நிர்வாண நிலையில் பாராளுமன்றம்

0 1,686

ஜனா­தி­பதி வச­மி­ருந்த அதி­கா­ரங்கள் அனைத்தும் 19 ஆவது சீர்­தி­ருத்தம் மூல­மாக நீக்­கப்­பட்ட போதிலும் அந்த அனைத்து வித­மான அதி­கா­ரங்­களும் பிர­தமர் தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வைக்கு வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது ஜனா­தி­பதி சார்ந்த அர­சி­ய­லமைப்பு நீக்­கப்­பட்டு பிதமர் சார்ந்த அர­சி­ய­லமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தாகக் குறிப்­பி­டலாம். ஆனால் இந்த யாப்பின் ஊடாக கிடைக்கும் பொறுப்­புக்­களை சுமப்­ப­தற்குப் போது­மான பல­மில்­லாத நிலை­யி­லேயே இன்­றைய பாரா­ளு­மன்றம் காணப்­ப­டு­கின்­றது. இந்த விடயம் குறித்து வாக்­கா­ளர்­க­ளான பொது­மக்கள் மாத்­தி­ர­மன்றி பாரா­ளு­மன்றம் கூட அறிந்­தி­ராமல் இருப்­பது உண்­மையில் ஒரு துர­திஷ்­ட­வ­ச­மான விட­ய­மாகும்

சட்­ட­வாக்கம், அரச நிதி முகாமை, அரச கரு­மங்கள் தொடர்­பி­லான கண்­கா­னிப்பு என்­பன பாரா­ளு­மன்­றத்­துக்­கு­ரிய பிர­தான பொறுப்­புக்­க­ளாக குறிப்­பி­டலாம். ஆனாலும் சட்­ட­வாக்கம் எனும் பொறுப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­கான இய­லு­மையை முழு­மை­யாகப் போக்கிக் கொண்­டதும் சட்­ட­வாக்கம் தொடர்பில் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­தி­ருக்கும் நிலை­யி­லுள்ள ஒன்­றா­கவே தற்­போ­தைய பாரா­ளு­மன்றம் காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் இவ்­வ­ளவு காலமும் நடை­மு­றை­யி­லி­ருந்து வந்த உள்­ளூ­ராட்சி முறை­மையை மாற்றிப் புதி­ய­தொரு சட்­டத்­தினை உரு­வாக்கும் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டதன் விளை­வாக ஒட்­டு­மொத்த உள்­ளூ­ராட்சி முறையும் நகைப்­புக்­கு­ரிய விட­ய­மாக மாறிய நிலையில் உள்­ளது. அது­மாத்­தி­ர­மன்றி, உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் சம்­பளத் தொகை­யா­னது இது­வ­ரை­கா­லமும் வழங்­கப்­பட்ட தொகை­யி­னை­விட இரு­ம­டங்­கு­க­ளாக அதி­க­ரித்து நாட்­டுக்குப் பாரி­ய­தொரு செல­வி­னையும் உரு­வாக்­கு­­வ­தாக அமைந்­தது. மாகாண சபைத் தேர்தல் தொடர்­பான பழைய சட்­டங்­களை நீக்கி புதிய சட்­ட­திட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு மேற்­கொண்ட முயற்­சி­களின் பிர­தி­ப­ல­னாக பழைய சட்­டமும் செய­லி­ழந்து புதிய சட்­டமும் உரு­வாக்­கப்­ப­டாத நிலையில் மாகாண சபைத் தேர்­த­லையே நடத்­த­மு­டி­யாத நிலைக்கு உரு­வா­க்கி­விட்­டனர். 19ஆவது சீர்­தி­ருத்­தத்தின் சட்­ட­வாக்கம் ஊடாக பாரா­ளு­மன்றம் மேற்­கொண்­டி­ருக்கும் முட்­டாள்­த­ன­மான செயற்­பா­டு­க­ளுக்கு சிறந்த உதா­ர­ணங்­க­ளாக மேற்­படி விட­யங்­களைக் குறிப்­பிட முடியும்.

