முதன்முறையாக அல்-குர்ஆனை வாசித்த பின்னர் என்னை அறியாமலேயே எனது வாழ்நாளில் நான் முஸ்லிமாக வாழ்ந்திருக்கின்றேன் என்பதை உணர்ந்து கொண்டேன் என ஐரிஷ் பாடகியும் பாடலாசிரியையுமான சினீட் ஓ கோணர் தெரிவித்ததாக ‘ஐரிஷ் டைம்ஸ்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டது.
‘மதமாற்றம்’ என்ற சொல், நீங்கள் அல்-குர்ஆனைப் படித்தால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு முஸ்லிமாக இருப்பதை உணர்வீர்கள். அதை நீங்கள் உணரவில்லை. இதுதான் எனக்கு நேர்ந்தது என வெள்ளிக்கிழமை இரவு நேர ‘லேட் லேட்’ நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
எனக்கு 52 வயது. நான் தற்போதிருக்கும் வித்தியாசமான அயர்லாந்தில் வளர்ந்தேன். மதரீதியாகப் பேசினால் அதனை ஒடுக்கும் ஒரு நாடு. இங்கிருக்கும் அனைவருமே ஏதோவொரு கவலையுடனேயே இருக்கின்றனர். கடவுள் என்ற விடயத்தில் அவர்கள் எவரும் மகிழ்ச்சியடையவில்லை யென அவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஐரிஷ் பாடகியும் பாடலாசிரியையுமான இவர் இஸ்லாத்திற்காக கிறிஸ்தவ மதத்தைக் கைவிடுவதாகவும் தனது பெயரை ஷுஹதா டாவிட் என மாற்றிக்கொண்டுள்ளதாகவும் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார்.
சிறுபராயத்தில் வேத நூல்களைப் படித்ததாகவும், அதன் பின்னர் ஏனைய மத நூல்களையும் வாசித்ததாகத் தெரிவிக்கும் அவர், இஸ்லாத்தைப் பற்றிய முற்கற்பிதம் காரணமாக இஸ்லாத்திலிருந்து விலகியே இருந்தார்.
பின்னரே நான் எனது உண்மையான சமயத்தில் இருப்பதை உணர்ந்தேன். எனது வாழ்நாளில் நான் முஸ்லிமாக வாழ்ந்திருக்கின்றேன். ஆனால் நான் அதனை உணரவில்லை. என்பதை உணர்ந்துகொண்டேன்.
உங்களுக்கு தற்போது 52 வயதாகிறது, நீங்கள் வாழ்க்கையில் மகிழ்வுடன் இருக்கிறீர்களா என அவரிடம் கேட்கப்பட்டபோது, எனக்கு தற்போது 17 வயதாக இருப்பதுபொலவே உணர்கின்றேன் என அப் பிரபல பாடகி தெரிவித்தார்.
எனக்கு வயது அதிகரிக்கும் அனுபவம் என்பது எனது உடல் முதிர்வதாகும். நான் இளமையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
நான் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதைக்கண்டு மகிழ்ச்சியடையும் ஏராளமான மக்களிடமிருந்து பலத்த ஆதரவு தனக்குக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிவ் ஆய்வு மத்திய நிலையத்தின் உலகில் சமயம் மற்றும் கல்வி தொடர்பான 2016 ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் அயர்லாந்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுள் 2,000 பேர் வைத்தியர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டு புள்ளிவிபரங்களின் பிரகாரம் 12,000 பாடசாலை செல்லும் வயதுள்ள சிறுவர்கள் உள்ளடங்கலாக 49,204 முஸ்லிம்கள் இருக்கின்றனர். 2006 ஆம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையின் 51 வீத அதிகரிப்பே மேற்படி எண்ணிக்கையாகும்.
vidivelli