நீர்­வ­ழங்கல் அமைச்­ச­ரின் தொழில் வழங்கும் செயல் தேர்தல் சட்­டத்­திற்கு முரண்

சபையில் தினேஷ் தெரிவிப்பு ; ஹக்கீம் மறுப்பு

0 738

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு திகதி குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிலையில் நீர்­வ­ழங்கல் அமைச்­ச­ரினால் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இது தேர்தல் சட்­டத்­துக்கு முர­ணாகும். தேர்­த­லொன்று இடம்­பெ­றும்­போது இவ்­வா­றான சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்க முடி­யா­தென எதிர்க்­கட்சி உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். இதன்­போது அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கும் தினேஷ் குண­வர்த்­த­ன­வுக்­கு­மி­டையில் சபையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது. அத்­துடன் ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களும் கடு­மை­யான வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். 

பாரா­ளு­மன்றம் நேற்று சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. பிர­தான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற பின்னர் எதிர்க்­கட்சி உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன ஒழுங்குப் பிரச்­சி­னை­யொன்றை முன்­வைத்து தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு திகதி குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிலையில் நீர்­வ­ழங்கல் அமைச்­ச­ரினால் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இது தேர்தல் சட்­டத்­துக்கு முர­ணாகும். தேர்­த­லொன்று இடம்­பெ­றும்­போது இவ்­வா­றான சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்க முடி­யாது.

(அமைச்சர் ஹக்­கீமை நோக்கி) உங்கள் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து தொழிற்­சங்­கங்கள் சில, உங்கள் அமைச்சின் செய­லா­ள­ருக்கும் நீர்­வ­ழங்கல் அமைச்சின் பொது முகா­மை­யா­ள­ருக்கும் கடிதம் ஒன்றை வழங்கி இருக்­கின்­றது. ஏன் இவ்­வாறு சட்­ட­வி­ரோ­த­மாக செயற்­ப­டு­கின்­றீர்கள் என்றார். இதன்­போது எழுந்த விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் ஹக்கீம் தெரி­விக்­கையில், ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு நிய­மனம் வழங்­கப்­போ­வ­தாக தெரி­விக்கும் எண்­ணிக்கை முற்­றாக பொய்­யான கருத்­தாகும். அத்­துடன் நிய­ம­னக்­க­டிதம் வழங்க நடவ­டிக்கை எடுத்­தி­ருப்­பது இதற்கு முன்னர் எடுக்­கப்­பட்ட தீர்­மா­ன­மாகும். அத்­துடன் இது சட்­ட­வி­ரோதம் என்றால் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு நட­வ­டிக்கை எடுக்­கலாம்.

அத்­துடன் தேர்தல் சட்­டத்தின் பிர­காரம் வேட்­பு­மனு தாக்கல் செய்­யப்­பட்ட திக­தி­யி­லி­ருந்தே இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் சட்­ட­வி­ரோ­த­மாகும். மாறாக தேர்­த­லுக்­கான திகதி அறி­விக்­கப்­பட்­ட­தற்கு பிறகு அல்ல. தற்­போது நிய­மனம் வழங்­கப்­போ­வது ஏற்­க­னவே நேர்­மு­கப்­ப­ரீட்சை நடத்­தி­ய­வர்­க­ளுக்­காகும்.
அத்­துடன் நாங்கள் வழங்கும் நிய­மனம் சட்­ட­வி­ரோதம் எனில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் முறை­யி­டுங்கள். தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்தால் இதனை நான் கைவி­டுவேன். நீங்கள் நினைத்த பிர­காரம் சட்­டத்­துக்கு அர்த்தம் கற்­பிக்க முடி­யாது என்றார்.

இதன்­போது எழுந்த நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­விக்­கையில்,

தினேஷ் குண­வர்­தன செத்துப் பிழைத்­த­துபோல் இன்று கதைக்­கின்றார். 2015 ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு ஒருநாள் இருக்கும் நிலையில் அதா­வது, ஜன­வரி 7ஆம் திக­தியும் தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கினர். தேர்தல் காலம் முழு­வதும் தொழில் வாய்ப்­புக்­களை வழங்கி தேர்தல் சட்­டங்­களை முற்­றாக மீறி செயற்­பட்­டனர். தேர்தல் இடம்­பெ­றும்­போது அம்­பாந்­தோட்­டை­யி­லி­ருந்து எத்­த­னை ­பே­ருக்கு தொழில் வாய்ப்­புக்­களை வழங்­கி­னார்கள் என்­பதை தேவை­யெனில் சபைக்கு சமர்ப்­பிக்கத் தயார். அதனால் உங்கள் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை நீங்கள் மறந்­தாலும் மக்கள் மறக்­க­வில்லை என்றார்.
இதன்­போது எழுந்த சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்ல, வேட்புமனு தாக்கல் செய்யும்வரை நியமனங்கள் வழங்கலாம். அதன் பின்னர் மேற்கொள்வதே தேர்தல் சட்டத்துக்கு முரணாகும் என்றார்.இறுதியாக சபாநாயகர் பதிலளிக்கையில், இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி தீர்வொன்றை எடுப்பேன் என்றார்.

(ஆர்,யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

vidivelli

Leave A Reply

Your email address will not be published.