நிதி முகாமை மற்றும் பரி­சோ­தனை

பொது நிதியைக் கையாள்தல் எனும் விட­யத்தில் இன்­றைய பாரா­ளு­மன்­ற­மா­னது வெற்­றி­ய­டை­ய­வில்லை என்­ப­தா­கவே குறிப்­பிட வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இலங்கை தற்­போது பொரு­ளா­தார ரீதியில் வங்­கு­ரோத்து நிலையின் வாயிலில் இருந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. வெளி­நாட்டுக் கடன்கள் ஊடாக ஆரம்­பிக்­கப்­பட்ட எந்­த­வி­த­மான அபி­வி­ருத்தித் திட்­டங்கள் மூல­மா­க­வும, பெற்­றுக்­கொண்ட கடன்­களை திரும்பச் செலுத்­து­வ­தற்குப் போது­மான வரு­மா­னங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. இலங்கை தற்­போது பொரு­ளா­தார ரீதியில் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலை­யிலும் அரசு தேவை­யற்ற விட­யங்­க­ளுக்­காக ஊதா­ரித்­த­ன­மா­கவே செல­விட்டு வரு­கின்­றது. இது­வ­ரையில் பூர­ணப்­ப­டுத்த முடி­யாத நிலையில் இருக்கும் அர­சியல் யாப்­பிற்­காக மாத்­திரம் 136,000 மில்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டி­ருப்­ப­தாக கலா­நிதி ஜீ.எல்.பீரிஸ் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார். தேர்தல் அண்­மிக்கும் நிலையில் கம்­பெ­ர­லிய எனும் நிகழ்ச்சித் திட்­டத்­திற்­காக பாரி­ய­ள­வி­லான நிதி செல­வி­டப்­ப­டு­கின்­றது. அது மாத்­தி­ர­மன்றி வச­தி­யான மதஸ்­த­லங்­க­ளுக்கு கோடிக்­க­ணக்­கான நிதி உத­விகள் வழங்­கப்­ப­டு­வ­தையும் காண­மு­டி­கின்­றது.

அரச கரு­மங்­களை கண்­காணித்தல் என்­பதில் கூட பாரா­ளு­மன்றம் வெற்­றி­கண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. அரச நிறு­வ­னங்கள் வினைத்­தி­ற­னற்று ஊழல் நிறைந்­த­தாகக் காணப்­ப­டு­கின்­றன. இந்த நிலை­யி­லி­ருந்து அரச நிறு­வ­னங்­களை மீட்­ப­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. இலங்­கையின் குப்பைப் பிரச்­சி­னையை இதற்­கான சிறந்த உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம். குப்பை மேடு சரிந்து வீழந்­ததில் பல உயிர்ச்­சே­தங்­க­ளையும் பொருட் சேதங்­க­ளையும் சந்­தித்த பின்­ன­ரும்­கூட இலங்­கையின் குப்பைப் பிரச்­சி­னை­யா­னது தீர்க்­க­மு­டி­யாத பிரச்­சி­னை­க­யா­கவே இன்­ற­ள­விலும் காணப்­ப­டு­கின்­றது. மறு­புறும் நாட்டின் வரி வரு­மானம் சேக­ரிக்கும் அரச நிறு­வ­னங்கள் ஊழல் நிறைந்­த­தாக காணப்­ப­டு­கி­ன்­றன. அர­சுக்கு வர­வேண்­டிய வரி வரு­மா­னங்­களில் 25 வீத­மேனும் அர­சுக்கு கிடைப்­ப­தில்லை. இது­கு­றித்து அர­சாங்­கமும் அறி­யா­ம­லில்லை. இந்த தவறை சீர்­செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாது தொட­ராக ஏற்­படும் வரவு செலவுக் குறை­யினை நிரப்பிக் கொள்­வ­தற்­காக பொது­மக்களின் நுகர்வுப் பொருட்­கள்­மீது அள­வு­க­டந்து வரி அற­விடும் நடை­மு­றை­யினை அர­சாங்கம் பின்­பற்றி வரு­கின்­றது. அர­சாங்­கத்தின் வினைத்­திறன் இன்­மையின் ஊடாக ஏற்­படும் பாத­கங்கள் பொது­மக்­களின் முது­குகள் மீதே சுமத்­தப்­ப­டு­கின்­றன. சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் எதிர்க்­கட்­சியில் இருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ஆளும் கட்­சி­யுடன் இணைத்­துக்­கொள்ளும் முறை­யொன்று நீதி­மன்­றத்தின் உத­வி­யுடன் உரு­வாக்­கப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்பை மீறிய அந்த தவறை சரி­செய்­வதை விடுத்து அந்தப் பிரச்­சினை குறித்து கலந்­து­ரை­யா­டல்கள் கூட இது­வ­ரையில் மேற்­கொள்­ளப்­ட­வில்லை.

