின் தலைவர் ரவீந்ர காரி­ய­வசம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

எவ்­வா­றா­யினும் நேற்று மாலை­வரை விசா­ர­ணைகள் சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை என்­பதை சி.ஐ.டி.க்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­க­ரவும் உறுதி செய்­தனர். எனினும் இந்த சம்­பவம் குறித்து ஹப­ரணை பொலிஸார் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸார் உறுதி செய்­தனர்.

இத­னி­டையே, இவ்­வாறு மர்­ம­மாக உயி­ரி­ழந்த மேலும் யானை­களின் சட­லங்கள் தும்­பிக்­குளம் காட்டில் உள்­ள­னவா என்­பதை உறுதி செய்­யவும், உயி­ரி­ழப்­புக்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய ஏதேனும் சான்­றுகள் கிடைக்­கின்­றதா என ஆரா­யவும் 10 குழுக்கள் தும்­பிக்­குளம் காடு முழு­வதும் விஷேட தேடு­தல்­களை ஆரம்­பித்­துள்­ளன. வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள், இரா­ணு­வத்­தினர் பொலிஸார் இணைந்து இந்த 10 குழுக்­க­ளாக சேர்ந்து இந்த சோத­னை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இத­னை­விட மேலும் பல குழுக்கள் கொர­ச­கல்ல பகு­தியில் இருந்து ஹிரி­வ­டுன்ன குளக்­காடு வரையில் யானைகள் பய­ணிக்கும் பாதைகள் ஊடா­கவும் விசேட சோத­னைகள் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன.

யானைகள் உயி­ரி­ழந்­துள்­ளமை தொடர்பில் பலத்த சந்­தே­கங்கள் எழுந்­துள்ள நிலையில் இந்த யானைகள் கலா­வெவ பகு­தி­யி­லி­ருந்தே இங்கு வருகை தந்­துள்­ளமை இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் தெரி­யவ்ந்­துள்­ளன.

இந்த யானைகள் ஹப­ரணை காட்டில் வசிக்கும் யானைகள் இல்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் பல கோணங்­களில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, கடந்த 27 ஆம் திகதி வெள்­ளி­யன்று நான்கு பெண் யானை­களின் உட­லங்கள் முதலில் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. அதன் பின்னர் 28 ஆம் திகதி சனி­யன்று அதி­காலை ஒரு யானையின் உடலம் மீட்­கப்­பட்­டது. இதன்­போது அந்த யானையின் அருகே அதன் 4 வய­தான குட்டி உயி­ருடன் நின்­றி­ருந்­தமை விசேட அம்­ச­மாகும். அதன் பின்னர் மேலும் இரு யானை­களின் சட­லங்கள் அப்­ப­கு­தி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்­டன.

இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்ள 7 யானை­களும் பெண் யானைகள் என்­ப­துடன், அவற்றில் 3 யானைகள் கர்ப்­ப­மாக இருந்­துள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் இந்த யானை­க­ளுக்கு விஷம் கலந்த உண­வுகள், நீர் கொடுக்­கப்­பட்­டதன் விளை­வாக அவை மர­ண­ம­டைந்­ததா என விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும், உயி­ரி­ழந்த 7 யானை­களும் பெண் யானைகள் என்­பதும், ஒரு யானையின் அருகே அதன் குட்டி உயி­ருடன் இருந்­தமை தொடர்­பிலும் இந்த விசா­ர­ணை­களில் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. விஷம் ஊட்­டப்­பட்­டதா என்­ப­தை­விட, இந்த யானைகள் அதி­கார வர்க்­கத்­தி­லுள்ள எவ­ரி­னதும் தேவைக்­காக பலி பூஜை­க­ளுக்குப் பலி­யாக்­கப்ப்ட்­டதா என்­பது குறித்தும் தற்­போது சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பிலும் விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும், யானை­களின் பிரேத பரி­சோ­த­னைகள் நிறை­டையும் வரை மர­ணத்­துக்­கான உறு­தி­யான கார­ணத்தை வெளி­யி­டு­வது சாத்­தி­ய­மில்­லை­யென வன­ஜீ­வ­ரா­சிகள் பணிப்­பாளர் நாயகம் சந்­தன சூரி­ய­பண்­டார தெரி­வித்தார். இந்­நி­லையில் அதற்­கான கார­ணத்தை கண்­ட­றிய 7 யானை­க­ளி­னதும் உடற் கூறுகள் அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மற்றும் பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் ஆகி­ய­வற்­றுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பின்னணியிலேயே சூழல் மற்றும் இயற்கை தொடர்பிலான கற்கை நிலையத்தின் தலைவர் ரவீந்ர காரியவசம், இந்த யானைகளின் மர்ம மரணத்தின் பின்னணியில் மனித செயற்பாடுகள் உள்ளதாக சந்தேகம் எழும் நிலையில், அவை வனஜீவராசிகள் சட்டம், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டங்களின் கீழ் குற்றங்களாக இருக்கலாம் என்பதால் சி.ஐ.டி. ஊடாக விஷேட விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.