தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற அனீக் அஹமட்

0 1,598

தேசிய பரா ஒலிம்பிக் சங்­கத்­தினால் ஒழுங்கு செய்­யப்­பட்ட இவ்­வ­ரு­டத்­துக்­கான தேசிய பரா மெய்­வல்­லுநர் போட்­டிகள் கடந்த செப்­டெம்பர் மாதம் 5 ஆம், 6 ஆம் திக­தி­களில் கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றன.

இலங்­கையிலுள்ள ஊன­முற்ற மற்றும் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் வீரர்­க­ளுக்­காக நடத்­தப்­ப­டு­கின்ற ஒரே­யொரு போட்டித் தொட­ராக விளங்­கு­கின்ற தேசிய பரா மெய்­வல்­லுநர் தொடரில் இம்­முறை 45 கழ­கங்­களைச் சேர்ந்த சுமார் 800 மாற்றுத் திற­னாளி வீர, வீராங்க­னைகள் பங்­கேற்­றனர்.

பார்வை குறை­பா­டு­டை­ய­வர்கள், உடல் ரீதி­யாக குறை­பா­டு­டை­ய­வர்கள் மற்றும் சிந்­தனை குறை­பா­டு­டை­ய­வர்கள் என மூன்று வகை­யான வீரர்­க­ளுக்­காக 190 இற்கும் மேற்­பட்ட சுவட்டு, மைதான நிகழ்ச்­சிகள் இதில் நடை­பெற்­றன. அத்­துடன், வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட பகு­தி­களைச் சேர்ந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மாற்றுத் திற­னாளி வீரர்­களும் இம்­முறை போட்­டி­களில் பங்­கு­பற்­றினர்.

இந்நிலையில் இப்போட்­டியில் பங்­கேற்று 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல் ஆகிய போட்டி நிகழ்ச்­சி­களில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்­துள்ளார் காத்­தான்­கு­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட எம்.எம். அஹமட் அனீக்.

சிறு வய­தி­லேயே பெற்­றோ­ரையும் இழந்து, பாட­சாலைக் காலத்தில் புற்று நோய்க்கு முகங்­கொ­டுத்து கால் ஒன்றையும் இழந்து வாழ்வில் சவால்­களை எதிர்­கொண்ட இவர், இன்று தேசி­ய­மட்ட போட்­டி­களில் தங்கப் பதக்­கங்­களை வென்று சாதனை படைத்­துள்­ளதன் மூலம் அனை­வ­ரையும் பிர­மிக்கச் செய்­துள்ளார்.

அவ­ரது வாழ்க்கைப் பயணம் தொடர்பில் விடி­வெள்­ளிக்கு வழங்­கிய செவ்­வியை இங்கு தரு­கிறோம்.

நேர்­காணல்: பழுலுல்லாஹ் பர்ஹான் (காத்­தான்­குடி மேல­திக நிருபர்)

Qஉங்களைப் பற்றி சுருக்கமான அறிமுகத்தை தாருங்கள்?

நான் 2001 இல் காத்­தான்­கு­டியில் பிறந்தேன். 4 ஆம் ஆண்டில் கல்­வியை தொடர்ந்து கொண்­டி­ருக்­கையில் எனது தாய் கால­மானார். தாய் மர­ணித்து மூன்று மாதங்கள் நானும், தம்­பியும் தந்­தையின் பரா­ம­ரிப்பில் வளர்ந் தோம். அதன் பின்னர் தந்தை மறு திரு­மணம் செய்தார். பின்னர் சில ஆண்­டு­களில் தந்­தையும் மர­ணித்து விட்டார். தற்­போது தாயின் சகோ­தர சகோ­த­ரி­கள்தான் எங்­களை பரா­ம­ரித்து வரு­கி­றார்கள்.

தரம் 7 வரை காத்­தான்­குடி மத்திய கல்­லூரி தேசிய பாட­சா­லையில் கல்வி கற்ற நான் பின்னர் திஹா­ரிய சர்­வ­தேச பாட­சா­லையில் ஆங்­கில மொழியில் கல்­வியை தொடர்ந்தேன். தற்­போது வர­கா­பொல தாருல் ஹஸனாத் அக­ட­மியில் உயர் கல்­வியைத் தொடர்ந்து வரு­வ­துடன் விளை­யாட்டுத் துறை­யிலும் ஈடு­பா­டு­காட்டி வரு­கிறேன்.

Q புற்றுநோய் எவ்வாறு ஏற்பட்டது?அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தீர்கள்?