சரி­வ­டைவின் ஆரம்பம்

அரச தொழில்­க­ளுக்­காக ஆளும் கட்­சியின் தொகு­தி­க­ளுக்­கான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிபா­ரி­சுகள் அவ­சியம் என்ற நிலை 1960/-64 ஆண்­டு­களில் சிறி­மாவோ பண்­டா­ர­னா­யக்க ஆட்சிக் காலத்தில் ஆரம்­ப­மா­னது. அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள் எனும் உயர் பத­விகள் முதல் குப்பை அள்ளும் தொழி­லாளர் வரை­யான அனைத்துப் பத­வி­க­ளுக்கும் மற்றும் காணி, ஏற்­று­மதி போன்ற அனைத்­து­வி­த­மான அனு­மதிப் பத்­தி­ரங்­க­ளுக்கும் அர­சில்­வா­தி­களின் சிபார்­சுகள் இருப்­பது அவ­சியம் என்ற நடை­முறை இந்தக் காலத்தில் உரு­வாக்­கப்­பட்­டது. அதன் பின்னர் ஆட்­சிக்­கு­வந்த ஐக்­கிய தேசியக் கட்­சி­கூட இந்த மோச­மான நடை­மு­றையில்; மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தாது அதனை அப்­ப­டியே பின்­பற்­றியும் வந்­தது.

1970 ஆம் ஆண்­டா­கும்­போது அரச தொழில் பெற்றுக் கொள்­வ­தற்­காக மாத்­தி­ர­மன்றி கிடைத்த தொழில்­களை பாது­காத்­துக்­கொள்­வ­தற்­கா­கவும் அர­சி­யல்­வா­தி­களின் சிபா­ரிசு அவ­சியம் என்ற நிலை உரு­வா­னது. ஆசி­ரி­யர்கள் மற்றும் அரச ஊழி­யர்­களை அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக இட­மாற்றம் செய்யும் நட­வ­டிக்­கைகள் இந்தக் காலப்­ப­கு­தியில் பர­வ­லாக இடம்­பெற்­றன. அரச காணி கட்­டுப்­பாட்டுச் சட்­டத்­திற்­க­மைய வெளி­நாட்டு ஏஜென்­சி­களின் கீழி­ருந்த காணிகள் அனைத்­தையும் கூட்­டணி அரசு சுவீ­க­ரித்து அவற்றை அரச காணி­க­ளாக மாற்­றி­ய­போது, ஆளும் கட்­சியின் பிர­தேச அர­சி­யல்­வா­தி­களே அந்­தந்தப் பிர­தே­சங்­களில் அமைந்­தி­ருந்த அவ்­வா­றான காணி­களின் உத்­தி­யோ­கப்­பற்­றற்ற நிர்­வா­கி­க­ளா­கினர். அர­சி­யல்­வா­தி­களின் ஆசிர்­வாதம் இல்­லாமல் எதை­யுமே செய்­ய­மு­டி­யாத அநா­த­ர­வான நிலைக்கு பொது­மக்கள் ஆளாகும் நிலை இந்த கொடு­மை­யான முறை மூல­மாக உரு­வா­கி­யி­ருந்­தது. இந்த இக்­கட்­டான நிலை­யாது ஆட்­சிக்கு வரத்­தக்க இரண்டு பிர­தான கட்­சி­களின் ஒன்றைத் தெரிவு செய்­தாலே ஒழிய நிம்­ம­தி­யாக வாழ­மு­டி­யாது என்ற நிலைக்கு மக்­களை தள்­ளி­விட்­டது. இந்த முறை­யா­னது அர­சி­யல்­வா­தியின் மக்­களை நோக்­கிய செயற்­பா­டு­களில் கூட மாற்­றங்கள் ஏற்­படக் கார­ண­மாக அமைந்­தது.

