நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இது அவர்களது உச்சளவிலான சுயநலத்தையும், சந்தர்ப்பவாத தன்மையையுமே வெளிப்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சுமந்திரன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இது அவர்களது உச்சளவிலான சுயநலத்தையும், சந்தர்ப்பவாத தன்மையையுமே வெளிப்படுத்துகின்றது.
சுமார் கால்நூற்றாண்டு காலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக மக்களால் ஆணை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வாக்குறுதிகள் புறந்தள்ளப்படக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அதன் தனிப்பட்ட அரசியல்நலன் நோக்கங்களுக்காக அன்றி, ஒரு கொள்கை என்ற அடிப்படையில் எத்தகைய கால அடிப்படையிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
vidivelli