2017 ஆம் ஆண்டு திஹா­ரிய சர்­வ­தேச பாட­சாலை விளை­யாட்டு மைதா­னத்தில் உதை­பந்து விளை­யாடிக் கொண்­டி­ருந்த பொழுது எனது நண்பர் ஒருவர் எதேச்­சை­யாக அடித்த பந்து எனது காலில் பட்டு வீங்கி நடக்க முடி­யாமல் போனது. ஒரு மாத காலம் ஆயுர்­வேத வைத்­தியம் செய்தும் பல­ன­ளிக்­கா­ததால் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று பரி­சோ­தித்­த­போ­துதான் புற்­று­நோய்க்­கான வாய்ப்­புகள் உள்­ள­தாக வைத்­தியர் சொன்னார்.

தந்­தையின் உத­வி­யோடு இது தொடர்­பான வைத்­திய பரி­சோ­தனை மேற்­கொள்­வ­தற்கு தயா­ராகிக் கொண்­டி­ருந்த நிலையில் எனது தந்தை திடீரென மர­ணித்து விட்டார்.

இதன் பின்னர் 2017 இறு­தியில் மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் எலும்பு முறிவு வைத்­திய நிபு­ணரின் ஆலோ­ச­னைக்­கி­ணங்க இரத்தப் பரி­சோ­தனை மற்றும் உயிர்த்­திசுப் பரி­சோ­தனை (BIOPSY TEST) செய்­த­போ­துதான் TIBIA OSTEOSCARCOMA என்ற புற்று நோய் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இது 13 தொடக்கம் 19 வய­திற்­குற்­பட்ட இளம் வய­தி­னரில் ஆயி­ரத்தில் ஒரு­வ­ருக்கு வரு­கின்ற நோயாகும்.

புற்று நோய் என்று கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மூன்று வாரங்­க­ளி­லேயே மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை புற்­றுநோய் வைத்­திய நிபுணர் டாக்டர் ஏ.இக்­பாலின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய சிகிச்­சைகள் ஆரம்­ப­மா­கின. இந்த சிகிச்­சை­களின் பெறு­பேறு ஒன்றில் முற்­றாக குண­ம­டை­யலாம் அல்­லது உயி­ரி­ழக்­கலாம் என்­றி­ருந்த நிலையில் குடும்ப உறுப்­பி­னர்கள் சிகிச்­சை­களை தொடர அனு­மதி வழங்­கினர்.

எனினும், சிகிச்­சை­க­ளுக்கு முன்னர் புற்று நோய் உடல் முழு­வதும் பர­வி­யுள்­ளதா அல்­லது காலில் மாத்­திரம் பர­வி­யுள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய வேண்டி வந்­தது. இதற்­க­மைய கொழும்பு தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு அதன் மருத்­துவ அறிக்­கையில் முழங்­கா­லுக்கு கீழ் மாத்­திரம் பரவி இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டது.

இதன் பிற்­பாடு புற்று நோயை அழிப்­ப­தற்­கான முதலாம், இரண்டாம், மூன்றாம் கட்ட கீமோ­தெ­ரபி சிகிச்­சைகள் நடந்­தன. இக் காலப்­ப­கு­தியில் இரண்டாம் கட்ட சிகிச்­சை­யின்­போது முழங்­கா­லுடன் இடது காலைக் கழற்ற வேண்டி ஏற்­பட்­டது. மீண்டும் மூன்றாம் கட்ட கீமோ­தெ­ரபி சிகிச்சை ஆரம்­பிக்­கப்­பட்டு 2018 ஆகஸ்ட் மாதத்­துடன் அல்­லாஹ்வின் உத­வி­யாலும் வைத்­தி­யர்­களின் சிறந்த சிகிச்­சை­க­ளாலும் எனக்கு ஏற்­பட்ட புற்று நோய் முற்­றாக அழிக்­கப்­பட்­டது. அல்­ஹம்­து­லில்லாஹ்.

Qசெயற்கை காலுடனான அனுபவம் பற்றி? 

எனது சிகிச்­சையின் இறுதிக் கட்­டத்தின் போது 2018 ஆகஸ்டில் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு விஜயம் செய்த சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­வினால் எனக்கு செயற்கை கால் ஒன்று இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டது. அதனை ஒரு மாதம் பாவித்தேன்.

அதன் பின்னர் ஒரு இலட்­சத்து 70 ஆயிரம் ரூபா­வுக்கு கொழும்பில் புதிய செயற்கை கால் ஒன்றை கொள்­வ­னவு செய்து அத­னையே இன்று வரை பயன்­ப­டுத்தி வரு­கிறேன்.

இந்த செயற்கைக் கால் மூலம் துவிச்­சக்­கர வண்டி,மோட்டார் சைக்கிள் என்­ப­வற்றை செலுத்த முடியும். அத்­தோடு ஐந்து நேர தொழு­கை­களை நிறை­வேற்ற முடியும், நடக்க முடியும், ஓட முடியும், பாய முடியும்.