சரி­வ­டைவு தீவி­ர­ம­டைதல்

1978 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி முறை ஆரம்­ப­மா­னது முதல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற பத­வியில் ஏற்­பட்ட சரிவு தீவி­ர­ம­டைய ஆரம்­பித்­தது. அதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு இருந்த அர­சு­ரிமை நீக்­கப்­பட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியின் விருப்­பத்­திற்­கேற்ப ஆட்டம் போடும் முட்­டாள்­க­ளாக ஆக்­கப்­பட்­டனர். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதி­ருப்­தி­ய­டை­வ­தற்கு மேற்­படி நிலை­மைகள் கார­ண­மாக அமைந்­ததால் அவர்­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக வெளித் தேற்­றத்தில் மாத்­திரம் கம்­பீ­ர­மா­னதும் சொகு­சா­ன­து­மான வச­தி­க­ளுடன் கூடிய புதிய பாரா­ளு­மன்றம் அமைக்­கப்­பட்டு அரச சொத்­துக்­களை கொள்­ளை­ய­டிக்கும் அதி­கா­ரங்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

ஆறில் ஐந்து பெரும்­பான்மை பலம் ஆளும் கட்சி வச­மி­ருந்த அன்­றைய பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட் காலத்­தினை அதி­க­ரிப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­த­மா­னது பாரா­ளு­மன்றம் அழுகிப் போவ­தற்­கான செயன்­மு­றையில் முக்­கி­ய­மா­ன­தொரு கட்­ட­மாகக் குறிப்­பி­டலாம். அந்த சந்­தர்ப்­பத்தில் ஆளும் கட்­சியின் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டமும் திக­தி­யி­டப்­ப­டாத பத­வி­வி­லகல் கடி­த­மொன்றை ஜனா­தி­பதி கோரி­யி­ருந்­தது இந்த பாத­க­மான செயற்­பாட்டின் மற்­று­மொரு அங்­க­மாக குறிப்­பி­டலாம். அதன் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது முட்டாள் தனத்­தினை வெளிக்­காட்­டி­ய­வர்­க­ளாக திக­தி­யி­டப்­ப­டாத விலகல் கடி­தங்­களை ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைத்­தனர். ஒன்­றுடன் ஒன்று பின்­னிப்­பி­ணைந்த இத்­த­கைய செயற்­பா­டுகள் மூல­மாக பாரா­ளு­மன்­றத்­திற்­கு­ரிய சட்­ட­பூர்­வ­மான நிலை சிதை­வ­டைந்து அழுகல் நிலை தீவி­ர­ம­டை­யத்­து­வங்­கி­யது.

