தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விஷேட தரத்தைச் சேர்ந்த அதிகாரியான எம்.ஐ.அமீர் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக சேவையில் சுமார் 32 வருடகால அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட அதிகாரியான இவர், ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட காணி அதிகாரியாகப் பணியாற்றினார்.
பின்னர் சம்மாந்துறை, கல்முனை பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதனையடுத்து தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே எம்.ஐ.எம். அமீர், மேற்படி இராஜாங்க அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்றிருக்கின்றார்.
சம்மாந்துறையை சேர்ந்த இவர், ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.நிப்றாஸ்
vidivelli