உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கப்பட வேண்டும்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்

0 701

கைது செய்­யப்­பட்­டுள்ள இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி உண்­மையை வெளி­யி­டு­மாறு அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையில் நேற்று பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இந்தப் பிரே­ர­ணையை முன்­வைத்து சபையின் உப தவி­சா­ளாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­யு­மான எஸ்.எம்.எம்.ஹனீபா உரை­யாற்­று­கையில், அண்­மையில் கைது செய்­யப்­பட்­டுள்ள இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக துரித விசா­ர­ணை­களை மேற்­கொண்டு கைது செய்­த­மைக்­கான கார­ணத்தை வெளி­யிட்டு முஸ்லிம் சமூ­கத்தின் அச்­சத்தை தெளி­வு­ப­டுத்த வேண்டும். இக்­கைது தொடர்­பாக முஸ்லிம் சமூகம் கவ­லையும், அதிர்ச்­சியும் அடைந்­துள்­ளது. அவர் எமது நாட்டின் இறை­மைக்கும், அர­சி­ய­ல­மைப்­புக்கும் எப்­போதும் மதிப்­ப­ளித்து செயற்­பட்­டவர். அவ­ரது பேச்­சுக்கள், செயற்­பா­டுகள், எழுத்­துக்கள் என்­பன எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாட்டின் இறை­மைக்கு எதி­ரா­கவோ, அர­சியல் யாப்­புக்கு முர­ணா­கவோ நாட்­டி­னது அமை­திக்கும் பாது­காப்­பிற்கும் குந்­தகம் விளை­விப்­ப­தா­கவோ அமைந்­த­தில்லை.

நமது நாட்டில் வாழ்­கின்ற இனங்கள், மதங்கள் மற்றும் சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நல்­லு­ற­வி­னையும், இணக்­கப்­பாட்­டி­னையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக கடு­மை­யாக உழைத்­தவர். நமது நாட்­டிலே வாழ்­கின்ற மக்கள் அனை­வரும் இலங்­கையர் என்­பதை மக்கள் மனதில் பதிப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­பான செயற்­பா­டு­களை மேற்­கொண்ட இலங்கை ஜமாத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களும், முறைப்­பா­டு­களும் அவர் மீது கொண்ட காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மா­கவே முன்­வைக்­கப்­பட்­ட­தாக முஸ்லிம் சமூகம் கரு­து­கி­றது.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விட­யத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் நீதி­யா­கவும் நியா­ய­மான முறை­யிலும் செயற்­பட்டு குற்­ற­மற்­றவர் என்று நிரூ­பிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­ப­டுவார் என்று முழு முஸ்லிம் சமூ­கமும் நம்­பு­கி­றது. அத்­துடன் அவர்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­த­வர்கள் மீது உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்றார்.

இப்­பி­ரே­ர­ணைக்கு ஆத­ரவு தெரி­வித்து முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்பினர்களான தமீம் ஆப்தீன், ஏ.எஸ்.எம்.உவைஸ் ஆகியோரும் உரையாற்றினனர். இதனையடுத்து சபையினால் ஏகமனதாக பிரேரணை அங்கீகரிக்கப்பட்டதுடன் இப்பிரேரணையின் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ரீ.கே.றஹ்­மத்­துல்லா

vidivelli

Leave A Reply

Your email address will not be published.