பாரா­ளு­மன்­றத்தின் சுய­நலம்

பாரா­ளு­மன்­றத்தின் அர­சு­ரிமை நீக்­கப்­பட்ட பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிந்­த­னையில் கூட மாற்­றங்கள் ஏற்­ப­டத்­து­வங்­கின. மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக அவர்கள் மக்­க­ளுக்கு செய்­ய­வேண்­டிய கட­மைகள் குறித்து கவனம் செலுத்­தாது நாடு குறித்தும் கவனம் செலுத்­தாது தனது அபி­லா­சை­களை மாத்­தி­ரமே கருத்­திற்­கொண்டு முறை­கே­டாகப் பொரு­ளீட்டிக் கொள்­ளு­ம­ளவு பேராசை பிடித்­த­வர்­க­ளாக மாறி­விட்­டனர். இவர்­க­ளது இத்­த­கைய ஈடு­பா­டு­களை ஜனா­தி­ப­தி­கள்­கூட ஆத­ரித்து ஊக்­கு­விக்­கவும் செய்­தனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தமது போக்­கு­வ­ரத்­து­க­ளுக்­காக பொதுப் போக்­கு­வ­ரத்து சேவை­க­ளுக்கு ஒப்­பான கொடுப்­ப­னவு வழங்கும் முறையே உலக நாடு­களில் காணப்­ப­டு­கின்­றன. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் போக்­கு­வ­ரத்துத் தேவை­க­ளுக்­காக தீர்­வை­யற்ற வாக­னமும் அந்த வாக­னங்­க­ளுக்­கான எரி­பொ­ருள் செல­வு­களும் வழங்கும் நட­வ­டிக்கை எந்த உலக நாடு­க­ளிலும் காணக்­கி­டைப்­ப­தில்லை. தீர்­வை­யற்ற வாக­னங்­களை விற்­பனை செய்­வது அல்­லது அதன் உரி­மையை வேறு ஒரு­வ­ருக்கு வழங்­கு­வது சுங்க சட்­டங்­க­ளுக்கு அமைய குற்­ற­மாகக் கரு­தப்­படல் வேண்டும். இந்த சட்­ட­மா­னது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராகப் பிர­யோ­கிக்­கப்­ப­டா­த­வாறு ஆரம்ப காலங்­களில் ஆட்­சி­யி­லி­ருந்த ஜனா­தி­ப­திகள் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். அதன் பின்னர் தீர்­வை­யற்ற வாக­னங்­களை விற்­பனை செய்து பாரி­ய­ள­வி­லான இலாபம் உழைக்க முடி­யு­மான நிலை­மை­களை ஏற்­ப­டுத்­தியும் கொடுத்­தனர். தற்­போ­தைய நிலையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது காரி­யா­ல­யங்­களை நடாத்திச் செல்­வ­தற்­காக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்­ப­னவு கூட வழங்­கப்­ப­டு­கின்­றது. அந்த பணத்தின் ஊடாக காரி­யாலயம் ஒன்றை நடாத்­து­வது அவர்­க­ளுக்கு கட்­டா­ய­மா­ன­தல்ல. காரி­யா­ல­யங்கள் நடாத்­தாத பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தான் விரும்­பு­மி­டத்து நடத்­தாத காரி­யா­ல­யத்­திற்­காக ஒரு இலட்சம் ரூபா கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொள்ள முடியும். அரச நிதி தொடர்­பாக இயற்­றப்­பட்­டுள்ள சட்­டங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மாத்­திரம் விதி­வி­லக்­கா­னதா?

அமைச்­சர்­க­ளது அலு­வல்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக அரச அலு­வலர் குழா­மொன்று வழங்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் அவர்­க­ளுக்­காக பிரத்­தியே அலு­வ­லர்­களை அரச செல­வி­லேயேக வைத்­தி­ருக்கும் உரி­மையும் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­ன­்றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளது மனை­விக்கும் பிள்­ளை­க­ளுக்கும் வரப்­பி­ர­சா­தங்கள் அடங்­கிய தொழி­லொன்றைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட முறை­கே­டான செயற்­பா­டாக இதனை அடை­யா­ளப்­ப­டுத்­தலாம். அமைச்­சர்­களின் பிரத்­தி­யேக அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­காக ஒரு வருட சம்­பளம் மற்றும் அவர்­க­ளுக்­கான எரி­பொருள் கொடுப்­ப­ன­வுகள் என்­பன ஒரு பில்­லியன் ரூபா என்ற அளவில் அமை­யலாம். அமைச்­சர்­க­ளுக்­காக அரச அலு­வலர் குழா­மொன்று வழங்­கப்­பட்ட நிலையில் பிரத்­தியேக காரி­யா­ல­யங்­க­ளுக்­காக அரச நிதி­யி­லி­ருந்து பாரிய நிதி­யினை செல­வி­டு­வது எந்த வகையில் நியா­ய­மா­ன­தாக அமைய முடியும்?

