முகத்திரை தடை நீக்கம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

0 1,407

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்பு கருதி அவ­ச­ர­கால சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கும் தடை விதிக்­கப்­பட்­டது. தடை­யி­னை­ய­டுத்து நிகாப், புர்­கா­வுக்குப் பழகிப் போயி­ருந்த முஸ்லிம் பெண்கள் சட்­டத்­துக்கு கட்­டுப்­பட்டு செயற்­பட்­டார்கள். வெளியில் செல்­லும்­போது நிகாப், புர்­காவைத் தவிர்த்­தி­ருந்­தார்கள்.

இந்­நி­லையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்­டது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் அச்­சட்­டத்தின் கீழ் அமு­லுக்கு வந்த நிகாப், புர்கா மற்றும் முகத்­தி­ரைக்­கான தடை நீங்­கி­யுள்­ளதா என்­பது தொடர்பில் பாது­காப்பு பிரி­வி­ன­ராலோ சம்­பந்­தப்­பட்ட அமைச்­சி­னாலோ தெளி­வுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்டு விட்­டாலும் ஏப்ரல் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நிகாப், புர்கா மற்றும் முகத்­திரை தொடர்­பான அச்ச நிலை­யி­லி­ருந்து மக்கள் மீள­வில்லை. அதனால் முஸ்லிம் பெண்கள் பொது இடங்­களில் முகத்­திரை அணி­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய அசா­தா­ரண நிலை­மை­களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கோரி­யி­ருந்­தது.

இதே­வேளை, “முகத்­தி­ரைக்­கான தடை தற்­போது அமுலில் இல்லை. நிகாப், புர்கா மற்றும் முகத்­திரை தொடர்­பான சட்டம் அவ­ச­ர­காலச் சட்ட விதி­களின் கீழேயே அமுலில் இருந்­தது. தற்­போது அவ­ச­ர­காலச் சட்டம் அமுலில் இல்­லா­ததால் முகத்­தி­ரை­கான தடையும் நீங்­கி­யுள்­ளது” என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண முஸ்­லிம சமய விவ­கார அமைச்­ச­ருக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளார்.

அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் அமு­லுக்கு வந்த முஸ்லிம் பெண்­களின் முகத்­தி­ரைக்­கான தடை நீங்­கி­யுள்­ளதா என தெளி­வு­ப­டுத்­தும்­படி அமைச்சர் ஹலீம் பொலிஸ்மா அதி­பரை வேண்­டி­யி­ருந்தார். அதற்குப் பதி­ல­ளித்து அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­திலே முகத்­தி­ரைக்­கான தடை நீங்­கி­யுள்­ளதை பிரதி பொலிஸ்மா அதிபர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்டு முகத்­தி­ரைக்­கான தடை நீங்­கி­யி­ருந்­தாலும் முஸ்லிம் பெண்­களின் முகத்­தி­ரைக்­கான நிலைப்­பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தொடர்ந்தும் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள வழி­காட்டல் நிலைப்­பாட்­டிலே இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்­ளது.

முகத்­தி­ரைக்­கான தடை நீக்­கப்­பட்டு விட்­டாலும் இன்­றைய சூழலில் முகத்­திரை அணிந்து செல்லும் பெண்­களை ஏனைய சமூ­கத்­தினர் அடிப்­ப­டை­வா­தி­க­ளா­கவே நோக்­கு­கின்­றனர். அவர்­க­ளுக்குள் உரு­வான அச்ச நிலை இன்னும் மாற்றம் பெற­வில்லை. மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் பெரும்­பான்மை சமூகம் விரும்­ப­வில்லை. எனவே முஸ்லிம் பெண்கள் அவ­தா­ன­மாக நடந்து கொள்ள வேண்டும். இன­வா­தி­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­கு­வ­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது.
முகத்­தி­ரைக்­கான தடை நீக்­கப்­பட்டு விட்­டாலும் பொதுப் போக்­கு­வ­ரத்துச் சேவை பஸ் வண்­டி­களில் முகத்­திரை அணிந்து பய­ணிப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்­கான அறி­வித்தல் பஸ் வண்­டி­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சில வைத்­தி­ய­சாலை வளா­கங்கள், அரச, தனியார் நிறு­வ­னங்­க­ளிலும் முகத்­திரை தடை அமுல்­ப­டுத்­தப்­பட்ட போது ஒட்­டப்­பட்ட அறி­வித்­தல்கள் இன்னும் அகற்­றப்­ப­ட­வில்லை. தடை நீங்­கி­யுள்ள நிலையில் அவற்றை அகற்ற வேண்­டி­யது சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் பொறுப்­பாகும்.

சட்டம் வெறு­மனே எழுத்தில் மாத்­திரம் இருக்கக் கூடாது. சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதற்கு சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் பொலிஸ் உட்­பட ஏனைய நிறு­வ­னங்கள் முன்­வர வேண்டும். முகத்­தி­ரைக்­கான தடை நீங்­கி­யி­ருந்­தாலும் முகத்­திரை அணிந்து செல்லும் பெண்கள் தொடர்ந்தும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும். இந்­நி­லைமை இல்­லாமற் செய்­யப்­பட வேண்டும்.

முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்­கான தடை நீங்­கப்­பட்­ட­மைக்கு பல தரப்­பினர் எதிர்ப்­பு­க­ளையும் வெளி­யிட்­டுள்­ளனர். “நிகாப், புர்கா மற்றும் முகத்­தி­ரைக்­கான தடை நீங்­கப்­பட்­டுள்­ளமை நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு சவா­லாக மாறி­யுள்­ளது. இவற்றைத் தடை செய்­ய­வேண்டும்” என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

அத்­தோடு “முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைக் கவர்­வ­தற்­கா­கவே இத்­தடை நீக்­கப்­பட்­டுள்­ளது. நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்பு குறித்து சிந்திக்காமல் தடை நீக்கப்பட்டுள்ளது. இத்தடை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களதும் எமதும் நிலைப்பாடாகும்” என பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இவ்வாறான எதிர்ப்புகள் நாட்டு மக்களை முஸ்லிம் பெண்களின் முகத்திரைக்கு எதிராக அணித்திரளச் செய்வதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முகத்திரை தடை நீக்கம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.