Qசிகிச்சையின் பின்னர் கல்வியைத் தொடர்கின்றீர்களா?

சிகிச்­சை­களை முடித்த பின்னர் மீண்டும் திஹா­ரிய சர்­வ­தேச பாட­சா­லையில் இணைந்து 40 நாட்­க­ளி­லேயே கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்கு 2018 டிசம்­பரில் ஆங்­கில மொழி மூலம் தோற்­றினேன். இதற்­க­மைய 8 பாடங்­களில் சிறந்த சித்­தி­களைப் பெற்றுக் கொண்டேன். 

பின்னர் உயர் கல்­விக்­காக 2019 ஜன­வ­ரியில் வர­கா­பொல தாருல் ஹஸனாத் அக­ட­மியில் சேர்ந்து ஆங்­கில மொழி மூலத்தில் கல்விப் பொதுத் தரா­தர உயர்­தர வர்த்­தகப் பிரிவில் கல்வி பயின்று வரு­வ­தோடு அதே அக­ட­மியில் AAT கற்கை நெறி­யையும் தொடர்ந்து வரு­கின்றேன்.

Qவிளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள். கால் ஒன்று இல்லாத நிலையிலும் எப்படி உங்களால் விளையாட முடிகிறது?

பாட­சாலை காலத்­தி­லி­ருந்து கிரிக்கெட், உதை­பந்து, ஓட்டம் போன்ற விளை­யாட்­டுக்கள் உட்­பட ஏனைய விளை­யாட்­டுக்­க­ளிலும் பங்­கேற்று வெற்றி பெறு­வதால் எனக்கு அதில் நல்ல ஈடு­பாடிருந்­தது. நான் கல்வி கற்ற பாட­சா­லைகள் மூலம் பல்­வேறு விளை­யாட்டு போட்­டி­க­ளிலும் பங்­கு­பற்றி பதக்­கங்­க­ளையும், சான்­றி­தழ்­க­ளையும் பெற்­றுள்ளேன்.

பின்னர் பாரிய நோய் ஒன்­றுக்கு முகங்­கொ­டுத்து, அதனால் கால் ஒன்றை இழந்­தாலும் கூட விளை­யாட்டின் மீதான எனது ஆர்வம் குன்­றி­வி­ட­வில்லை.
இந்­நி­லை­யில்தான் அண்­மையில் கொழும்பு சுக­த­தாச விளை­யாட்டு அரங்கில் இடம்­பெற்ற தேசிய பரா மெய்­வல்­லுநர் போட்­டியில் (NPAC -National Para Athletics Championships-2019) 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல் போன்ற மூன்று போட்­டி­களில் முத­லிடம் பெற்று மூன்று தங்கப் பதக்­கங்­களை வென்றேன்.

கால் ஒன்று இல்­லையே என்று நான் ஒரு­போதும் கவ­லைப்­ப­டு­வ­தில்லை. மனதில் திட­வு­று­தி­யோடு சவால்­களை வெல்­வ­தற்­கான தைரி­யத்தை அல்லாஹ் எனக்குத் தந்­துள்ளான்.

நான் தற்­போது ரோபோட் இரா­ணு­வத்தின் விஷேட பயிற்சிப் பிரிவில் இணைந்து பயிற்சி பெற்று வரு­வ­தோடு ஊன­முற்­றோ­ருக்­கான (REHAB LANKA SPORTS CLUB) றிஹப் லங்கா விளை­யாட்டுக் கழ­கத்­திலும் அங்­கத்­த­வ­ராக செயற்­பட்டு வரு­கின்றேன்.

தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ள நீங்கள் அடுத்த கட்டமாக சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கு BLADE FOOT எனப்படும் உயர் ரக செயற்கை கால் ஒன்று கொள்வனவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அது பற்றி?

பிளேட் பூட் (BLADE FOOT) செயற்கை கால் இல்லாவிட்டால் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டது. குறித்த செயற்கைக் கால் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு சுமார் 13 இலட்சம் தொடக்கம் 15 இலட்சம் ரூபா செலவாகும். அந்தளவுக்கு என்னிடம் வசதி கிடையாது.

குறித்த செயற்கைக் கால் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு வசதி படைத்தவர்கள் அல்லது அரசாங்கம் உதவி செய்தால் நான் தொடர்ந்தும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வெற்றிகளைப் பெற வாய்ப்பாக அமையும்.

Qபுற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

மனதை எந்த சந்தர்ப்பத்திலும் தளரவிடாது சிகிச்சைகளைத் தொடருங்கள். அதிகமதிகம் இறைவனைப் பிரார்த்தியுங்கள்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.