சவூதி: எண்ணெய் உற்­பத்­தியை தற்­கா­லி­க­மாக நிறுத்த தீர்­மானம்

0 698

ஆளில்லா விமானத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சவூதி அரம்கோ நிறு­வ­னத்தின் இரண்டு எண்ணெய் வயல்­களில் எண்ணெய் உற்­பத்தி தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­ப­டு­வ­தாக சவூதி அரே­பியா அறி­வித்­துள்­ளது.

சவூதி அரே­பிய அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான பெரும் எண்ணெய் நிறு­வ­ன­மான சவூதி அரம்­கோ­வினால் நடத்­தப்­படும் இரு எண்ணெய் வயல்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட ஆளில்லா விமானத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து எண்ணெய் உற்­பத்தி தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­ப­டு­வ­தாக சவூதி அரே­பிய சக்­தி­வள அமைச்சர் இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான் நேற்று அறி­வித்தார்.

இத்­தாக்­கு­த­லினால் நாளொன்­றிற்கு 2 பில்­லியன் எனற அள­வி­லான இணைந்த பெற்­றோ­லிய மற்றும் எரி­வாயு உற்­பத்தி நிறு­வ­னத்தின் எண்ணெய் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். இதன் கார­ண­மாக எதேன் மற்றம் இயற்கை எரி­வாயு என்­ப­வற்றின் விநி­யோகம் 50 வீதத்தால் குறை­வ­டைந்­துள்­ளது.

உள்ளூர் சந்­தை­களில் எரி­பொ­ரு­ளுக்கு எவ்­வித தட்­டுப்­பாடும் இல்லை எனவும் அரம்கோ நிறு­வனம் தனது கையி­ருப்­பி­லி­ருந்து விநி­யோ­கத்தை மேற்­கொள்ளும் அதே­வேளை சேத மதிப்­பீ­டு­க­ளையும் செய்­து­வ­ரு­கின்­றது.கின்றது.

எம்.ஐ.அப்துல் நஸார்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.