உத்­தி­யோ­க­பூர்வ இல்­லங்­களில் வசிக்கும் அமைச்­சர்கள் குறித்த உத்­தி­யே­ா கபூர்வ இல்­லங்­களில் இருக்கும் அனை­வ­ரி­னதும் மது­பானச் செல­வுகள், உண­வுக்­கான செல­வுகள், உப­சாரச் செல­வுகள் என்­ப­வற்­றையும் அர­சி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ளும் நடை­மு­றை­யொன்றை அமைத்­துக்­கொண்­டுள்­ள­தாக அறியக் கிடைக்­கின்­றன. அது எந்த அளவில் உண்­மை­யா­னது என்­பது குறித்து எனக்குத் தெரி­ய­வில்லை. இருந்­த­போ­திலும் இதன் உண்­மை­நிலை குறித்து அதி­கா­ரிகள் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இந்த விடயம் உண்­மை­யாயின் இது ஒரு மோச­மான நடை­மு­றை­யா­கவே கரு­தப்­படும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் குற்­ற­வா­ளியும்

புரட்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வந்த காலப்­ப­கு­தியில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தனிப்­பட்ட பாது­காப்­பிற்­காக பாது­காப்புப் படை­யி­னரை வைத்­தி­ருப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. குறித்த பணியில் ஈடு­படும் பாது­காப்பு உத்­தி­யோகத்­தர்­க­ளுக்கு ஆயு­தங்­களும் அவற்றை இயக்­கு­வ­தற்­கான பயற்­சியும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. உண்­மை­யி­லேயே ஜே.வி.பியின் இரண்­டா­வது கல­வரக் காலங்­களில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மரண அச்­சு­றுத்தல் இருந்­தது என்ற போதிலும் தனிப்­பட்ட பாது­காப்பு வழங்­கப்­பட்­ட­மை­யா­னது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒரு­வித முரட்டுத் தோற்றம் உரு­வாகக் கார­ண­மாக அமைந்­தது.

தனது பிர­தே­சத்­தி­லி­ருந்த பிர­பல்­ய­மான குற்­ற­வா­ளி­களே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தனிப்­பட்ட பாது­பாப்புப் படைக்­காக நிய­மிக்­கப்­பட்­டார்கள். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பாது­காப்புப் படையில் அங்கம் வகிக்கும் அந்த பிர­பல்­ய­மான குற்­ற­வா­ளி­க­ளுக்கே நவீ­ன­ரக ஆயு­தங்­களும் அவற்றை இயக்­கு­வ­தற்­கான பயிற்­சியும் வழங்­கப்­பட்­டன. இதன் விளைவாக குற்­ற­வா­ளி­களின் தங்­கு­மி­டங்­க­ளா­கவும் இன்னும் சில குற்­ற­வா­ளி­களின் சித்­தி­ர­வதைக் கூடங்­க­ளா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் வீடுகள் மாறத்­து­வங்­கின. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பாது­காப்­பினைக் காரணம் காட்டி மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன் தனது எதி­ரி­களை மாத்­தி­ர­மன்றி அர­சியல் ரீதி­யான எதி­ரி­க­ளையும் தீர்த்­துக்­கட்­டு­வ­தற்­காக இதனை ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர். சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கொலை நட­வ­டிக்­கை­களில் நேர­டி­யா­கவே தன்­னையும் ஈடு­ப­டுத்­திக்­கொண்­டனர். சில­போது அவர்­களால் அல்­லது அவர்­க­ளது கைக­ளா­லேயே மக்கள் கொல்­லப்­பட்­டனர். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பாது­காப்பு அவர்­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பாது­காப்புப் படையின் வசமே இருந்­த­மை­யினால் பாது­காப்புப் படையில் அங்கம் வகிக்கும் குற்­ற­வா­ளிகள் புரி­கின்ற குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் நிபந்­த­னை­களே இல்­லாத அடிப்­ப­டையில் குற்­ற­வா­ளி­களைப் பாது­காக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஏற்­பட்­டது. இந்த அன்­யோன்ய தொடர்பு கார­ண­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் குற்­ற­வா­ளி­க­ளுக்கும் இடையே பரஸ்­பரம் புரிந்­து­ணர்வு என்­ப­வற்­றுடன் கூடிய உற­வேற்­பட்­டது.

