நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பது தொடர்பில் ஹக்கீம் – சுமந்­திரன் டுவிட்­டரில் கருத்து பரி­மாற்றம்

0 692

நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்கும் நகர்­வுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­தி­ர­னுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்­குமி­டையில் டுவிட்டர் தளத்தில் கருத்துப் பரி­மாற்றம் ஒன்று இடம்­பெற்­றது.

அர­சியல் ஆய்­வா­ள­ரான ரசிக ஜய­கொடி டுவிட்­டரில் எழுப்­பிய கேள்வி ஒன்­றுக்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே இரு­வரும் தமது கருத்­துக்­களை பகிர்ந்­துள்­ளனர்.

”நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­கான முயற்­சிகள் தொடர்பில் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் திகாம்­பரம் ஆகி­யோ­ருக்கு எம்.ஏ. சுமந்­திரன் விளக்­க­ம­ளித்­தி­ருந்­த­தா­கவும் அதற்கு அவர்கள் ஒரு­மித்த ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­த­தா­கவும் நம்­பக­மான தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. எனினும், அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அவர்கள் இதற்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுத்­துள்­ள­துடன் (யூ டேர்ன்) இது ஒரு சதி முயற்சி என்றும் தெரி­வித்­துள்­ளனர். இது குறித்து விளக்­க­மு­டி­யுமா?”என ரசிக ஜய­கொடி கேட்­டி­ருந்தார்.
இதற்கு பதி­ல­ளித்­துள்ள சுமந்­திரன், ” ஒரு­மித்த ஆத­ர­வல்ல. ரவூப் ஹக்கீம் இந்த முன்­னெ­டுப்பை எதிர்த்­தி­ருந்தார். ஏனையோர் எதிர்க்­க­வில்லை. ஆனால் இதனை சதித்­திட்டம் என அழைப்­பது பிழை­யா­னது. நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பதை எதிர்ப்­ப­வர்கள் அதற்கு எதி­ராகப் பேசலாம். அத்­துடன் அமைச்­ச­ரவை ஒரு முடிவை எடுக்க முடியும். மேலும் இது ஒரு புதிய பிரச்­சி­னை­யல்ல.

25 வரு­டங்­க­ளுக்கு மேலாக வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்டு வந்த விடயம்” என சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருந்தார். இதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் தனது கருத்தை பதி­விட்­டுள்ள ரவூப் ஹக்கீம், ”பங்­காளிக் கட்­சி­க­ளுக்கு எத­னையும் தெரி­விக்­கா­தி­ருப்­பதைத் தவிர சுமந்­தி­ர­னுடன் எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை. எல்லா மாகாண சபை­க­ளையும் புறக்­க­ணிக்கும் வகையில் மாகாண சபை தேர்தல் சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்­களை கொண்­டு­வர ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதே­போன்று எவ்­வாறு முயற்­சித்தார் என்­பதை ஞாப­க­மூட்­டு­கிறேன். 13 ஆவது திருத்தச் சட்­டத்தை ஒழிக்க மஹிந்த ராஜபக் ஷ முயற்­சித்த போதும் நாம் போரா­டினோம்” என குறிப்­பிட்­டுள்ளார்.

ரவூப் ஹக்­கீமின் மேற்­படி கருத்­துக்கு பதி­ல­ளித்­துள்ள சுமந்­திரன், ”மாகாண சபைகள் திருத்தச் சட்ட விவ­கா­ரத்தில், ஜனா­தி­பதி நியூ­யோர்க்­கி­லி­ருந்து தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கு­மாறு கேட்டுக் கொண்­டதன் கார­ண­மா­கவே குழு­மட்ட திருத்­தங்­க­ளுக்கு மாத்­திரம் ஆத­ர­வ­ளித்­த­தாக நீங்கள் எம்­மிடம் கூறி­யி­ருந்­தீர்கள். பிர­த­மரின் அறையில் மாத்­தி­ர­மன்றி உங்கள் அறை­யிலும் இது தொடர்பில் இடம்­பெற்ற சகல சம­சரப் பேச்­சுக்கள் குறித்தும் நான் இர­க­சி­ய­மாக அறிவேன்” என தெரி­வித்­துள்ளார்.

சுமந்­திரனின் மேற்­படி கருத்­துக்கும் ரவூப் ஹக்கீம் பதி­ல­ளித்­துள்ளார். அதில், ” ஐக்­கிய தேசியக் கட்சி தற்­ச­மயம் சரி­யான தீர்­மா­னத்தை எடுப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது எமது பொறுப்­பாகும். அவர்கள் எங்­களை மட்­டு­மல்ல, தேசத்­தை­யும்தான் வீழ்த்துகிறார்கள். நல்ல ஆலோசனைகள் வெற்றியளிக்கும் என்று நம்புங்கள். பங்களாளிக் கட்சிகள் மீண்டும் ஒன்றுபட்டு பணியாற்றுவோம். எனது ‘மெகாபோன் இராஜதந்திரம்’ (பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவதன் ஊடாக சமரசம் பேசுதல்) வெற்றியளிக்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.