இரண்­டா­வது புரட்­சியின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் எல்.ரி.ரி.ஈ. கல­வரம் இருந்து வந்­த­மை­யினால் இந்தப் பாது­காப்பு நடை­மு­றை­யா­னது தொட­ராக செயற்­ப­டுத்­தப்­பட்­டது. இந்­நிலை கூட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தன்­மை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், குற்­ற­வா­ளிகள் என்­போரை வெவ்­வே­றாக அடை­யாளம் காண முடி­யாத அள­விற்கு அவர்­க­ளது நடை­யுடை பாவனை என்­ப­வற்­றில்­கூட ஒரே­வி­த­மான தோற்றம் ஏற்­ப­டத்­து­வங்­கி­யது. மொத்­தத்தில் ஒரே­வி­த­மாக உண்டு, உடை அணி­கின்ற இரு­வ­ராக மாறி­விட்­டனர்.

குற்­ற­வா­ளி­க­ளு­ட­னான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் இத்­த­கைய உறவு சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் நடத்­தை­யில்­கூட மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. குற்றச் செயல்­களில் நேர­டி­யாக ஈடு­படும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் போதைப்­பொருள் வியா­பா­ரி­க­ளிடம் கப்பம் பெறும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் என உரு­வா­வ­தற்கு இது கார­ண­மாக அமைந்­தது.

நாட்­டுக்கு அவ­சி­யா­மன மாற்றம்

பார­து­ர­மான குற்­றங்கள் புரியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தனை தடுக்­கின்ற விட­யங்கள் ஏரா­ள­மாகக் காணப்­ப­டு­வ­துடன், அவர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் விரைவில் முடி­வுக்கு வராமல் இழு­ப­டு­கின்ற நிலையும் காணப்­ப­டு­கின்­றது. அந்த அடிப்­ப­டையில் பாரா­ளு­ம­னற உறுப்­பி­னர்­களில் சிறைப்­ப­டுத்­தப்­பட்ட ஒரே ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக துமிந்த சில்­வாவை மாத்­தி­ரமே குறிப்­பி­ட­மு­டி­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­விடம் 29 உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக விசா­ர­னைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­துடன், பல்­வே­று­பட்ட குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றங்­களில் விசா­ரிக்­கப்­படும் வழங்­கு­களின் எண்­ணிக்கை 50 இலும் அதி­க­மா­கவே இருப்­ப­தாகத் தெரி­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் அதி­க­மானோர் தமது பெயரில் அல்­லது வேறு ஒரு­வரின் பெயரில் அர­சுடன் வியா­பா­ரத்­தி­லீ­டு­பட்டு வரு­கின்­றனர். அரச காணி­களை வைத்­தி­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதி­க­ள­விலே இருக்­கத்தான் செய்­கின்­றனர். நேர­டி­யாக அல்­லது வேறு­வி­த­மாக மது­பானத் தயா­ரிப்பு நிலை­யங்­களை நடாத்­து­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அதி­க­ளவில் இருக்­கின்­றனர். இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­தி­னுள்ளும் சிறி­ய­ளவில் பேசப்­ப­டு­வ­தாக அறியக் கிடைக்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­துடன் வியா­பா­ரத்தில் ஈடு­ப­டு­வ­தா­னது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி பறிக்­கப்­பட வேண்­டி­யதும், பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­ன­ராக அமர்ந்­தி­ருந்த காலப்­ப­குதி கணக்­கி­டப்­பட்டு அந்த நாட்­களின் எண்­ணிக்­கைக்­கேற்ப தண்­டப்­பணம் அற­வி­டப்­ப­டக்­கூ­டி­யதும், குறிதத் கால­மொன்­றிற்­காக குடி­யு­ரிமை பறிக்­கப்­பட வேண்­டி­ய­து­மான மிகவும் பார­தூ­ர­மா­ன­தொரு குற்­ற­மாக கரு­தப்­பட வேண்டும். இந்தக் குற்­றங்கள் மறை­மு­க­மா­க­வன்றி வெள்­ளிப்­ப­டை­யா­கவே செய்­யப்­பட்டு வந்த போதிலும் பாராளுமன்றம் இதுகுறித்து பாராமுகமாகவே இருக்கும் வகையிலானதொரு நடைமுறையைப் பின்பற்றி வருகின்றதேயன்றி, ஒருபோதும் இதுகுறித்து கவனம் செலுத்தி இந்த நிலையை சரிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

அரசாங்கத்தினால் நிர்வகிக்கின்ற பிரதான நிறுவனமாகிய பாராளுமன்றத் திலேயே உச்ச அளவில் ஊழல் இடம் பெறுவதாயின் அடுத்த நிறுவனங்களில் நிலவுகின்ற ஊழல்களை எவ்வாறுதான் கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும்?அரசாங்கத்துடன் வியாபாரம் செய்த குற்றத்திற்காக காலி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்பர்ட் சில்வாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீதிமன்றத்தினால் பறிக்கப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட எல்பர்ட் சில்வாலை கம்புறுபிடிய தொகுதிக்கு சிட் உறுப்பினராக நியமித்தார். இந்த சம்பவம் நடந்து 20 வருடங்களின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தனது மாமனார் செய்த அதே செயலை செய்யலானார். நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட ராஜித சேனாரத்னவை தேசியப் பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்பினராக்கினார். அரசாங்கத்துடன் வியாபாரங்களை மேற்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசியல் தலைவர்கள் பாதுகாக்கின்றனர் என்பதல்லவா இதன் ஊடாக தெளிவாகின்றது?

நாட்டின் பிரதான அரசியல் நிறுவன முறையாக கருதப்பட முடியுமான பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற முறைமைகள் என்பன கடுமையாக பழுதடைந்திருக்கும் நிலையில் இந்தப் பாதகமான நிலையை நெறிப்படுத்துவதற்காக பாராளுமன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் அதனுடன் பாராளுமன்றத்தின் இந்த விவகாரத்தை பாரதூரமான நிலையாக கருதி செயற்படுவதற்காக நீதிமன்றம்கூட முன்வராவிட்டால் இந்த மோசமான நிலையை சீர்செய்வதற்கான முறைதான் என்னவாக இருக்கும்?

அரசியல்வாதிகள் மாத்திரமன்றி நாட்டு மக்கள்கூட அவசியமான மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது தேர்தல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் துரதிஷ்டமான நிலையை எமது நாடு எதிர்கொண்டிருக்கின்றது. குப்பை மேடுகளுக்கு மத்தியில் வாழும் மனிதன் அந்த குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றத்தினைத் தாங்கிக் கொள்வதற்காக தன்னை பழக்கப்படுத்திக் கொண்டு வாழ்வது போன்று நாட்டில் உருவாகியிருக்கும் அரசில் மாசடைவுகளைப் பொறுத்துக்கொண்டு வாழ்வதற்கு நாட்டின் பொதுமக்கள் பழகிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. நாட்டுக்குத் தற்போது தேவைப்படுவது சிறியதொரு அரசியல் மாற்றமல்ல, மாறாக சாக்கடையாக மாறியிருக்கும் அரசியல் முறையில் ஒரு மாற்றத்தையே நாடு இன்று வேண்டிநிற்கின்றது. அது தானாக வந்து சேர்ந்துவிடப்போவதில்லை மக்களாலேயே அது வெற்றிகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

விக்டர் ஐவன்

தமிழில்: ராஃபி சரிப்தீன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.